Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
AstroVed Menu
AstroVed
search
search

August Monthly Gemini Rasi Palangal 2019 Tamil

July 25, 2019 | Total Views : 1,370
Zoom In Zoom Out Print

மிதுனம் ராசி - பொதுப்பலன்கள்

மிதுன ராசி அன்பர்களே! இது உங்களுக்கு பெருமளவு நல்லதொரு மாதமாக இருக்கும். கற்பதிலும், அறிவைப் பெருக்கிக் கொள்வதிலும், உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். பயணங்கள் செய்வதிலும், மக்களை சந்திப்பதிலும் விருப்பம் ஏற்படும். உங்கள் அனுபவங்களைப் பிறருடன் பகிர்ந்து கொண்டு, இன்பமும் காண்பீர்கள். தகவல் பரிமாற்றம், பயணம் மற்றும் எழுத்து போன்றவற்றின் மூலம் நீங்கள் வருமானமும் ஈட்டுவீர்கள். உங்கள் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய காலம் இது. எனவே இது தொடர்பான நடவடிக்கைகளில், தயக்கமின்றி, துணிவுடன் இறங்குங்கள். உங்களது வித்தியாசமான சிந்தனை மூலம், தொழில் துறையில், புதிய பல வழிமுறைகளை நடைமுறைப்படுத்தி, அதன் மூலம் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். இதனால் உங்களுக்கு தகுந்த அங்கீகாரமும், பாராட்டும் கிடைக்கும். இது குறித்து, நீங்கள் கண்டிப்பாகப் பெருமை கொள்ளலாம். ஆனால், இதை அளவு மீறாமல் மட்டும் பார்த்துக் கொள்ளவும். சமூக வட்டத்திலும் நீங்கள் முன்னேற்றம் காண்பீர்கள். ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும்.


மிதுனம் ராசி - காதல் / திருமணம்

காதல் உறவுகள் சிறந்து விளங்கவும், முன்னேற்றம் காணவும் சாதகமான காலம் இது. உறவுகளுக்குள் ஏற்படும் பெரும்பாலான பிரச்சினைகளும் சுமுகமாகத் தீர்ந்து விடும். இதனால் நீங்களும் சரி, குடும்ப உறுப்பினர்களும் சரி, பொதுவாக, உற்சாகமான மனநிலையிலேயே இருப்பீர்கள். இ[பொழுது உங்கள் எண்ணங்களும் நிறைவேறும். உங்கள் மண வாழ்க்கையையும், நீங்கள் மகிழ்ச்சியுடன் அனுபவிப்பீர்கள். 

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சுக்கிரன் பூஜை

 


மிதுனம் ராசி - நிதி  

நிதி ஆதாயங்கள் பெருகும். இது உங்கள் நிதிநிலையில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் நீண்ட கால திட்டங்களில் பணம் முதலீடு செய்து, உங்கள் சேமிப்பைப் பெருக்குவீர்கள். உங்களில் சிலர், அசையா சொத்து வாங்கும் வாய்ப்பும் உள்ளது. உறவினர்களுக்கு அவசர கால பண உதவியும் செய்வீர்கள். வீட்டை செப்பனிட்டு, சீர்திருத்தி அமைப்பதற்கு, சிறிது பணம் செலவு செய்ய நேரிடலாம். 

உங்கள் நிதிநிலை மேம்பட பரிகாரம்: ராகு பூஜை 


மிதுனம் ராசி - வேலை 

உங்கள் கடின உழைப்பு, பணியில் வெற்றி தேடித் தரும். இருப்பினும், உங்கள் வேலைகளை குறித்த நேரத்திற்குள் முடித்து விடுவது நல்லது. உங்கள் வேலை தொடர்பாக, சில குற்றச்சாட்டுகள் எழ வாய்ப்பு உள்ளது. அவற்றை சரியான முறையில் கையாளுவது அவசியம். இது தவிர, அலுவலகத்தில் பொதுவாகவே நீங்கள், மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்வது நல்லது. பிறரிடம் அளவோடு பழகுவதும், சச்சரவுகளைத் தவிர்பதும் உங்களுக்குத் துணை புரியும். வேலை தொடர்பாக நீங்கள் மேற்கொள்ளும் பயணங்கள் உரிய பலனளிக்காமால் போகலாம். 


வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: குரு பூஜை  

மிதுனம் ராசி - தொழில்

உங்கள் கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைப்பதுடன், உங்களது தீவிர முயற்சிகள், தொழிலில் ஓரிரண்டு குறிப்பிடத்தக்க வாய்ப்புகளைப் பெற்றுத் தரும். உங்கள் புதிய யோசனைகளும் வெற்றிகரமாக அமையும். நிலுவையில் இருக்கும் பணிகளை முடிக்க முக்கியத்துவம் அளிப்பது, வாடிக்கையாளர்கள் சந்திப்பிற்கு முன்கூட்டியே தயார் படுத்திக் கொள்வது போன்றவை, உங்கள் முயற்சிகள் வெற்றியடைய உதவும். அதிக பணிச்சுமை காரணமாக ஏற்படும் பதட்டத்தை, தொழில் கூட்டாளிகளின் ஆதரவால், நீங்கள் சமாளிக்க முடியும். 


மிதுனம் ராசி - தொழில் வல்லுனர் 

தொழில் வல்லுனர்களுக்கு சுமாரான மாதமாகவே இது இருக்கும். உங்கள் நேர்மையான முயற்சிகள் கூட, குறைந்த பலன்களையே அளிக்கும். எனினும்,  பிறர் ஆதரவுடன் உங்கள் பணிகளை முடிக்க இயலும். தெளிவான எண்ணத்துடன், சீராகச் செயலாற்றினால், தொழிலில் முன்னேற்றம் காணலாம். உங்கள் மன உறுதி, பிரச்சினைகளை நன்கு எதிர்கொள்ள உதவும். 


மிதுனம் ராசி - ஆரோக்கியம் 

பக்க விளைவுகளால் எற்படும் சிறு சிக்கல்களும் தீர்ந்து, உங்கள் உடல்நிலை நன்றாகவே இருக்கும். நீண்ட தூரப் பிரயாணங்கள், உங்களுக்கு மனநிறைவை ஏற்படுத்தும். எனினும், காரம், எண்ணெய் போன்றவற்றைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளையே உட்கொள்ளுங்கள். மேலும், தவறாமல் தியானம் செய்வதன் மூலம், உடல் ஆரோக்கியம் மேம்படும்; மனமும் அமைதி அடையும். 

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம்: புதன் பூஜை 


மிதுனம் ராசி - மாணவர்கள்

மாணவர்களுக்கு இது மிகவும் பயனுள்ள மாதமாக இருக்கும். நீங்கள், உங்கள் பாடங்களை நன்கு திட்டமிட்டுப் படியுங்கள்; முழுமனதுடன், நேர்மையாக முயற்சி செய்யுங்கள்; இதனால் உங்களுக்கு நேர்மறையான, நல்ல பலன்களே விளையும். உங்கள் தன்னம்பிக்கையும், பிரச்சினைகளை சமாளிக்க உதவும். உங்கள் கவனத்தை ஒருமுகப் படுத்தவும், மன அமைதி பெறவும், தியானம் மேற்கொள்வது நல்லது. படிப்பில் உங்கள் செயல் திறனையும், முன்னேற்றத்தையும் கண்டு, ஆசிரியர்கள் பெருமை அடைவார்கள். 

கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம்: சரஸ்வதி பூஜை 

சுப தினங்கள்: 2,3,5,6,10,11,12,17,18,20,21,22,23,26,27,28
அசுப தினங்கள்: 1,4,8,9,13,14,15,16,19,24,25,29,30,31

banner

Leave a Reply

Submit Comment