தனுசு ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் மகிழ்ச்சியான இனிமை தரும் வளமான மாதமாக இருக்கும். இந்த மாத ஆரம்பத்தில் விஷயங்கள் அனைத்தும் மிக மெதுவாக நகர்ந்தாலும் இந்த மாத மத்தியில் அவை சீராகி விடும். மாத மத்திக்குப் பிறகு நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.அதிர்ஷ்டம் வெற்றி எனக் கொண்டாடுவீர்கள். வெளிநாட்டு தொடர்பு அல்லது வெளி நாட்டில் வேலை செய்வதன் மூலம் சொத்து சேரும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை என இரண்டிலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் வருமானம் உயரும். சேமிப்பும் செய்வீர்கள். நீங்கள் வெளியிடங்களுக்கு பயணங்கள் மேற்கொள்வீர்கள். பயணங்கள் மூலம் ஆதாயம் காண்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் தரம் இந்த மாதம் உயரும். உங்கள் அந்தஸ்து பெருகும்.