AstroVed Menu
AstroVed
search
search

கன்னி ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022 | August Matha Kanni Rasi Palan 2022

dateJune 27, 2022

கன்னி ஆகஸ்ட் 2022 பொதுப்பலன்கள்:

கன்னி ராசி அன்பர்களே! இந்த மாதம் குடும்ப உறவுகள் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி  இடையே ஒற்றுமை இருக்கும். மூத்த உடன் பிறப்புகளுடன் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். இந்த மாதம் உங்களுக்கு ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். ஆன்மீக தேடலுக்காக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வீர்கள். பணியிடச் சூழல் அனுகூலமாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சிறப்பாக பணியாற்றுவீர்கள். உங்கள் தொழில் சிறப்பாக நடக்கும். மாணவர்களுக்கு இந்த மாதம் சிறந்த மாதமாக இருக்கும். படிப்பில் வெற்றி கிடைக்கும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்பம்:

கணவன் மனைவி உறவில் ஒற்றுமை இருக்கும். தம்பதியர் கருத்து வேறுபாடுகளைக் களைந்து மனமொத்து வாழ்வார்கள். இருவருக்கும் இடையே அன்னியோன்யம் கூடும். குடும்ப உறுப்பினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள்.     திருமணத்திற்குக் காத்திருப்பவர்கள் இந்த மாதம் தங்களுக்கு ஏற்ற துணை கிடைக்கப் பெறுவீர்கள். மூத்த உடன்பிறப்புகளுடன் நீங்கள் அனுசரித்து செல்வதன் மூலம் சுமுகமான உறவு நிலை பராமரிக்கலாம்.  

கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவ துர்கா பூஜை

நிதி நிலை:

இந்த மாதம் உங்கள் நிதிநிலை சிறப்பாக இருக்கும். நிதிநிலையில் முன்னேற்றம் காணப்படும். உங்கள் தேவைகளை  நிறைவேற்றிக் கொள்ள உங்கள் கடந்தகால சேமிப்பைக் கொண்டு உங்கள் செலவுகளை சமாளித்துக் கொள்வீர்கள். நீண்ட நாட்களாக வசூலாகாத கொடுத்த கடன் வசூலாகும். வீட்டில் உள்ள பெரியவர்களின் மருத்துவ செலவிற்காக அதிகம் செலவுகள் செய்வீர்கள்.

கடன் பிரச்சனை தீர ருண விமோச்சன பூஜை

வேலை:

உத்தியோகத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் சற்று அனுகூலமற்ற நிலை இருக்கும். பணியிடச் சூழலை நீங்கள் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியிருக்கும். பணிகளும் பொறுப்புகளும் அதிகமாக இருக்கும். அரசு உத்தியோகத்தைப் பொறுத்தவரை கடினமாக உழைத்தாலும் அதற்குரிய பலன் கிடைப்பது அரிதாக இருக்கும். தனியார் உத்தியோகத்தை பொறுத்தவரை பணிச்சுமை அதிகரித்து காணப்படும். ஊடகம் மற்றும் படைப்புத் துறையில் இருப்பவர்கள் தங்கள் துறையில் படைப்பாற்றல் மற்றும் புத்திசாலித்தனத்தின் மூலம் சாதிப்பார்கள். 

தொழில்:

உங்கள் தொழில் இந்த மாதம் சிறப்பாக நடக்கும். விற்பனை அதிகரிக்கும். லாபமும் ஆதாயமும் கிட்டும். நீங்கள் புதிய முதலீடுகளை மேற்கொள்வீர்கள். சிறய அளவிலான முதலீட்டில் அதிக அளவிலான லாபம் காண்பீர்கள். சமூக வலைதளம் ஊடகம் போன்ற துறையினர் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்று தங்கள் தொழிலில் முன்னேறுவார்கள். இது அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். மென்பொருள் தயாரிக்கும் தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்பவர்கள் இந்த  மாதம் அதிக லாபம் காண்பார்கள . 

தொழில் வல்லுனர்கள்:

கன்னி ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் சிறப்பாக தொழில் புரிவார்கள். கூடுதல் பொறுப்புகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். என்றாலும் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். வெளிநாட்டு வாய்ப்பை எதிர் நோக்கிக் காத்துக் கொண்டிருக்கும் அன்பர்கள் இந்த மாதம் தங்கள் எண்ணம் ஈடேறக் காண்பார்கள்.  ஒரு சிலருக்கு பணியில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிட்டும் வாய்ப்பு உள்ளது. அதன் மூலம் நல்ல முன்னேற்றமும் காணலாம். 

உத்தியோகம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் காண சனி பூஜை

ஆரோக்கியம்:

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய இயலும். நல்ல ஆரோக்கியம் இருந்தால் தான் வாழ்க்கையை அனுபவிக்க இயலும் எனவே உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். அஜீரணக் கோளாறு மற்றும் குடல் உபாதைகளை நீங்கள் சந்திக்க வாய்ப்புள்ளது என்பதால் உண்ணும் உணவில் கவனம் தேவை. வீட்டில் உள்ள பெரியவர்களின் உடல் நலத்திலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாக இருக்கும். 

ஆரோக்கியமான உடல் நலனுக்கு செவ்வாய் பூஜை

மாணவர்கள்:

மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள் என்றாலும் கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்புள்ளது. என்றாலும் தடைகளை தாண்டி வெற்றி காண மனதை ஒருமுகப் படுத்தி கல்வி பயில வேண்டியது அவசியம். மாணவர்களின் மனதில் புதிய விஷயங்களை கற்கும் ஆர்வம் அதிகரிக்கும். ஆராய்ச்சி கல்வி படிக்கும் மாணவர்கள் சிறந்த முறையில் தேர்வுகளை எழுதி அதிக மதிப்பெண்களைப் பெறுவார்கள். 

கல்வியில் சிறந்து விளங்க புதன் பூஜை

சுப நாட்கள்: 

2, 3, 4, 7, 8, 9, 10, 12, 13.

அசுப நாட்கள்:

1, 5, 6, 11, 17, 18, 19, 20.


banner

Leave a Reply