Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW

August Matha Mithunam Rasi Palan 2020

July 8, 2020 | Total Views : 464
Zoom In Zoom Out Print

மிதுனம் ஆகஸ்ட் மாத பொதுப்பலன்கள்:

மிதுன ராசி அன்பர்கள், இந்த மாதம், தங்கள் தொழிலிலும், நடவடிக்கைகளிலும் அதிகத் தெளிவு இல்லாமல் இருக்கக்கூடும். உங்களுக்குப் பலவித குழப்பங்களும் ஏற்படக் கூடும். நீங்கள் பலவீனத்தாலும் பாதிக்கப்படலாம். எனவே, உங்கள் உடல்நிலையில் மட்டுமின்றி, மனநிலையிலும் கவனம் தேவைப்படலாம். பண விவகாரங்களில், மற்றவர்களிடம் மனக்கசப்பு ஏற்படும் சாத்தியமும் உள்ளது. குழந்தைகள் உடல் நிலையும் பாதிக்கப்படலாம் என்பதால், கவனம் தேவை. தற்போது உங்கள் செலவுகளும் அதிகரிக்கக் கூடும், குழந்தைகளாலும் பல செலவுகள் ஏற்படக்கூடும். எந்த காரணத்திற்காக இருந்தாலும் சரி, செலவுகளைக் கட்டுப்படுத்துவது, அவசியம். எதிரிகளாலும் தொல்லை ஏற்படலாம். எனினும், நீங்கள் இவை எல்லாவற்றையும் நன்றாகவே எதிர்கொண்டு, சமாளிப்பீர்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களின் தவறான அபிப்ராயங்கள், உங்கள் முயற்சியால் விலகும். ஜோதிடம், ராசி பலன், நட்சத்திர பலன், இன்றைய பஞ்சாங்கம், வார ராசி பலன்கள், வருடாந்திர ராசி பலன்கள், பரிகாரங்கள் பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.

காதல் மற்றும் திருமண வாழ்க்கை:

காதலைப் பொறுத்தவரை உங்களுக்கு இது சுமாரான காலமாகும். இருப்பினும், சிலருக்குப் புதிய தொடர்புகள் ஏற்படலாம். குடும்ப வாழ்க்கையில், துணைவருடனான உங்கள் உறவுகள் பாதிக்கப் படலாம். எனினும் உங்கள் சமூகத் தொடர்புகள் சிறப்பாக இருக்கும். சிலர், சிறு பயணங்கள் செல்ல நேரலாம்.    
நிதி:

பொருளாதார சூழ்நிலை மந்தமாக இருக்கலாம். ஆனால், இது தற்காலிகமானதாகவே இருக்கும். உங்கள் பொருளாதாரத் தேவைகள் அனைத்தும், சுமாராக நிறைவேறும். எனினும், நண்பர்களுடனான பொழுது போக்குகளுக்கு நீங்கள் செலவு செய்யக்கூடும். உறவினர்களின் தேவைக்கேற்ப அவர்களுக்கு நிதியுதவியும் வழங்கக் கூடும். 

வேலை:

பணியில் இருப்பவர்களுக்கு இது ஒரு சாதாரண காலமாக இருக்கும். வேலையில் நீங்கள் சில முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். புதிய தொழில் நுட்பங்களின் காரணமாக நல்ல அனுபவத்தையும் பெறலாம். கடின முயற்சி செய்து உங்களது அனைத்து எதிர்பார்ப்புக்களையும் நீங்கள் நிறைவேற்றிக் கொள்ளக்கூடும். 

தொழில்:

தொழில் ஒப்பந்தங்கள் மூலம், இந்த நேரத்தில் சிறந்த பலன் காண்பது கடினமான செயலாக இருக்கக் கூடும். உங்கள் கூட்டாளிகள் சில பணிகளை நிலுவையில் வைத்திருப்பதற்கான சாத்தியமும் உள்ளது.  எனவே, தற்போதுள்ள பணிகளில் நீங்கள் கவனம் செலுத்துவது அவசியம். 

தொழில் வல்லுநர்கள்:

மிதுன ராசி தொழில் வல்லுநர்களின் நடவடிக்கைகள் நல்ல முறையில் நடைபெறும். தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவதன் மூலம், உங்கள் திறமைகள் நன்கு வெளிப்படும். உங்கள் பணியும் மேலும் சிறந்து விளங்கும். நேரத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப உங்கள் திட்டங்களைத் தீட்டுவது, மேலும் நன்மை தரும். . 

ஆரோக்கியம்:

உங்கள் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். உங்களில் சிலர், இப்பொழுது வாதம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்படக் கூடும். எனவே உடல் நலனில் அக்கறை தேவை. எந்தக் காரணம் கொண்டும், அதில் அலட்சியம் காட்டாதீர்கள். 

மாணவர்கள்:

படிப்பதற்கும், சிறந்த கல்வி அனுபவத்தைப் பெறுவதற்கும் இது சரியான நேரம் எனலாம். உங்கள் திறந்த மனமும், பரந்த மனப்பான்மையும் உங்களுடைய தனிப்பட்ட திறமைகளையும், நற்பெயரையும் மேம்படுத்த உதவும். உங்கள்  செயல்திறனால் பெற்றோர்களும்  மன மகிழ்ச்சி அடைவார்கள்.

சுப தினங்கள் :  5,6,7,10,11,12,24,25,30,31
அசுப தினங்கள் : 3,4,13,14,26,27

பரிகாரம்:

  • ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
  • புதன், சனி, குரு, ராகு, கேது போன்ற கிரக மூர்த்திகளுக்குப் பூஜை, ஹோமம் செய்து வழிபடுதல்.
  • பறவைகளுக்கு உணவு அளித்தல், ஏழை எளியோருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவி செய்தல்.
     
banner

Leave a Reply

Submit Comment