கும்பம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022 | August Matha Kumbam Rasi Palan 2022

கும்பம் ஆகஸ்ட் 2022 பொதுப்பலன்கள்:
கும்ப ராசி அன்பர்களே! இந்த மாதம் கணவன் மனைவி உறவில் ஒற்றுமை இருக்கும். குடும்பத்தில் பிற உறுப்பினர்களுடன் நீங்கள் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் நல்லுறவை பராமரிக்க முடியும். புதிய நண்பர்களை சந்திப்பீர்கள். அவர்களின் தொடர்பு மூலம் உங்களின் நட்பு வட்டாரம் விரிவு அடையும். பண உதவிகள் மற்றும் ஆதாயங்கள் கிட்டும். இந்த மாதம் திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு கெட்டி மேளம் கொட்டும் வாய்ப்பு உள்ளது. திருமணமான தம்பதிகளின் தாம்பத்திய வாழ்வு சிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிட்டும் வாய்ப்பு உள்ளது. தாய் மற்றும் தந்தையின் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் சிறப்பாகக் கல்வி பயின்று முன்னேற்றம் காண்பார்கள். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.
காதல் / குடும்பம்:
கணவன் மனைவி உறவில் நெருக்கம் அதிகரிக்கும். ஒற்றுமையும் புரிந்துணர்வும் அன்னியோன்யத்தை வளர்க்கும். குடும்ப உறவுகளை பொறுத்த வரை நீங்கள் அனுசரித்துச் செல்வதன் மூலம் குடும்ப உறவுகள் சீராகவும் அமைதியாகவும் இருக்கும். அக்கம்பக்கம் மற்றும் நண்பர்களுடன் சுமுகமான நல்ல உறவு நிலை நீடிக்கும். `
குடும்ப உறவில் மகிழ்ச்சி அதிகரிக்க செவ்வாய் பூஜை
நிதி நிலை:
பொருளாதார நிலையைப் பொறுத்தவரை இந்த மாதம் ஏற்றமான நிலை இருக்கும். வருமானம் உயரும் பண வரவு சீராக இருக்கும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். உங்கள் அன்றாடத் தேவைகளை நீங்கள் எளிதாக சமாளிப்பீர்கள். இந்த மாதம் பங்கு மற்றும் பொருள் வர்த்தக நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கும் லாபங்களை ஈட்டுவதற்கும் ஏற்றதாக உள்ளது.
தன நிலையில் ஏற்றம் ஏற்பட லக்ஷ்மி பூஜை
வேலை:
உத்தியோகத்தைப் பொறுத்தவரை பணியிடச் சூழல் ஒரளவு சிறப்பாக இருக்கும். என்றாலும் சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் கவனமாக நடத்து கொள்ள வேண்டும். குறிப்பாக மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே நீங்கள் உங்கள் பேச்சில் கவனமுடன் இருக்கவேண்டும். நீங்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த பணி உயர்வு இந்த மாதம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
தொழில்:
தகவல் தொடர்பு சம்மந்தப் பட்ட தொழிலில் இருப்பவர் என்றால் இந்த மாதம் உங்கள் தொழில் நல்ல முறையில் நடக்கும். அதிக லாபங்களை எதிர் பார்க்க இயலும். நீங்கள் அரசுத் துறை சார்ந்த தொழிலில் இருப்பவர் என்றால் லாபம் அதிகரிக்கும். விவசாயம் சார்ந்த கூட்டுத்தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
தொழில் வல்லுனர்கள்:
அரசு சார்ந்த துறையில் இருப்பவர்கள் சிறப்பாகச் செயலாற்றி பணியிடத்தில் சாதனைகளைப் புரிவதற்கு வாய்ப்பு உள்ளது. பணியிடச் சூழல் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். தொழிலில் வாடிக்கையாளர்களுடன் நல்லுறவு இருக்கும்.
உத்தியோகம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு கணபதி பூஜை
ஆரோக்கியம்:
ஆரோக்கியமான மனம் இருந்தால் தான் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மனம் மற்றும் உடல் சோர்வு உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். தூக்கமின்மை பிரச்சனை தலை தூக்கும். தியானம் மற்றும் உடற்பயிற்சி மூலம் உடல் நலம் மற்றும் மனநலம் புத்துணச்சி அடையும்.
நல்ல உடல் ஆரோக்கியம் பெற சனி பூஜை
மாணவர்கள்:
பள்ளிக்கல்வி படிக்கும் மாணவர்கள் கல்வியில் சிறப்பாகப் படித்து முன்னேற்றம் காண்பார்கள். நல்ல மதிப்பெண்களை பெறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் தங்களது கல்வியில் சிறந்து விளங்குவார்கள். ஆராய்ச்சி கல்வி படிக்கும் மாணவர்களின் கிரகிக்கும் திறன் கூடும்.
கல்வியில் மேன்மை உண்டாக சரஸ்வதி பூஜை
சுப நாட்கள்:
10, 12, 13, 14, 16, 17.
அசுப நாட்கள்:
1, 2, 3, 4, 5, 6, 11, 15.
