Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

August Monthly Taurus Rasi Palangal 2019 Tamil

July 25, 2019 | Total Views : 1,189
Zoom In Zoom Out Print

ரிஷபம் ராசி - பொதுப்பலன்கள்

ரிஷப ராசி அன்பர்கள், தொடர்ந்து முன்னேற்றம் காணும் மாதமாக இது அமையும். கடந்த இரண்டு வாரங்களாக உங்களை வாட்டிக் கொண்டிருக்கும் எதிர்மறை உணர்வுகளிலிருந்து, விடுதலை கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைகளைப் பயன்படுத்திக் கொள்ள நல்ல வாய்ப்புகள் தேடி வரும். இதனால், பெரும் முயற்சிகள் எதுவும் இன்றியே, பதவி உயர்வு கிடைக்கக் கூடும். எனினும், வேலையில் விழிப்புடன் செயல்பட்டு, பிரச்சினைகளை சுமுகமாக முடிப்பது நல்லது. இந்த காலகட்டத்தில், உங்கள் செல்வமும் பெருகும். ஆபரணச் சேர்க்கையும் ஏற்படும். சமுதாயத்தில் உங்கள் பெயரும், புகழும் மீண்டும் உயரும். பொழுது போக்கிற்காக, வெளியிடங்களுக்குச் சென்றும் மகிழ்வீர்கள். இப்பொழுது பலவகையிலும் வாழ்வில் வளம் பெருகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் நடைபெறும். எனினும், மற்றவர்களை சார்ந்திராமல், உங்கள் உழைப்பை நம்பியே செயலாற்றுவது நன்மை தரும். உங்கள் ஆரோக்கியம் சாதரணமாக இருக்கும். 


ரிஷபம் ராசி - காதல் /திருமணம்

மணவாழ்க்கை மகிழ்ச்சி தரும். தொலை தூர சுற்றுலாக்கள் மனதிற்கு ஆனந்தம் தருவதோடு, உறவுகளுக்குள் நெருக்கத்தை அதிகரிக்கும். இதனால் குடும்பத்தில் இணக்கம் நிலவும். குடும்ப விஷயங்களில் நீங்கள் காட்டும் அக்கறையும், அர்ப்பணிப்பும், உங்கள் வாழ்க்கைத் துணைக்கு, உங்கள் மீதான மதிப்பை உயர்த்தும். இவை அனைத்தும், பிரச்சினைகள் எது எழுந்தாலும், அவற்றை எளிதில் சமாளிக்கும் ஆற்றலை உங்களுக்கு அளிக்கும். 

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: அங்காரக பூஜை

ரிஷபம் ராசி - நிதி  

சம்பளம், பண வரவு போன்றவை சுமாராக இருக்கும். மாதத்தின் முற்பகுதியில் சாதாரணமாக இருக்கும் உங்கள் நிதிநிலை, பிற்பகுதியில் பெரிதும் மேம்படும். உடன் பிறப்புகளிடமிருந்து ஆதரவும், பண உதவியும் கிடைக்கும். நிதி நிறுவனங்கள் அல்லது பிற ஆதாரங்கள் மூலமும் நிதி வரவு ஏற்படும். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதற்கும், பயணங்கள் மேற்கொள்வதற்கும் செலவுகள் செய்ய வேண்டிவரும். பயணத்தின் பொழுது பணம், பொருள் இழப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, எச்சரிக்கை தேவை.  

உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம் : புதன்  பூஜை  


ரிஷபம் ராசி - வேலை

வேலைச் சுமை காரணமாக, நீங்கள் உணர்ச்சி வசப்பட வாய்ப்புள்ளது. எனவே, உணர்வுகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது அவசியம். பணி நிமித்தமாக அதிக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. இதனால், சில ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏற்படவும் கூடும். மேலும், பணியிடத்தில் சில அசௌகரியங்களும் ஏற்படலாம். இதனால், பணிகளை தள்ளிப் போடவும் நேரிடலாம். இந்த மாதம், வேலை மாற்றத்திற்கான வாய்ப்பு உள்ளது. எனினும், அனைத்து முயற்சிகளிலும் நீங்கள் முன்னேற்றம் காண்பீர்கள். கவலை வேண்டாம்.

 வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சனி பூஜை  

 

ரிஷபம் ராசி - தொழில் 

தொழிலில் சில மாற்றங்கள் ஏற்படலாம். உங்கள் உழைப்பிற்கும், கடின முயற்சிக்கும் ஏற்ற பலன்களும், இவற்றுக்கான உரிய பாராட்டுகளும் கிடைக்காமல் போகலாம். முக்கிய முடிவுகள் எடுப்பதில், குழப்பங்களும், தடைகளும் நேரலாம். எனினும், உங்கள் தொழில் கூட்டாளிகளின் ஆதரவு வழக்கம் போலக் கிடைக்கும். இது உங்களுக்கு ஆறுதல் தரும். இந்த நேரத்தில், வாடிக்கையாளர்களுடன் நீங்கள் விவேகமாக நடந்து கொள்ளுவது நல்லது. 


ரிஷபம் ராசி - தொழில் வல்லுனர் 

வேலை சிறப்பாக நடைபெறும்; இதனால் பலன்களும் நன்றாகக் கிடைக்கும்; பணவரவும் சிறப்பாக அமையும். பணியிடத்தில் நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்து, உங்கள் வேலைத்திறனை வெளிப்படுத்துவீர்கள். சக பணியாளர்களிடம் பரிவுடன் நடந்து கொண்டு, நல்ல பெயரும் பெறுவீர்கள்.  


ரிஷபம் ராசி - ஆரோக்கியம் 

உடல் பிரச்சினைகள், மனப் பதட்டங்கள் போன்றவை, இந்த மாதம், உங்களைக் கவலைப் பட வைக்கும். வாழ்க்கைத் துணையின் உடல் நலத்திற்காகவும், பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும். உங்களுக்கு ஏற்ற ஆர்கானிக் உணவு வகைகளைத் தேர்ந்தெடுத்து உண்பதும், தவறாமல் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதும், சிறு உடல் உபாதைகளைத் தீர்த்து, ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.   

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : சூரியன்  பூஜை 


ரிஷபம் ராசி - மாணவர்கள்

இந்த மாதம் கல்வியில் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நேர்மறை ஆற்றலும் பெருகும். இவை, படிப்பில் நல்ல பலனை அளித்து, உங்களுக்குப் பெயரையும், புகழையும் பெற்றுத் தரும். புகழ் பெற்ற பெரும் கலாசாலைகளில் சேர்ந்து மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற விருப்பமும், சிலருக்கு நிறைவேறும் வாய்ப்புள்ளது. 

கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி பூஜை 

சுப தினங்கள்: 2,3,5,6,7,15,17,18,20,21,22,23,26,27,28
அசுப தினங்கள்: 1,4,8,9,10,11,12,13,14,16,19,24,25,29,30,31

banner

Leave a Reply

Submit Comment