கடகம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2020 | August Matha Kadagam Rasi Palan 2020

கடகம் ஆகஸ்ட் மாத பொதுப்பலன்கள்:
கடக ராசி அன்பர்களே! பொதுவாக, இந்த மாதம் நீங்கள் மேற்கொள்ளும் செயல்கள் அனைத்திலும் சாதாரண பலன்களே கிட்டக் கூடும். குடும்ப வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் எழுவதற்கு வாய்ப்பு உள்ளது. பல்வேறு பணிகளை ஒரே நேரத்தில் செய்ய வேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம். அது போன்ற தருணங்களில், கவனமாக நடந்து கொள்வது அவசியம். கடும் வேலைப் பளுவால், உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்குக் கூட, உங்களால் நேரம் ஒதுக்க முடியாமல் போகலாம். மேலும் மருத்துவ செலவுகளும் ஏற்படலாம். தொழில் சார்ந்த பணிகளிலும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உங்களில் சிலர், சிறு பயணங்களை மேற்கொள்ள நேரிடலாம். இதன் காரணமாகவும் செலவுகள் ஏற்படலாம். எனினும், தேவையான நேரங்களில், உங்களுடைய கூர்மையான அறிவாற்றல் உங்களுக்குக் கை கொடுக்கும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களிலும் முன்னேற்றம் காணப்படும். ஜோதிடம், ராசி பலன், நட்சத்திர பலன், இன்றைய பஞ்சாங்கம், வார ராசி பலன்கள், வருடாந்திர ராசி பலன்கள், பரிகாரங்கள் பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.
காதல் மற்றும் திருமண வாழ்க்கை:
காதலர்களுக்கு இது அனுகூலமான காலமாகும். காதல் உறவுகளில் அன்பும், பாசமும் நிறைந்து காணப்படும். எனினும், உங்கள் துணையுடன் கவனமாக இருக்கவேண்டிய நேரம் இது எனலாம். அவருடன், அதிகமாகப் பேசுவதைக் குறைத்துக் கொள்வதும் நன்மை தரும். குடும்பத்தில் பிறருடன் நல்லுறவோடு பழகுவதும் நலம் பயக்கும்.
நிதி:
நிதி விஷயங்களைப் பொறுத்தவரை, இது சாதகமான மாதம் எனலாம். பொதுவாக, உங்கள் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படக்கூடும். தொழில் லாபம் தரும். சிலருக்குத் தாய் வழியிலும் லாபங்கள் வந்து சேரலாம். எனினும், இந்தக் காலகட்டத்தில் வீண் விரையங்களும் ஏற்படலாம்.
வேலை:
வேலையில் பல நல்ல முன்னேற்றங்கள் ஏற்படலாம். ஆனால், அதற்கான வாய்ப்புகளை நீங்கள் முறையாகப் பயன்படுத்திக் கொள்வது அவசியம். முடிந்தவரை, உங்கள் அனைத்துப் பணிகளையும், நிலுவையில் வைக்காமல், விரைவாக முடித்து விடுவதும் அவசியம்.
தொழில்:
தொழில் நிலவரம் சுமாராக இருக்கக் கூடும். தொழில் ரீதியான போட்டி காரணமாக நீங்கள் சில கஷ்டங்களையும் சந்திக்க நேரலாம். குறிப்பாக, பூமி தொடர்பான தொழில்கள், பல வகையில் கஷ்டங்கள் தரலாம். எனினும், உங்கள் தொழில் திறன் காரணமாக, பிறர் உங்களது முக்கியத்துவத்தை உணர்வார்கள்.
தொழில் வல்லுநர்கள்:
கடக ராசி தொழில் வல்லுநர்களுக்கு, இது, அனுகூலமான மாதமாக இருக்க, அவர்கள் அதிக முயற்சி எடுப்பது அவசியம். எனினும், உங்களது செயல்திறன், உங்களுக்குப் பல நற்பலன்களைப் பெற்றுத் தரும். இதன் மூலம், நீங்கள் அதிக தன்னம்பிக்கையையும் பெறலாம்.
ஆரோக்கியம்
உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது. பச்சைக் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உட்கொள்வது, உடல் வலிமையை அதிகரிக்கும். இதன் மூலம் உங்கள் எதிர்ப்பு சக்தி மேம்பட்டு, ஏதேனும் சிறிய உடற்கோளாறுகள் ஏற்பட்டாலும், அவை விரைவில் குணமாகி விடும் நிலை ஏற்படும்.
மாணவர்கள்:
மாணவர்களுக்கு இது நல்ல மாதமாக அமையும். சிறந்த ஊக்கமும், விரைந்து கற்கும் திறனும், உங்களிடம் இப்பொழுது அதிகமாக இருக்கும். இந்த நற் குணங்கள், நல்ல முறையில் கல்வி பெற உங்களுக்குத் துணை புரியும். உங்களிடம் உள்ள தைரியமும், பல வகைகளிலும் உங்களுக்குப் பயனுள்ளதாக அமையும்.
சுப தினங்கள் : 8,9,13,14,26,27
அசுப தினங்கள் : 1,2,5,6,7,15,16,17,28,29
பரிகாரம்:
- திருப்பதி ஸ்ரீ பாலாஜி மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
- சந்திரன், குரு, சனி, ராகு, கேது கிரக மூர்த்திகளுக்குப் பூஜை, ஹோமம் செய்து வழிபடுதல்.
- ஆலயங்களில் அன்னதானம் செய்தல். நாய்க்கு உணவு அளித்தல்.
