AstroVed Menu
AstroVed
search
search

ரிஷபம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2020 | August Matha Rishabam Rasi Palan 2020

dateJuly 9, 2020

ரிஷபம் ஆகஸ்ட் மாத பொதுப்பலன்கள்:

ரிஷப ராசி அன்பர்களே! இந்த மாதம்  உங்கள் புகழ் மற்றும் கெளரவம் சிறந்து விளங்கும். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். காரியத் தடைகள் ஏற்பட்டு விலகும். தன வரவு சுமாராக இருக்கும். குழந்தைகள் நன்றாகப் படிப்பார்கள். இதனால் நீங்கள் ஆனந்தம் அடைவீர்கள். தந்தை வழி சொத்துப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தந்தையின் உடல்நிலையும் ஆரோக்கியமாக இருக்கும். சிலருக்கு, திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களுக்கும் இடமுண்டு. எனினும், உங்களின் சில செயல்களினால், மற்றவர்கள் உங்களுக்கு எதிரிகளாக மாறக்கூடும், எச்சரிக்கையாக இருக்கவும். சிலருக்கு உடல் நல பாதிப்புகளும் வந்து விலகலாம். குடும்பத்திலும் சில நேரங்களில் மனநிம்மதி இல்லாமல் போகலாம். வெளியூர்ப் பயணங்களால் நீங்கள் அதிக செலவு செய்ய நேரலாம். சிலர் ஆன்மீகப் பயணங்களையும் மேற்கொள்ளக் கூடும். ஜோதிடம், ராசி பலன், நட்சத்திர பலன், இன்றைய பஞ்சாங்கம், வார ராசி பலன்கள், வருடாந்திர ராசி பலன்கள், பரிகாரங்கள் பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.  

     

காதல் மற்றும் திருமண வாழ்க்கை:

காதல் வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சி தரும். எனினும், காதல் விவகாரங்களைக் கையாளும் பொழுது, நீங்கள் நல்ல மனநிலையுடன் இருப்பது அவசியம். குடும்பப் பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும், நீங்கள் பொறுமையைக் கடைபிடிப்பது நல்லது. எனினும், வாழ்க்கைத் துணையுடன் உங்கள் உறவு நன்றாக இருக்கும்.  

நிதி:

பொருளாதார ரீதியாக இது உங்களுக்கு நல்ல காலம் எனலாம். உங்கள் நிதி நிலை மகிழ்ச்சி தரும். உங்கள் வருமானமும், உங்களது அனைத்துப் பொறுப்புகளையும்  நிறைவேற்றுவதற்குப் போதுமானதாக இருக்கும். 

வேலை:

வேலையில் நீங்கள் காட்டும் அர்ப்பணிப்பு, நீங்கள் உரிய அங்கீகாரம் பெறுவதற்கு உதவியாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளும் உருவாகும். எனினும், பணி இடத்தில் உங்களது சில செயல்களால், நீங்கள் எதிரிகளைத் தேடிக் கொள்ளக் கூடும். எனவே மிகுந்த கவனத்துடன் பணியாற்றவும். 

தொழில்:

தொழில், வியாபாரம் போன்றவற்றைப் பொறுத்தவரை இது, உங்களுக்கு சுமாரான காலம் எனலாம். இப்பொழுது எதிலும் அதிக பலன்களை எதிர்பார்க்காதீர்கள். புதிய முயற்சிகள் தொடங்கும் பொழுதும், நம்பிக்கை இழக்காதீர்கள். இந்த ஆண்டு முழுவதுமே, வியாபார ரீதியாக எந்தவொரு அவசர முடிவையும் எடுக்காமல் இருப்பது நல்லது.

 
தொழில் வல்லுநர்கள்:

ரிஷப ராசி தொழில் வல்லுநர்களின் நடவடிக்கைகள் சிறப்பாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த பலன்களையும், இதன் மூலம் நீங்கள் பெற முடியும். எனினும், சில நேரங்களில் வேலையில் தாமதங்கள் காணப்படலாம். அவற்றைக் கண்டு நீங்கள் நம்பிக்கை இழந்து விடாதீர்கள். நேரத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப உங்கள் திட்டங்களை வகுப்பது, நன்மை தரும். 

ஆரோக்கியம்:

இந்தக் காலகட்டத்தில், உடல்நலத்தில் அக்கறையுடன் இருப்பது அவசியம். உடலுக்குத் தேவையான ஒய்வு கொடுப்பதன் மூலம், உங்கள் உடல் நலத்தை நீங்கள் நன்கு பராமரிக்கலாம். தவறாமல் தியானம் செய்வதும், உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். 

மாணவர்கள்:

கல்வியைப் பொறுத்தவரை, இது நல்ல முன்னேற்றம் தரும் மாதமாக இருக்கும். நீங்கள் அறிவாற்றலுடன் செயல்படுவீர்கள். படிப்பில் உங்கள் கடின முயற்சி காரணமாக, நல்ல நிலையை அடைவீர்கள். ஆசிரியர்களும்,  பெற்றோர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

சுப தினங்கள்  : 3,4,8,9,22,23,30,31
அசுப தினங்கள் : 1,2,10,11,12,24,25,28,29.

பரிகாரம்:

  • ஸ்ரீ ரங்கநாதர் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
  • செவ்வாய், சனி, குரு, ராகு, கேது போன்ற கிரக மூர்த்திகளுக்குப் பூஜை, ஹோமம் செய்து வழிபடுதல்.
  • பாம்புப் புற்றுக்குப் பால் வார்த்தல், நாய் மற்றும் பசுவுக்கு உணவு அளித்தல்.

Leave a Reply