Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW

தனுசு ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022 (Dhanusu Rasi Guru Peyarchi Palangal Tamil 2021 to 2022)

September 28, 2021 | Total Views : 692
Zoom In Zoom Out Print

தனுசு ராசி குரு பெயர்ச்சி 2021 பொதுப்பலன்கள்:

வருட கிரகம் என்று கூறப்படும் கிரகங்களில் குரு தனிச்சிறப்பு வாய்ந்த கிரகம் ஆகும். ஒவ்வொரு கோளுக்கும் ஒரு சிறப்பு இருக்கும். அந்த வகையில் குரு கிரகம் பூரண சுப கிரகம் என்றும் சாத்வீக கிரகம் என்றும் கூறப்படும். குரு பகவான் நவம்பர் 21, 2021, ஞாயிற்றுக் கிழமை அன்று மதியம் 02:06 இந்திய நேரப்படி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். கும்ப ராசியானது தனுசு ராசிக்கு முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீடாக அமைவதால், எல்லா முயற்சிகளிலும் வெற்றியையும், சொத்துக்கள் சேர்க்கையுடன் சேர்த்து இட மாற்றத்தையும் தருவதாக இந்த குரு பெயர்ச்சி 2021 அமையப்போகிறது. கோள்சார குருவானவர் மூன்றாம் பாவத்தில் நின்று ஐந்தாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக லாபஸ்தானத்தையும் பார்வையிடப்போகிறார். இந்த குருப்பெயர்ச்சியானது தனுசு ராசியைச் சார்ந்தவர்களுக்கு, தனது ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள உகந்ததாகவும், திருமணத்தை எதிர் நோக்கியுள்ளவர்களுக்கு திருமணத்தையும், வீடு, வாகனம், நிலம் போன்ற சொத்துக்கள் சேர்க்கையையும், குழந்தை பிறப்பு போன்ற சுப நிகழ்வுகளையும் ஏற்படுத்தி கொடுக்கும் விதமாக  அமையப்போகிறது.   

குரு பகவானின் ஆசிகளை பெறுவதற்கு இப்போது முன்பதிவு செய்து கொள்ளுங்கள்

குடும்பம்:

குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். வீட்டில் திருமணம், வளைகாப்பு போன்ற சுப நிகழ்வுகள் காரணமாக வீடு கலகலப்பாக இருக்கும்  வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் உங்கள் பொறுப்புகள் அதிகரிக்கும். மூத்த மற்றும் இளைய சகோதர சகோதரிகளுடனான உறவுகள் பலப்படும்.  நல்ல மனிதர்களின் நட்பு கிட்டும். உங்கள் நட்பு வட்டாரம் விரிவடையும். அதன் மூலம் ஆதாயங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். தாயின் உடல் நலனில் அக்கறை தேவை. குழந்தைகளுடனான உறவு சிறப்பாக இருக்கும். 

குடும்ப உறவு மேம்பட ராகு பூஜை

ஆரோக்கியம்:

இந்தப் பெயர்ச்சியில் உங்கள் ஆரோக்கியம் பற்றிய கவலை இல்லை என்றாலும் நீங்கள் சிறிது கவனமுடன் இருக்க வேண்டும். ஒற்றைத் தலைவலி, முதுகு வலி போன்ற சிறு சிறு உபாதைகள் வந்து நீங்கும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். . யோகா, தியானம் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளுவது நன்மை பயக்கும். உணவுக் கட்டுப்பாடும் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.  

மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் பெற சந்திரன் பூஜை

காதல் / திருமணம்:

காதலர்கள் மனதில் மகிழ்ச்சி நிலவும். உறவு இனிமை அளிக்கும் வகையில் இருக்கும். வெளியிடங்களைச் சென்று உங்கள் துணையை மகிழ்விப்பீர்கள். கணவன் மனைவி உறவில் நல்லிணக்கம் இருக்கும். கருத்து ஒருமித்து இனிமையான இல்லறம் காண்பார்கள். 

காதலில் வெற்றி உண்டாக லக்ஷ்மி பூஜை

நிதி நிலை:

அலுவலகப் பணியாளர்கள் ஊதிய உயர்வு கிடைக்கப் பெறுவார்கள். இதனால் வருமானம் உயரும். லாபம் கிட்டும். குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்கள் நலன் கருதி சில செலவுகளை நீங்கள் மேற்கொள்ள நேரும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி உங்கள் வசதிகளை பெருக்கிக் கொள்வீர்கள். 

நிதி நிலையில் ஏற்றம் உண்டாக அஷ்ட லக்ஷ்மி பூஜை

வேலை / தொழில்:

அரசு உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளின் ஆதரவும் அங்கீகாரமும் கிடைக்கப் பெறுவார்கள். அவர்கள் மூலம் நீங்கள் முன்னேற்றம் காண்பீர்கள். தனியார் துறையில் பணிபுரிபவர்கள் வேலை நிமித்தமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். கூட்டுத்தொழில் செய்யும் உங்களுக்கு சக கூட்டாளிகள் ஒத்துழைப்பு அளிப்பார்கள். தொழிலில் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம்.

உத்தியோகம் மற்றும் தொழில் சிறக்க சனி பூஜை

கல்வி:

பள்ளி மாணவர்கள் மனதை ஒருமுகப்டுத்தி கவனமுடன் படிக்க முயன்றால் வெற்றி இலக்கை எட்டலாம். மேற்கல்வி படிக்க விரும்புபவர்கள் தங்கள் எண்ணங்கள் நிறைவேறக் காண்பார்கள். கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பித்தவர்கள் உதவி பெற்று மகிழ்ச்சி அடைவார்கள்.

கல்வியில் வெற்றி கிடைக்க கணேஷ பூஜை

வீட்டில் செய்யக் கூடிய பரிகாரங்கள்:

  • சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்வது சிறப்பு.  
  • வியாழக்கிழமை மஞ்சள் வஸ்திரம் அணிவது வெற்றியைக் கொடுக்கும். 
  • மாணவர்கள் கல்வி கற்பதற்கு உதவி புரிவது வாழ்கையில் ஏற்றத்தைக் கொடுக்கும்.
banner

Leave a Reply

Submit Comment