Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

சிம்மம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022 | August Matha Simmam Rasi Palan 2022

June 27, 2022 | Total Views : 477
Zoom In Zoom Out Print

சிம்மம் ஆகஸ்ட் 2022 பொதுப்பலன்கள்:

சிம்ம ராசி அன்பர்களே! குடும்ப உறவகள் இந்த மாதம் சீராக இருக்கும். கணவன் மனைவி உறவில் ஒற்றுமை காணப்படும்.  குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான உறவு நிலை சிறப்பாக இருக்கும். புதிய மனிதர்களை சந்திப்பீர்கள். அவர்களின் நட்பு மூலம் நீங்கள் தன ஆதாயங்களைப் பெறுவீர்கள். தனியார் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியிடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும் என்றாலும் சிறு சிறு பிரச்சினைகள் வந்து போகும். தலை வலி போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. துரித உணவுகளை தவிர்ப்பது நன்மை பயக்கும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்பம்:

காதலர்களுக்கு இது முன்னேற்றம் காணும் மாதமாக இருக்கும். பரஸ்பரம் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொள்வீர்கள்.  கணவன் மனைவி உறவில் ஒற்றுமை அதிகரிக்கும். கருத்து வேறுபாடுகள் நீங்கும். தாம்பத்திய உறவில் நல்லிணக்கம் கூடும். குடும்பத்தில் வயதில் மூத்த உறுப்பினர்களுடன் கருத்து மோதல்கள் வரலாம். வாக்கில் கவனம் தேவை. வாக்கு வாதத்தை தவிர்க்கவும். குழந்தைகள் உடனான உறவு வலுப்படும். 

காதலில் வெற்றி உண்டாக லக்ஷ்மி பூஜை

நிதி நிலை:

நிதிநிலை பொதுவாக இந்த மாதம் சீராக இருக்கும். தொழில் மூலம் வருமானம் உயரும். உங்கள் கடின உழைப்பின் மூலம் அதிக பணம் ஈட்டுவீர்கள். வெளிநாட்டு தொடர்பான ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழில் செய்பவர்கள் நிதி நிலையில் சிறந்த ஆதாயமும் நல்ல லாபமும் காண்பார்கள். வீட்டு மராமத்து  அல்லது புதிய வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கும் வகையில் செலவினங்களை மேற்கொள்வீர்கள். 

பொருளாதாரத்தில் ஏற்றம் காண குரு பூஜை

வேலை:

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியிடச் சூழல் அனுகூலமாக இருக்கும். பணியிடத்தில் பொறுப்புகள் கூடும். நீங்கள் திறம்பட செயலாற்றி வெற்றி காண்பீர்கள். அரசு உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வீர்கள். தனியார் துறையில் பணியில் உள்ளவர்கள் பணியிடத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்வீர்கள்.  வெளிநாட்டில்  வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறும். குறிப்பாக தகவல் தொழில் நுட்பத்துறையில் வேலை தேடும் ஒரு சில சிம்ம ராசி அன்பர்களுக்கு வெளிநாட்டில் வேலை கிட்டும்.  

தொழில்:

சிம்ம ராசி அன்பர்களே! இந்த மாதம் உங்கள் தொழில் சிறப்பாக நடக்கும். புதிய தொழில் ஆரம்பிக்க இது ஏற்ற மாதம். தொழிலை விரிவு படுத்தும் எண்ணம் இருந்தால் உங்கள் எண்ணம் இந்த மாதம் நிறைவேறும். இந்த மாதம் நீங்கள் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் நல்ல பலன் பெற இயலும்.  கூட்டுத்தொழிலிலில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் மூலம் பண வரவு அதிகரிக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் இருக்கும்.      பால் பொருட்கள் சம்மந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் தங்கள் வருமானத்தை உயர்த்திக் கொள்ள இது ஏற்ற மாதமாக இருக்கும். 

தொழில் வல்லுனர்கள்:

அரசு சார்ந்த துறையில் தொழில் புரியும் சிம்ம ராசி அன்பர்கள் இந்த மாதம்  நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த பதவி உயர்வு கிடைக்கப் பெறுவார்கள். ஊதிய உயர்வும் கிட்டும். வாடிக்கையாளர்களின் அங்கீகாரம் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். தொழில் புரியும் இடத்தில் மேலதிகாரிகளும் உங்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவார்கள். சுயதொழில் செய்யும் தொழில் வல்லுனர்கள் தொழில் ஒப்பந்தம் சார்ந்த ஆவணங்களில் கையொப்பமிடும் முன் கவனம் தேவை.
உத்தியோகம் மற்றும் தொழிலில் ஏற்றம் கிடைக்க அஷ்ட லக்ஷ்மி பூஜை

ஆரோக்கியம்:

உங்கள் ஆரோக்கியம் இந்த மாதம் சீராக இருக்கும் என்றாலும் சிறு சிறு பிரச்சினைகள் வந்து போகும். பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை. அஜீரணக் கோளாறுகள் ஏற்படும்.  ஆரோக்கிய உணவு மற்றும் நேரம் தவறாமல் உண்பதின் மூலமாக வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். தாயார் உடல் நலனில் அக்கறை தேவை. 

உடல் ஆரோக்கியம் பெற சந்திரன் பூஜை

மாணவர்கள்:

இந்த மாதம் பள்ளிக்கல்வி பயிலும் மாணவர்கள் கவனம் சிதறாமல் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள், கல்வியில் முதன்மை பெறுவார்கள். உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் இந்த மாதம் கல்வியில் பளிச்சிடுவார்கள். கல்வி உதவித் தொகை வேண்டி விண்ணப்பித்து காத்துக் கொண்டு இருந்தவர்களுக்கு இந்த மாதம் பணம் கிடைக்கும். ஆராய்ச்சி கல்வி படிக்கும் மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு ஆராய்ச்சியில் வெற்றி பெறுவார்கள். இந்த மாதம் வெளி நாட்டில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு நம்பிக்கை தரும் மாதமாக இருக்கும்.

கல்வியில் வெற்றி கிடைக்க கணபதி பூஜை

சுப நாட்கள்: 

12, 13, 17, 18, 21, 22, 23, 24, 25. 29, 30.

அசுப நாட்கள்:

14, 15, 16, 19, 20, 26, 27, 28, 31.

banner

Leave a Reply

Submit Comment