Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW

August Monthly Aries Rasi Palangal 2019 Tamil

July 25, 2019 | Total Views : 2,846
Zoom In Zoom Out Print

மேஷம் ராசி - பொதுப்பலன்கள்


மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் நீங்கள் சாதாரண பலன்களையே எதிர்பார்க்கலாம். உங்களுக்கு சில உடல்நலக் குறைபாடுகள் ஏற்படக்கூடும். எனவே, ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை. திருமண வாழ்க்கையில் அமைதியும், மகிழ்ச்சியும் கூட, சற்று குறைவாகவே காணப்படும். பொதுவாகவே, இந்த நேரத்தில் உறவுகளிடம் கவனம் தேவை. உங்கள் பொறுப்புகளை முறையாக நிறைவேற்றுவதும் அவசியம். பிறர் நலத்தை விரும்பும் உங்களுக்கு, இப்பொழுது, பல நண்பர்கள் கிடைப்பார்கள். அதே நேரம், உங்கள் உள்ளுணர்வின் ஆற்றலும் அதிகரிக்கும். சச்சரவுகளையும், சவாலான சூழ்நிலைகளையும் எளிதாகக் கையாளும் திறன் ஏற்படும். இதனால், பாராட்டுகளும் வந்து சேரும். இதனால், புகழ் பெற வேண்டும் என்ற உங்கள் விருப்பம் நிறைவேறும் வாய்ப்பும் கிடைக்கும். மாற்றங்களை விரும்பும் மனநிலையும் ஏற்படும். 

மேஷம் ராசி - காதல் /திருமணம்

காதல் மகிழ்ச்சி தரும். சிலருக்குப் புதிதாக காதலும் மலரக் கூடும்.   வாழ்க்கையில் இப்பொழுது நீங்கள் பலவகையிலும் அடையும் மேன்மை, மகிழ்ச்சி தரும். தம்பதியரிடையே சந்தோஷம் நிலவ, குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிடுவது அவசியம். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு, நண்பர்கள் மூலம் வரன் அமையும் வாய்ப்பு உள்ளது. 

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சுக்கிரன் பூஜை


மேஷம் ராசி - நிதி

உங்கள் தெளிவற்ற சிந்தனை காரணமாக தேவையற்ற செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. கடன் வசூல் செய்வதும் கடினமாக இருக்கும். இருப்பினும், கவனத்துடன் செயல்பட்டால், செலவுகளைக் கட்டுப்படுத்தி நிதிநிலையில் முன்னேற்றம் காண முடியும். ஆன்மீக நிகழ்ச்சிகள், சுப காரியங்கள் போன்றவற்றுக்கு, நீங்கள் மகிழ்ச்சியுடன் பணம் செலவு செய்வீர்கள். இந்த மாதம் ஊக வணிகத்தைத் தவிப்பது நல்லது. 

உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம் : புதன் பூஜை  

 

மேஷம் ராசி - வேலை

அலுவலகத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவக்கூடும். கடின முயற்சி மேற்கொண்டாலும், குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க இயலாமல் போகலாம். கூடுதல் பொறுப்புகளும் உங்களுக்குக் கவலை அளிக்கும். குறிப்பாக, மாதத்தின் மத்தியில் நீங்கள் பொறுமை காக்க வேண்டியது அவசியம். எனினும், எந்த நிலையிலும் தன்னம்பிக்கை இழக்க வேண்டாம். நம்பிக்கையுடன் செயலாற்றினால் நல்ல பலன்கள் விளையும் வாய்ப்புள்ளது. ஆயினும், அதீத தன்னம்பிக்கை, பிரச்சினைகளை ஏற்படுத்தும். எச்சரிக்கையாக இருக்கவும்.   

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம் : கணபதி  பூஜை  
 

மேஷம் ராசி - தொழில்

உங்கள் தொழில் சிறக்கும் மாதம் இது. வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் உருவாகும். வாடிக்கையாளர்களுடன் நல்லுறவு நிலவும். இதனால், உங்கள் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். ஆயினும், இடையிடையே  பணிகளில் தாமதங்களும் ஏற்பட வாய்ப்புள்ளதால், நீங்கள் விரைவாக செயலாற்றுவது அவசியம். 

 

மேஷம் ராசி - தொழில் வல்லுனர் 

தொழில் வல்லுனர்களுக்கு, இது நிம்மதி தரும் காலமாக விளங்கும். உங்கள் திறமைக்குத் தகுந்த பலன் கிடைக்கும். தொழிலை விரிவு படுத்தும் வாய்ப்புகள் உருவாகும். உங்களில் சிலருக்கு வாகன வசதி உண்டாகும். மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். உங்கள் பணி, சக ஊழியர்களிடையே உற்சாகத்தை மேம்படுத்தி, உற்பத்தியைப் பெருக்கும்.


மேஷம் ராசி - ஆரோக்கியம் 

உங்கள் ஆரோக்கியம் தொடர்பாக, மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய மாதம் இது. எலும்புகள், முட்டி போன்றவற்றில் வலி, நரம்புப் பிரச்சினை, உடலில் கொழுப்பு சத்து அதிகரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. உங்கள் வாழ்க்கைத் துணைக்கும், ஜீரணம் அல்லது கல்லீரல் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

 ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீ வைத்தியநாத பூஜை

 

மேஷம் ராசி - மாணவர்கள் 

மாணவர்களுக்கு நம்பிக்கை தேவைதான். ஆனால் அளவுக்கு அதிகமான நம்பிக்கை, இப்பொழுது துன்பம் விளைவிக்கக் கூடும். ஜாக்கிரதை. நீங்கள் பாடங்களைப் படித்து முடிப்பதில், சில தாமதங்கள் ஏற்படும். நண்பர்களுடன் சில சச்சரவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. உங்கள் கவனத்தை திசைதிருப்பும் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. நீங்கள், உங்கள் ஆசைகளைக் கட்டுப்படுத்துவதும் அவசியம். எனினும், நேர்மறையான சில நிகழ்வுகளும், மாற்றங்களும் உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். 

கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி பூஜை 

சுப தினங்கள்:  2,3,5,6,7,11,12,13,15,17,18,20,21,22,23,26,27,28
அசுப தினங்கள்: 1,4,8,9,10,14,16,19,24,25,29,30,31

banner

Leave a Reply

Submit Comment