மகரம் ஆகஸ்ட் 2022 பொதுப்பலன்கள்:
மகர ராசி அன்பர்களே! இந்த மாதம் குடும்பத்தில் நல்லுறவு நீடிக்கும். கணவன் மனைவிக்கு இடையே நல்ல ஓற்றுமை இருக்கும். உங்கள் வருமானம் உயரும். கையில் பணபுழக்கம் சீராக இருக்கும். உத்தியோகத்தைப் பொறுத்தவரை அனுகூலமான மாதமாக இருக்கும். தொழில் சிறப்பாக நடக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் நல்லாதரவு கிடைக்கப் பெறுவீர்கள். பணியிடத்தில் நீங்கள் உங்கள் பொறுப்புகளை சரிவர நிறைவேற்றுவீர்கள் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் அதில் வெற்றி காண்பார்கள். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
காதல் / குடும்பம்:
காதலர்களுக்கு இந்த மாதம் அனுகூலமான மாதமாக இருக்கும். காதலர்கள் தங்களின் துணையுடன் இன்பச்சுற்றுலா சென்று மகிழ்வார்கள். கணவன் மனைவி உறவு நல்லுறவாக இருக்கும். இருவருக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும். தங்களின் தாயாரின் ஆரோக்கியத்தை நீங்கள் உடன் இருந்து கவனிக்க வேண்டிய நிலை இருக்கும். தாயருக்கு கண்கள் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கவனம் தேவை.
குடும்ப உறவில் மகிழ்ச்சி அதிகரிக்க செவ்வாய் பூஜை
நிதி நிலை:
இந்த மாதம் தங்களின் தன வரவு அதிகரித்து காணப்படும். பணப்புழக்கம் சீராக இருக்கும். இந்த மாதம் நீங்கள் புதிய கடன்கள் எதுவும் வாங்கவோ கொடுக்கவோ கூடாது. பணம் கொடுக்கல் வாங்கல் சம்மந்தப்பட்ட விஷயங்கள் குறித்த அவசர முடிவுகள் எதையும் நீங்கள் எடுக்க வேண்டாம். வீடு பராமரித்தல் மற்றும் வீட்டிற்கு சாயம் பூசுதல் போன்ற வகைகளில் செலவுகள் ஏற்படும்.
கடன் பிரச்சனையிலிருந்து விடுபட ருண விமோச்சன பூஜை
வேலை:
உத்தியோகத்தைப் பொறுத்த வரை அனுகூலமான மாதமாக இருக்கும். தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் கூடும். உங்களுக்கு கூடுதல் பணிகள் வழங்கப்படும். உங்கள் பணிகளை நீங்கள் சரிவர நிறைவேற்றுவீர்கள். அரசு துறையில் பணியில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். பணியிடச் சூழல் அனுகூலமாக இருக்கும். சக பணியாளர்கள் மற்றும் மேல் அதிகாரிகளுடன் நல்லுறவு நீடிக்கும். படைப்புத் துறையில் பணி புரிபவர்களுக்கு உத்தியோக உயர்விற்கு இது சிறந்த மாதமாக இருக்கும்.
தொழில்:
இந்த மாதம் உங்கள் தொழில் சிறப்பாக நடக்கும். குறிப்பாக கூட்டுத் தொழில் சிறப்பாக இருக்கும். தங்கம் மற்றும் வெள்ளி சம்பந்தப்பட்ட ஆபரண தொழில் செய்பவர்கள் தொழிலில் அதிக லாபங்களை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். . தகவல் தொடர்பு சம்மந்தப்பட்ட தொழிலில் இருப்பவர்கள் அதிக முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.
தொழில் வல்லுனர்கள்:
தொழில் வல்லுனர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். வெளிநாட்டில் தொழிலை மேற்கொள்ள நினைப்பவர்கள் இந்த மாதத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் நினைத்ததை சாதிக்க இயலும். தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டியிருக்கும். என்றாலும் தொழில் மூலம் லாபம் பெருகும். வாடிக்கையாளர்களும் உங்கள் சேவையில் திருப்தி அடைவார்கள். உங்களுக்கு அங்கீகாரம் கிட்டும். உத்தியோகத்தில் உள்ள தொழிலில் வல்லுனர்கள் பதவி உயர்வு மூலம் தன நிலையில் ஏற்றம் கிடைக்கப் பெறுவார்கள். .
உத்தியோகம் மற்றும் தொழிலில் ஏற்றம் காண கணபதி பூஜை
ஆரோக்கியம்:
ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள். பெரிய அளவிலான ஆரோக்கிய பாதிப்புகள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை. உடல் ஆரோக்கியம் சீராக இருந்தாலும் நீங்கள் உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். சரி விகித மற்றும் சத்தான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
நல்ல உடல் ஆரோக்கியம் பெற சனி பூஜை
மாணவர்கள்:
இந்த மாதம் பள்ளிக் கல்வி படிக்கும் மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவார்கள். உயர் கல்வியை வெளிநாட்டில் மேற்கொள்ள நினைக்கும் மாணவர்களின் கனவுகள் நனவாகும். ஆராய்ச்சி கல்வி பயிலும் மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தங்கள் ஆராய்ச்சியை மேற்கொள்வார்கள். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதற்கிணங்க விடாமுயற்சியுடன் செயல்பட்டு வெற்றி காண்பார்கள்.
கல்வியில் மேன்மை உண்டாக சரஸ்வதி பூஜை
சுப நாட்கள்:
3, 4, 7, 8, 9, 10, 12, 13, 14, 16, 17, 18.
அசுப நாட்கள்:
1, 2, 5, 6, 11, 15, 19, 20.
Leave a Reply