AstroVed Menu
AstroVed
search
search

துலாம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021 | August Matha Thulam Rasi Palan 2021

dateJuly 7, 2021

துலாம் ஆகஸ்ட் 2021 பொதுப்பலன்கள்:

துலாம் ராசி அன்பர்கள் இந்த மாதம் குடும்பத்தில் அனுகூலமான சூழ்நிலை இருக்கக்  காண்பார்கள். திருமணத்திற்குக் காத்திருக்கும் துலாம் ராசி அன்பர்களின் திருமணம் இந்த மாதம் நிச்சயமாக வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் இருக்கும் துலாம் ராசி அன்பர்கள்  இந்த மாதம் சுமாரான பலன்களைக் காண்பார்கள். தொழிலல் நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு திருப்தி கிடைக்காது. உங்கள் நிதிநிலையில் ஏற்ற இறக்கம் இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும்.  உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் விடா முயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி பெற இயலும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்பம்:

கணவன் மனைவி உறவு இந்த மாதம் சுமுகமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவும் சுமுகமாக இருக்கும். திருமணத்திற்கு காத்திருக்கும் துலாம் ராசி அன்பர்கள் மகிழும் வகையில் திருமணம் தொடர்பான அனுகூலமான பலன்கள் கிட்டும். 

திருமண முயற்சி கைகூட செவ்வாய் பூஜை

நிதிநிலை:

இந்த மாதம் பணப்பற்றாக்குறை காரணமாக உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள நீங்கள் சிரமப்படுவீர்கள்.உங்களுக்கு தேவைப்படும் பணம் ஈட்ட நீங்கள் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும். என்றாலும் படிப்படியாக உங்கள்  பொருளாதார நிலை உயரக் காண்பீர்கள். எதிர்கால நலன் கருதி பணம் சேமிப்பதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். 

கடன் பிரச்சனையிலிருந்து விடுபட ருண விமோச்சன பூஜை

உத்தியோகம்:

உத்தியோகத்தில் இருக்கும் துலாம் ராசி அன்பர்கள் பணியில் சில நெருக்கடியான தருணங்களை சந்திக்க நேரும். நீங்கள் பணியில் முன்னேறுவீர்கள். என்றாலும் அது உங்களுக்கு முழு திருப்தி அளிக்கும் வகையில் இருக்க வாய்ப்பில்லை. சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். 

உத்தியோக உயர்விற்கு கணேஷ பூஜை

சுயதொழில்:

சொந்தத் தொழில் அல்லது வியாபாரம் செய்யும் துலாம் ராசி அன்பர்கள் இந்த மாதம் தங்கள் திறமை அனைத்தையும் வெளிப்படுத்தி செயலாற்ற வேண்டியிருக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் இந்த மாதம் சில பிரச்சினைகளை சந்திக்க நேரும். கூட்டாளிகள் உங்களை ஏமாற்றுவதற்கும் வாய்ப்பு உள்ளது.  எனவே கவனம் தேவை. அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு குறுக்கு வழியில் சென்றால் நஷ்டம் அதிகம்  ஏற்பட வாய்ப்பு உள்ளது 

தொழில்  வல்லுநர்கள்:

துலாம் ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் சில கடினமான தருணங்களை எதிர்கொள்ள நேரும். குறித்த நேரத்தில் பணியை முடிப்பதும், கொடுத்த வாக்குறுதிகளை காப்பதும் உங்களுக்கு சவாலானதாக இருக்கும். இந்த மாதம் நீங்கள் எந்த வாக்குறுதியையும் அளிக்காதீர்கள். புதிய தொழில் எதையும் மேற்கொள்ளாதீர்கள். 

ஆரோக்கியம்;

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய இயலும் என்பதைக் கருத்தில் கொண்டு நீங்கள் செயல்பட வேண்டிய மாதம் இது. அதிக பணிகள் காரணமாக உங்கள் தேக ஆரோக்கியம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே உங்கள் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. சிறந்த உணவும் முறையான ஓய்வும் உங்கள் ஆரோக்கியத்தை சிறந்த  முறையில் பாதுகாக்க உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். 

நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு வைத்தியநாத பூஜை

மாணவர்கள் :

யானைக்கு தும்பிக்கை என்பது போல இந்த மாதம் துலாம் ராசி மாணவர்களுக்கு நம்பிக்கை கை கொடுக்கும். எனவே மாணவர்கள் இந்த மாதம் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். மனதை ஒருமுகப் படுத்த நடைப்பயிற்சி, யோகா போன்றவற்றை மேற்கொள்வது நல்லது. சட்டம் மற்றும் மருத்துவப் படிப்பு படிக்கும் மாணவர்கள் இந்த மாதம் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள்.

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க புதன் பூஜை

சுப நாட்கள்: 

10, 16, 21, 23, 24, 28, 30, 31

அசுப நாட்கள்:

11, 12, 13, 14, 26, 27


banner

Leave a Reply