AstroVed Menu
AstroVed
search
search

தனுசு ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022 | August Matha Dhanusu Rasi Palan 2022

dateJune 28, 2022

தனுசு ஆகஸ்ட் 2022 பொதுப்பலன்கள்:

தனுசு ராசி அன்பர்களே! குடும்பத்தில் அமைதி இருக்கும்.  குடும்ப உறவுகள் நல்லிணக்க உறவாக இருக்கும்.  உங்கள் மனதில் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். இந்த மாதம் நீங்கள் ஆன்மிகம் சார்ந்த வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். பெற்றோர் மற்றும் வீட்டில் இருக்கும்  வயது மூத்தவர்களின் உடல் நிலையில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும். கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்னியோன்யம் கூடும். தங்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தொழில் மூலம் லாபம் பெருகும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி காண்பார்கள். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்பம்:

இந்த மாதம் காதலர்களுக்கு அனுசரணையான மாதமாக இருக்க வாய்ப்பில்லை. இருவருக்கும்  இடையே கருத்து வேறுபாடுகள் மற்றும்  மனஸ்தாபங்கள் ஏற்படலாம். எனவே உங்கள் பேச்சில் கவனம் தேவை. கணவன் மனைவி இருவருக்கும் இடையே இணக்கம் அதிகரித்து காணப்படும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அமைதியும் நல்லிணக்கமும் காணப்படும். 

குடும்ப உறவு சிறக்க சந்திரன் பூஜை

நிதி நிலை:

இந்த மாதம் வருமானம் பெருகும். பணப்புழக்கம் தாரளமாக இருக்கும். நிதிநிலையில் ஏற்றம் இருக்கும். தொழில் மூலம் உங்கள் வருமானம் பெருகும். பங்கு வர்த்தக முதலீடுகள் இந்த மாதம் சிறந்த  லாபத்தை கொடுக்கும். அரசு வங்கிகள் மூலம் கடனுக்கு விண்ணபித்து இருந்தால் இந்த மாதம் கடன் தொகை கிடைக்கப் பெறுவீர்கள்.  பயணத்திற்காக அதிகம் செலவு செய்வீர்கள். 

பொருளாதாரத்தில் ஏற்றம் காண குரு பூஜை

வேலை:

உத்தியோகத்தைப்  பொறுத்தவரை அனுகூலமான நிலை இருக்கும். பணியிடச் சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் தனியார் துறையில் பணியில் இருப்பவர் என்றால் சக பணியாளர்களுடன் நட்பு பாராட்டுவீர்கள். அவர்களின் ஓத்துழைபைப் பெறுவீர்கள்.  அவர்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். அரசு உத்தியோகத்தில் வேலை செய்பவர்கள் தங்கள் பணியிடத்தில் உயர் அதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். 

தொழில்:

உங்கள் தொழில் சிறப்பாக நடக்கும்.  நீங்கள் தொழிலை விரிவு படுத்த விரும்புவீர்கள் அல்லது புதிய தொழில் தொடங்க நினைப்பீர்கள். பலசரக்கு வியாபாரம் செய்பவர்கள் தங்கள் தொழில் மூலம் வருமானம் அதிகரிக்கக் காண்பார்கள். தொழில் மூலம் வருவாய் அதிகரிக்கும் காரணத்தால் உங்கள் பொருளாதார நிலையில் ஏற்றம் நிறைந்து காணப்படும்.

தொழில் வல்லுனர்கள்:

தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் சிறப்பாகப் பணியாற்றுவார்கள். தொழிலில் அலைச்சல் இருக்கும். அதிக பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.  என்றாலும் நீங்கள் சிறப்பாக செயலாற்றி வாடிக்கையாளர்களின் கவனத்தை கவர்வீர்கள். 

உத்தியோகம் மற்றும் தொழிலில் உயர்வு கிடைக்க சனி பூஜை

ஆரோக்கியம்:

இந்த மாதம் உங்கள் ஆரோக்கியத்தில் சிறிது கவனம் தேவை. உப்புசம் மற்றும் அஜீரணக் கோளாறுகள் வரலாம். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய இயலும். உங்கள் வேலைக்கு நடுவில் ஒய்வு எடுத்துக் கொள்வதும் சரியான உணவு முறை பின்பற்றுவதும் முறையான தூக்கம் மேற்கொள்வதும் உங்கள் ஆரோக்கியத்தை காத்துக் கொள்ள உதவும். வீட்டில் உள்ள பெரியவர்களின் உடல் நலனில் அக்கறை தேவை. 

ஆரோக்கியமான உடல் நலனுக்கு செவ்வாய் பூஜை

மாணவர்கள்:

பள்ளிக் கல்வி படிக்கும் மாணவர்கள் படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுவார்கள். உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் சிறந்த முறையில் தேர்வுகளை எழுதி சிறந்த மதிப்பெண்களைப் பெறுவார்கள். ஆராய்ச்சி கல்வி பயிலும் மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சியின் மூலம் பல புதிய விஷயங்களை கற்றுக் கொள்வார்கள். 
கல்வியில் சிறந்து விளங்க புதன் பூஜை

சுப நாட்கள்: 

16, 17, 18, 21, 22, 23, 29, 30.

அசுப நாட்கள்:

19, 20, 24, 25, 26, 27, 28, 31.


banner

Leave a Reply