Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW

மகரம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021 | August Matha Magaram Rasi Palan 2021

July 7, 2021 | Total Views : 551
Zoom In Zoom Out Print

மகரம் ஆகஸ்ட் 2021 பொதுப்பலன்கள்:

மகர ராசி அன்பர்களே! இந்த மாதம் குடும்பத்தில் அமைதி நிலவ, நீங்கள் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும். திருமணத்திற்குக் காத்திருப்பவர்களுக்கு தக்க துணை கிடைக்கும். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் உங்களுக்கு அனுகூலமான மாதமாக இருக்கும். உங்கள் வருமானம் கணிசமாக உயரும். கையில் பணம் புரளுகிறது என்பதற்காக அதிக செலவுகளைச் செய்யாமல் சேமிக்கும் பழக்கத்தை கடைபிடிப்பது உங்கள் எதிர்காலத்திற்கு நல்லது. நீங்கள் உத்தியோகத்தில் இருப்பவர் என்றால் உங்கள் உத்தியோகம் குறித்த கவலை இருக்கும். தொழில்  அல்லது வியாபாரம்  செய்கிறீர்கள் என்றால் இந்த மாதம் கடின உழைப்பு மற்றும் அதிக முயற்சி தேவை. மாணவர்களுக்கு இந்த மாதம் சிறந்த மாதமாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் சிறிது கவனம் தேவை. தினமும்  உடற்பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் பாதுகாத்துக் கொள்ள இயலும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்பம்:

விட்டுக் கொடுத்தார் கெட்டுப் போவதில்லை என்பதற்கிணங்க இந்த மாதம் குடும்பத்தில் அமைதி நிலவ  நீங்கள் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் சண்டை சச்சரவு மற்றும் வாக்கு வாதங்களைத் தவிர்க்க இயலும். புரிந்துணர்வுடனும் அனுசரித்தும் நடந்து கொள்வதன் மூலம் கணவன் மனைவி உறவில் சுமுகமான நிலை இருக்கும். 

காதலில் வெற்றி பெற சுக்கிரன் பூஜை

நிதிநிலை:

உங்கள் நிதிநிலையைப் பொறுத்தவரை இந்த மாதம் நீங்கள் வரவேற்கத்தக்க மாதமாக இருக்கும். சொத்துக்கள் விஷயத்தில் இதுவரை இருந்துவந்த சிக்கல்கள் யாவும் இந்த மாதம் முடிவிற்கு வரும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். இந்த மாதம் நீங்கள் பொருளாதார முன்னேற்றத்தைக் காண்பீர்கள். 

நிதிநிலையில் ஏற்றம் உண்டாக ஸ்ரீம் ப்ரிசி லக்ஷ்மி பூஜை

உத்தியோகம்:

நீங்கள் உத்தியோகத்தில் இருப்பவர் என்றால் உங்கள் திறமைகளைப் பயன்படுத்தி நீங்கள் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். அதன் மூலம் மேலதிகாரிகளின் பாராட்டையும் பெறுவீர்கள். படித்து முடித்து வேலை தேடிக கொண்டு இருக்கும் அன்பர்களுக்கு மாதக் கடைசியில் சிறந்த வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. கிடைக்கும் வேலை உங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும்.  

பணி செய்யும் இடத்தில் சிறந்து விளங்க செவ்வாய் பூஜை

சுயதொழில்:

நீங்கள் தொழிலை விரிவாக்கம் செய்ய வேண்டி கடந்த காலங்களில் விண்ணபித்து இருந்த கடன் தொகைகளை இந்த மாதம் பெறுவீர்கள். அதன் மூலம் புதிய தொழில் முதலீடுகளை நீங்கள் மேற்கொள்ள ஏதுவாக இருக்கும். தொழிலில் புதிய யுக்திகள்அல்லது தொழில் நுட்பங்களை நீங்கள் கையாள்வீர்கள். தொழில் குறித்த முடிவுகளை யாரிடமும் கலந்து  ஆலோசிக்காமல் நீங்களே மேற்கொள்வது நல்லது.  போட்டியாளர்களிடம் கவனம் தேவை.

தொழில் வல்லுநர்கள்:

மகர ராசி தொழில் வல்லுனர்கள் இந்த மாதம் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். இந்த வாய்ப்புகளை நீங்கள் சரிபாகப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் வெற்றி காண இயலும்.  உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கான யுக்திகளை கற்க நீங்கள் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளது. .  

ஆரோக்கியம்:

இந்த மாதம் நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள். சிறந்த உணவு மற்றும் ஓய்வின் மூலம் உங்கள் சிறந்த ஆரோக்கியத்தை சீராக தக்க வைத்துக் கொள்வீர்கள். தியானம் மற்றும் யோகா பயிற்சி மூலமும் உங்கள் தேக ஆரோக்கியத்தை சீராக வைத்துக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.  

உடல் ஆரோக்கியம் மேன்மை அடைய செவ்வாய் பூஜை

மாணவர்கள்:

மகர ராசி மாணவர்கள் இந்த மாதம் கண்ணும் கருத்துமாக கல்வியில் அதிக கவனம் செலுத்திப் படிக்க வேண்டியது அவசியம். அதன் மூலம் வெற்றி காணலாம். பெற்றோரின் அதரவு இந்த மாதம் உங்களுக்குக் கிட்டும்.  வெளிநாடு சென்று  படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இந்த மாதம் அனுகூலமான மாதமாக இருக்கும். 

கல்வியில் வெற்றி கிடைக்க கேது பூஜை

சுப நாட்கள்: 

10, 14, 16, 23, 24, 28, 30, 31

அசுப நாட்கள்:

11, 12, 19, 20, 21, 26, 27

banner

Leave a Reply

Submit Comment