கடகம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022 | August Matha Kadagam Rasi Palan 2022

கடகம் ஆகஸ்ட் 2022 பொதுப்பலன்கள்:
கடக ராசி அன்பர்களே! குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அன்பும் ஆதரவும் மிகுதியாக காணப்படும். இந்த மாதம் நண்பர்கள் மற்றும் சொந்தங்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். குழந்தைகளுடனான உறவு வலுப்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் நல்லிணக்கம் கூடும். குடும்பத்தில் அமைதி நிலவும். உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் வகையில் இந்த மாத கிரக நிலைகள் உள்ளன. அதிக அளவில் பண வரவு இருக்கும் என்றாலும் செலவும் கூடுதலாக இருக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு சென்ற மாதத்தை விட இந்த மாதம் பண வரவு சற்று அதிகமாக இருக்கும். என்றாலும் தொழிலுக்காக நீங்கள் கடன் வாங்கக்ககூடிய வாய்ப்பும் உள்ளது. திருப்பி செலுத்தும் சக்திக்கு உட்பட்டு கடன் வாங்குவது நல்லது. மாணவர்கள் இந்த மாதம் தன்னம்பிக்கையுடன் செயல்படுவார்கள். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
காதல் / குடும்பம்:
காதலைப் பொறுத்தவரை இந்த மாதம் சிறந்த மாதமாக இருக்கும். இருவருக்கும் இடையே பரஸ்பரம் அன்பு மிகுந்து காணப்படும். உங்கள் துணையிடம் அதிக அன்பும் அக்கறையும் காட்டுவீர்கள். திருமணமான தம்பதிகளுக்கு கலை மற்றும் இசையில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். இருவரும் இன்பச்சுற்றுலா சென்று மகிழ்வீர்கள். குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் அன்பு செலுத்துவீர்கள். அதனால் குடும்பத்தில் நேர்மறை ஆற்றல் நிறைந்து காணப்படும்.
குடும்ப உறுப்பினர்களிடம் நல்லுறவு நீடிக்க பால திரிபுர சுந்தரி பூஜை
நிதி நிலை:
நிதிநிலை ஏற்றம் தரும் வகையில் இருக்கும். உபரிப் பணத்தை வெளிநாட்டு நாணயம் பரிமாற்ற சந்தையில் முதலீடு செய்வது நல்ல லாபத்தை கொடுக்கும். நீண்ட தூர வெளிநாட்டு பயணங்கள் தொடர்பான செலவுகள் ஏற்படும். உங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் வருமானம் வரும் வாய்ப்பு உள்ளது. தரகு சார்ந்த பகுதி நேர தொழில் சிறப்பாக இருக்கும். அந்த தொழில் மூலம் சிறந்த வருமானம் கிடைக்கும். இந்த மாதம் தங்களின் சேமிப்பு கூடும்.
தன நிலையில் ஏற்றம் உண்டாக சுக்கிரன் பூஜை
வேலை:
உத்தியோகத்தைப் பொறுத்தவரை முன்னேற்றமான நிலை இருக்கும். வெளிநாட்டில் வேலை தேடும் கடக ராசி அன்பர்கள் இந்த மாதம் தங்கள் கனவுகள் நனவாகக் காண்பார்கள். குறிப்பாக மின்னணு பொறியியல் பட்டதாரிகளுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். மின்சாரத்துறையில் பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு உத்தியோக உயர்வும் சம்பள உயர்வும் உண்டு. அதன் மூலம் சமூக அந்தஸ்து கூடும்.
தொழில்:
கடக ராசி அன்பர்களின் தொழில் சிறப்பாக இருக்கும். குறிப்பாக இறக்குமதி தொழில் செய்பவர்கள் இந்த மாதம் அதிக லாபத்தை பெறுவார்கள். மருந்து தயாரிக்கும் தொழில் செய்பவர்கள் தன நிலையில் நல்ல முன்னேற்றத்தை பெறுவார்கள். கூட்டுத்தொழில் செய்பவர்கள் தொழில் நிமித்தமாக வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வார்கள். அதன் மூலம் லாபங்களும் ஆதாயங்களும் கிட்டும். நீங்கள் ஆடை உற்பத்தி செய்யும் தொழில் செய்பவர் என்றால் அதிக லாபம் உண்டு.
தொழில் வல்லுனர்கள்:
கடக ராசி தொழில் வல்லுனர்கள் கடின உழைப்பை மேற்கொள்வதன் மூலம் பணியிடத்தில் பெயரும் புகழும் பெறுவார்கள். உடன் வேலை செய்யும் சக பணியாளர்கள் நட்புணர்வுடன் பழகுவார்கள். வாடிக்கையாளர்களின் நல்லாதரவைப் பெறுவார்கள். இந்த மாதம் வேலை மாற்றம் குறித்து அவசர முடிவுகள் எதையும் நீங்கள் மேற்கொள்ள வேண்டாம். பொறுமையாய் இருப்பது மிகப்பெரிய வாய்ப்புகளை அமைத்து தரும்.
உத்தியோகம் மற்றும் தொழில் உயர்விற்கு சனி பூஜை
ஆரோக்கியம்:
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். என்றாலும் ஒற்றைத் தலைவலி மற்றும் அஜீரண கோளாறு போன்ற சிறு சிறு பிரச்சினைகள் வந்து மறையும். உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுவதன் மூலம் உடல் நிலை சீராகும். இந்த மாதம் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதன் மூலமும் அக்கறை எடுத்துக்கொள்வதன் மூலமும் உடலை எந்த நோயும் அண்டாமல் பாதுகாத்து கொள்ள முடியும்.
நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு வைத்தியநாத பூஜை
மாணவர்கள்:
கடக ராசி மாணவர்கள் இந்த மாதம் நன்கு கல்வி பயில்வார்கள். கவனம் சிதறாமல் கல்வி பயில இயலும். பெற்றோர் மற்றும் ஆசிரியரின் வழிகாட்டுதல் அவர்களை வெற்றியை நோக்கி இட்டுச் செல்லும். இந்த மாதம் உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். கல்வி உதவித் தொகை விண்ணப்பித்த மாணவர்கள் அதனைப் பெறுவார்கள்.
கல்வியில் மேன்மை உண்டாக சரஸ்வதி பூஜை
சுப நாட்கள்:
2, 3, 4, 7, 8, 9, 10, 16, 17, 21, 22, 23, 24, 25.
அசுப நாட்கள்:
1, 5, 6, 11, 12, 13, 14, 15, 19, 20, 26, 27, 28.
