Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW

விருச்சிகம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021 | August Matha Viruchigam Rasi Palan 2021

July 7, 2021 | Total Views : 524
Zoom In Zoom Out Print

விருச்சிகம் ஆகஸ்ட் 2021 பொதுப்பலன்கள்:

விருச்சிக  ராசி அன்பர்களே! இந்த மாதம் குடும்பத்தில் அமைதி நிலவ நீங்கள் உங்கள் துணையை சமாதானமாகப் பேசி கருத்து வேறுபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இளம் வயது தனுசு ராசி அன்பர்கள் மனதில் காதல் அரும்பு மலரும். உங்கள் நிதிநிலையைப்  பொறுத்தவரை இந்த மாதம் உங்களுக்கு சற்றே அனுகூலமான நிலை இருக்கும். பணப் புழக்கம் உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளப் போதுமானதாக இருக்கும். செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகரித்துக் கொள்ள முயற்சி மேற்கொள்ளுங்கள்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் இந்த மாதம் சவாலான மற்றும் நெருக்கடியான தருணங்களை சந்திக்க நேரும்.   தொழில் செய்பவர்கள் சிறந்த தொழில் வாய்ப்புகளைப் பெறுவார்கள். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்பம்:

குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் காரணமாக ஒற்றுமை குலையும். அனுசரித்தும் விட்டுக் கொடுத்தும் நடந்து கொள்வதன் மூலம் உறவில் விரிசல் இல்லாமல் இருக்கும். குடும்பத்துடன் நேரம் செலவழிபப்தும், அவர்களை வெளியிடங்களுக்குக் கூட்டிச் செல்வதன் மூலமும் உறவை சுமுகமாக மாற்றிக் கொள்ள இயலும்.  

கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவ துர்கா பூஜை

நிதிநிலை:

உங்கள் வருமானம் அதிகரிக்கும். இதனால் உங்கள் பொருளாதார நிலையின் ஏற்ற இறக்க நிலை மாறி ஸ்திரத்தன்மை ஏற்படும்.  இந்த மாதம் நஷ்டங்கள் எதையும் நீங்கள் எதிர் கொள்ள வேண்டி இருக்காது என்பது உங்களுக்கு ஆறுதலான விஷயமாக இருக்கும். உங்கள் சேமிப்பைக் கொண்டு உங்கள் செலவுகளை சமாளித்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் வசதிகள் மற்றும் ஆடம்பரம் பெருகும்.

தன நிலையில் ஏற்றம் உண்டாக சுக்கிரன் பூஜை

உத்தியோகம்:

உத்தியோகத்தைப் பொறுத்தவரை  நீங்கள் சில நெருக்கடியான வேண்டாத சூழலை சந்திக்க நேரும். உங்கள் கடின உழைப்பிற்கான சிறந்த பலன்களை நீங்கள் உடனடியாக எதிர்பார்க்க இயலாது. சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளை நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் முன்னேற்றத்தைக் காண நீங்கள் சிறிது காலம் பொறுமை காக்க வேண்டும். 

உத்தியோக உயர்விற்கு சனி பூஜை

சுயதொழில்:

நீங்கள் சொந்தத் தொழிலில் அல்லது வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தால் இந்த மாதம் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி செயலாற்ற வேண்டியிருக்கும். தொழிலில் சில தடைகளும் தாமதங்களையும் நீங்கள் சந்திக்க நேரும். என்றாலும் நீங்கள் கவனமாகச் செயல்படுவதன் மூலம்  தொழிலில் படிப்படியாக முன்னேற இயலும். தொழில் சம்பந்தமான முடிவுகளை நீங்கள் நன்கு யோசித்து மேற்கொள்வது நல்லது. 

தொழில் வல்லுநர்கள்:

இந்த மாதம் பணிச்சுமை அதிகரிக்கும். என்றாலும் நீங்கள் திறமையுடன் செயல்பட்டு உங்கள் பணிகளை செவ்வனே முடிப்பீர்கள். உங்கள் கவனம் முழுவதும் தொழிலில் இருப்பதால் உங்கள் தனிப்பட்ட வாழ்விற்கு நேரம் ஒதுக்க இயலாத நிலை இருக்கும். எனவே நீங்கள் நேரத்தை சமன் செய்து செயலாற்ற முயற்சி மேற்கொள்ளுங்கள்.

ஆரோக்கியம்:

இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி இந்த மாதம் உங்களுக்கு தேவையான அளவு காணப்படும். என்றாலும் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் தக்க வைத்துக் கொள்ள உடற்பயிற்சி மற்றும் சத்தான உணவு உண்ணுங்கள். 

ஆரோக்கியம் மேம்பட சிவன் பூஜை

மாணவர்கள் :

இந்த மாதம் மாணவர்கள் படிப்படியாக முன்னேற்றம் காண்பார்கள். மாணவர்கள் மனதை ஒருமுகப்படுத்தி கல்வி பயில வேண்டும். கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் தங்கள் படிப்பு முடிந்தவுடன் வேலையில் சேரும் வாய்ப்பு உள்ளது. 

கல்வியில் வெற்றி கிடைக்க புதன் பூஜை

சுப நாட்கள்: 

10, 14, 21, 23, 24, 28, 30, 31

அசுப நாட்கள்:

11, 12, 15, 16, 26, 27

banner

Leave a Reply

Submit Comment