AstroVed Menu
AstroVed
search
search

விருச்சிக ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022 (Viruchigam Rasi Guru Peyarchi Palangal Tamil 2021 to 2022)

dateSeptember 28, 2021

விருச்சிக ராசி குரு பெயர்ச்சி 2021 பொதுப்பலன்கள்:

வருட கிரகம் என்று கூறப்படும் கிரகங்களில் குரு தனிச்சிறப்பு வாய்ந்த கிரகம் ஆகும். ஒவ்வொரு கோளுக்கும் ஒரு சிறப்பு இருக்கும். அந்த வகையில் குரு கிரகம் பூரண சுப கிரகம் என்றும் சாத்வீக கிரகம் என்றும் கூறப்படும். குரு பகவான் நவம்பர் 21, 2021, ஞாயிற்றுக் கிழமை அன்று மதியம் 02:06 இந்திய நேரப்படி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். கும்ப ராசியானது விருச்சிக ராசிக்கு சுகஸ்தானமான நான்காம் வீடாக அமைவதால் இல்லுலக சுகங்களான நிலம், வீடு, வண்டி மற்றும் சொத்து சுகங்களை பெருக்கிக் கொள்வதற்கு சாதகமாக இந்த குரு பெயர்ச்சி 2021 அமையப்போகிறது. கோள்சார குருவானவர் நான்காம் பாவத்தில் நின்று ஐந்தாம் பார்வையாக ஆயுள் ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக ஜீவன ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக விரய ஸ்தானத்தையும் பார்வையிடப்போகிறார். இந்த குருப்பெயர்ச்சியானது விருச்சிக ராசியைச் சார்ந்தவர்களுக்கு எதிர்பாராத தன வரவையும், நல்ல தொழில் அமைப்பையும், வெளிநாட்டுப் பயணங்களில் ஆதாயத்தையும், சொத்துக்கள் வாங்குவதற்கான சுப விரையத்தையும், நல்ல ஐஸ்வர்யங்களையும் ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக அமையப்போகிறது.   

குரு பகவானின் ஆசிகளை பெறுவதற்கு இப்போது முன்பதிவு செய்து கொள்ளுங்கள்

குடும்பம்: 

குடும்பத்தில் சில பிரச்சினைகள் தலை தூக்கும். குறிப்பாக அது பணம் சம்பத்தப்பட்ட விஷயமாக இருக்கும். பணம் முதலீடு குறித்த விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் எழ வாய்ப்பு உள்ளது. பொறுமையாகச் செயல்பட்டு முடிவெடுங்கள். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள்.  வார்த்தைகளில் கவனம் தேவை.  குடும்ப உறுப்பினர்களுடன் கவனமாக நடந்து கொள்ளுங்கள். தந்தையுடன் மோதல்,  உடன் பிறப்புகளுடன் பண விஷயங்களில் கருத்து வேறுபாடுகள்,   தாயாரின் ஆரோக்கியப் பிரச்சினை என சில பல குடும்ப பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க நேரும். 

குடும்ப உறவுகள் மேம்பட குரு பூஜை

ஆரோக்கியம்:

சுத்தம், சுகாதாரம். நல்ல உணவு மற்றும் முறையான ஒய்வு ஆரோக்கியத்தை பாதுகாக்கும். நுரையீரல் மற்றும் இதயம் சம்பந்தமான பாதிப்புகளை நீங்கள் எதிர் கொள்ள நேரலாம். எனவே நல்ல உணவு, உடற்பயிற்சி மற்றும் ஓய்விற்கு முக்கியத்துவம் அளியுங்கள். 

உடல் ஆரோக்கியத்திற்கு புதன் பூஜை

காதல் / திருமணம்:

விருச்சிக ராசி இளம் வயதினர்கள் சிலர் காதல் வயப்படக் கூடும். உங்கள் இனிமையான பேச்சு எதிர்பாலரின் மனதைக் கவரும். இது உங்கள் காதல் வெற்றிக்குக் கை கொடுக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தம்பதியருக்குள் அன்னியோன்யம் கூடும். 

காதலில் வெற்றி திருமணம் கைகூட லக்ஷ்மி பூஜை

நிதி நிலை:

உங்கள் வருமானம் கூடும். கையில் இருக்கும் பணத்தை நிலம், வீடு என்ற வகையில் முதலீடாக நீங்கள் மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. சேமிப்புகளின் மூலம் உங்கள் கடன் தொகையை அடைத்து முடிப்பீர்கள். நிதிநிலையில் ஏற்றம் காணப்படும்.  வீட்டுப் பராமரிப்பு வகையில் பணம் செலவு செய்வீர்கள். பயணங்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். 

நிதிநிலையில் உயர்வு பெற ராகு பூஜை

வேலை / தொழில்:

பணியில் இருக்கும் விருச்சிக ராசி அன்பர்கள் கடுமையான உழைப்பை மேற்கொள்வார்கள். அதற்கேற்ற நல்ல பலனையும் பெறுவார்கள். சிறப்பாகச் செயலாற்றி பணியிடத்தில் அங்கீகாரம் மற்றும் பாராட்டு பெறுவார்கள். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு இன்பம் அளிக்கும். தொழில் நிமித்தமான வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள்.  

உத்தியோகம் மற்றும் தொழில் உயர்வுக்கு முருகன் பூஜை

கல்வி:

பள்ளி மாணவர்கள் கடினமாக உழைக்க நேரும். மனதை ஒருமுகப் படுத்த முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்கள் முயற்சி உங்கள் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் கவனமாக இருங்கள். உங்கள் கிரகிக்கும் திறன் கூடும். கவனம் சிதறாமல் பார்த்துக் கொண்டால் சிறப்பான முறையில் படித்து முன்னேறுவீர்கள். 

கல்வியில் ஏற்றம் உண்டாக துர்கா பூஜை

வீட்டில் செய்யக்கூடிய பரிகாரங்கள்:

  • பேராசிரியர்களுக்கு வஸ்திர தானம் செய்து அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி வருவது வாழ்வில் ஏற்றத்தைக் கொடுக்கும்.  
  • வியாழக்கிழமை சிவன் கோவிலுக்கு குத்துவிளக்கு தானம் கொடுத்தல் சிறப்பு. 
  • கோவிலுக்கு வருபவர்களுக்கு கொண்டக்கடலை சுண்டல் தானமாகக் கொடுக்கலாம். 

banner

Leave a Reply