AstroVed Menu
AstroVed
search
search

தனுசு ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021 | August Matha Dhanusu Rasi Palan 2021

dateJuly 7, 2021

தனுசு ஆகஸ்ட் 2021 பொதுப்பலன்கள்:

தனுசு ராசி அன்பர்களே ! குடும்பத்தில் அமைதியும் ஒற்றுமையும் இருக்கும். குழந்தைகள், வாழ்க்கைத் துணை மற்றும் குடும்ப உறவுகளிடம் நல்லிணக்கம் காணப்படும். என்றாலும் குடும்ப உறுப்பினர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் வந்து போகும். உத்தியோகம்  மற்றும் தொழில் மூலம் உங்கள் வருமானம் உயரும். உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணி செய்யும் இடத்தில் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் சில பிரச்சனைகள் வந்து போகும். எனவே நீங்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். கூட்டுத் தொழில் மூலம் லாபம் கிட்டும். அரசுத் துறையில் பணி புரிபவர்கள் இந்த மாதம் சிறந்த ஆதாயங்களைக் காண்பார்கள். சுய தொழிலில் உள்ள நல்ல மனிதர்களின் நட்பு மூலமும் அறிவுரையின் மூலமும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்பம்:

தனுசு ராசி இளம் வயதினரின் காதல் உறவு இந்த மாதம் இனிமையாக இருக்கும். குடும்பத்தில் அமைதியும் ஒற்றுமையும் சிறப்பாக இருக்கும். குழந்தைகளுடன் நல்லுறவு பேண இயலும் அண்டை அயலார் மற்றும் நண்பர்களுடன் நல்லுறவு இருக்கும் 

குடும்ப உறுப்பினர்களிடம் நல்லுறவு நீடிக்க பால திரிபுர சுந்தரி பூஜை

நிதிநிலை;

இந்த மாதம் உங்கள் நிதிநிலை நீங்கள் வரவேற்கத்தக்க வகையில் இருக்கும். நீங்கள் கடின முயற்சிகளை மேற்கொண்டு உங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். வருமானத்தைப் பெருக்க நீங்கள் மேற்கொள்ளும் புதிய தொழில் அல்லது புதிய முயற்சிகள் உங்களுக்கு அனுகூலமான பலன்களை அளிக்க வாய்ப்புள்ளது. நீங்கள் ஆன்மீகக் காரியங்களுக்காக பணத்தை செலவு செய்வீர்கள். இந்த  மாதம் அதிக செலவுகள் இருக்காது.

நிதி நிலையில் ஏற்றம் உண்டாக கோ பூஜை

உத்தியோகம்:

உத்தியோகத்தில் நீங்கள் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளை நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியிருக்கும். நீங்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு  பெறுவீர்கள். என்றாலும் சில தடைகளையும் தாமதங்களையும் நீங்கள் கடந்து வர வேண்டியிருக்கும்.

உத்தியோக உயர்வு கிடைக்க ராகு பூஜை

சுயதொழில்:

நீங்கள் கூட்டுத் தொழில் செய்பவர் என்றால் அதன் மூலம் இந்த மாதம் நல்ல லாபங்களை எதிர்பார்க்கலாம். உங்கள் தொழில் கூட்டாளி உங்களுக்கு உறு துணையாக இருப்பார். தொழில் நிமித்தமான உங்கள் பயணங்கள் மூலம் நீங்கள் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் முயற்சிக்கான அங்கீகாரம் இந்த மாதம் கிட்டும். ஏற்றுமதித் தொழிலில் உள்ளவர்கள் நல்ல லாபங்களை எதிர்பார்க்கலாம்.

தொழிலில் லாபம் கிடைக்க குரு பூஜை

தொழில் வல்லுநர்கள்:

இந்த மாதம் நீங்கள் வாடிக்கையாளர்களுடன் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். உங்கல்கவனக் குறைவு காரணமாக இந்த மாத இறுதியில்  கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. பேச்சில் கவனம் தேவை.  அரசுத் துறை சார்ந்து தொழில் செய்பவர்கள் இந்த மாதம் சிறந்த முன்னேற்றம் காண்பீர்கள். 

ஆரோக்கியம்:

இந்த மாதம் நீங்கள் உங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் உற்சாகத்துடன் மேற்கொள்வீர்கள். பணிச்சுமை காரணமாக நீங்கள் சோர்வை உணர்வீர்கள். கால் மற்றும் முதுகு வலி போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 

நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு சந்திர பூஜை

மாணவர்கள்:

பள்ளியில் படிக்கும் தனுசு ராசி மாணவர்கள் இந்த மாதம் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். ஆசிரியர் மற்றும் பெற்றோர் உங்களுக்கு உறு துணையாக இருப்பார்கள். உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் கிரகிக்கும் திறன் கூடும். ஆராய்ச்சி கல்வி பயிலும் மாணவர்கள் தங்களது ஆராய்ச்சியில் வெற்றி காண்பார்கள். 

கல்வியில் வெற்றி கிடைக்க புதன் பூஜை

சுப நாட்கள்: 

10, 14, 16, 21, 23, 24, 28, 30, 31

அசுப நாட்கள்:

11,12,17,18, 26, 27


banner

Leave a Reply