AstroVed Menu
AstroVed
search
search

கும்பம் ஆகஸ்ட் மாத ராசி பலன் 2021 | August Matha Kumbam Rasi Palan 2021

dateJuly 7, 2021

கும்பம் ஆகஸ்ட் 2021 பொதுப்பலன்கள்:

கும்ப ராசி அன்பர்களே ! நீங்கள்  இந்த மாதம் உங்கள்  வாழ்வின் அனைத்து  அம்சங்களிலும் அனுகூலமான பலன்களை காண்பதற்கான சாத்தியம் உள்ளது. நீங்கள் சிறப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் அமைதியும் நல்லுறவும் இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் நீங்கள் நல்லிணக்க உறவை மேற்கொள்வீர்கள்.. குடும்பத்தில் உறவினர்களிடம் சுமுகமான உறவு காணப்படும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வீர்கள். உங்கள் நிதிநிலை ஏற்றத் தாழ்வுகள் இன்றி சீராக இருக்க வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் இந்த மாதம் மிகவும் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.  நீங்கள் சொந்தத் தொழில் அல்லது வியாபாரம் செய்பவர் என்றால் உங்கள் தொழிலில் போட்டியாளர்களை வெல்வதற்கான சாத்தியம் உள்ளது. புதிய முதலீடுகளை மேற்கொள்ளும் போது கவனம் தேவை. எதிர் கால நலன் கருதி உங்கள் செலவுகளைக் குறைத்துக் கொண்டு சேமிப்பை அதிகரித்துக் கொள்ளுங்கள். உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் சிறிது கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் கடுமையாக உழைத்துப் படிக்க வேண்டும். மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்குமான ராசி பலன் (Horoscope in Tamil) குறித்து அறிய வலைத்தளம் வாருங்கள்.

காதல் / குடும்பம்:

கணவன் மனைவி உறவு நல்லுறவாக இருக்கும்  என்றாலும் அவ்வப்போது  சிறிய விஷயங்களுக்கெல்லாம் கருத்து வேறுபாடுகள் வந்த போகும்.  எனவே வாழ்க்கைத் துணையிடத்தில் அனுசரித்து நடத்து கொள்ள வேண்டியது அவசியம். புரிந்துணர்வை வளர்த்துக் கொள்வதன் மூலம் சண்டை சச்சரவுகளை தவிர்க்க இயலும். உங்கள் குடும்பத்திற்கென நேரம் ஒதுக்கி அவர்களுடன் கலந்து உறவாடுவதன் மூலம் உறவு மேம்படும். 

திருமணமான தம்பதிகளுகிடையே வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்பட சுக்கிரன் பூஜை

நிதிநிலை:

உங்கள் பொருளாதாரநிலையில் ஏற்ற இறக்க நிலை மாறி சீரான நிலை காணப்படும். உங்கள் வருமானம் கணிசமாக உயரும். உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் அளவிற்கு உங்களிடம் பணம் இருக்கும். உங்கள் எதிர்ப்பார்ப்புகள் இந்தமாதம் பூர்த்தி அடையும். கையில் பணம் புரளும் காரணத்தால் நீங்கள் புதிய முதலீடுகளை மேற்கொள்ள முயற்சி செய்வீர்கள். 

கடன் பிரச்சனைகள் தீர துர்கா பூஜை

உத்தியோகம்:

நீங்கள் உத்தியோகத்தில் இருப்பவர் என்றால் சில  சவாலான தருணங்களை சந்திக்க நேரும். கவனக் குறைவு காரணமாக சில தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மனதை ஓருமுகப்படுத்தி கவனமுடன் பணியாற்ற வேண்டும். பணி நிமித்தமான பயணங்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். புதிய பொறுப்புகள் உங்களுக்கு அளிக்கப்படும். உங்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்விற்கு நீங்கள் இன்னும் சிறிது காலம் பொறுமையாக இருக்க வேண்டும்.  

உத்தியோகத்தில் சிறந்து விளங்க சூரியன் பூஜை

சுயதொழில்:

நீங்கள் சொந்தத் தொழில் மற்றும் வியாபாரம் செய்பவராக இருப்பின் இந்த மாதம் உங்கள் தொழில் மூலம் நீங்கள் அதிக லாபங்களைப் பெறுவீர்கள். உடல் உழைப்பு சார்ந்த தொழில் செய்பவர் என்றால் அதிலும் நீங்கள் உங்களுக்குச் சாதகமான பலன்களைக் காண இயலும். புதிய தொழில் வாய்ப்புகள் மூலம் உங்கள் வருமானம் பெருகும். கடன்கள் அடையும். அதிக லாபங்களைப் பெற அதிகமாக உழைக்க வேண்டி வரும்.

தொழில் வல்லுநர்கள்;

தொழில் வல்லுநர்கள் இந்த மாதம் சிறந்த வளர்ச்சி காண்பீர்கள். என்றாலும் நீங்கள் சில பிரச்சினைகளை சந்திக்க நேரும். சுமுகமாகப் பேசிக் கொள்வதன் மூலம் உங்கள் பிரச்சினைகளை வளரவிடாமல் நீங்கள் தவிர்க்க இயலும். உங்கள் பேச்சில் கவனம் வேண்டும். வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். 

ஆரோக்கியம்;

உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்றாலும் முறையான உணவு மற்றும் ஓய்வின் மூலம் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள்  சீராக வைத்துக்கொள்ள முடியும்.  தொண்டை அல்லது கழுத்துப் பகுதியில் பிரச்சனை ஏற்பட வாய்புள்ளது. சிறிய உடல் உபாதை என்றாலும் உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளுங்கள். உணவில் விட்டமின் சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை சேர்த்துக் கொள்வதன் மூலம் பெரும் நோய்கள் வராமல் தற்காத்துக் கொள்ளலாம்.

நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்பட செவ்வாய் பூஜை

மாணவர்கள்:

கும்ப ராசி மாணவர்கள் இந்த மாதம் சிறப்பாகக் கல்வி பயில்வார்கள். ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் வழிகாட்டுதல்கள் உறுதுணையாக இருக்கும். உங்களுக்குச் சிறந்த வழிகாட்டிகளாக இருப்பார்கள். சட்டம் மற்றும் பொருளாதாரம் படிக்கும்  மாணவர்கள் சிறப்பாகச் செயல்பட வாய்ப்புள்ளது. போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் சிறந்த வெற்றி காண்பார்கள். மேற்படிப்பு வேண்டி வெளி நாடு செல்ல விரும்பும் மாணவர்களுக்கு இந்த மாதம் பொன்னான வாய்ப்பு கிட்டும் மாதமாக இருக்கும்.  

மாணவர்களின் கிரகிக்கும் தன்மை அதிகரிக்க புதன் பூஜை

சுப நாட்கள்: 

10, 14, 16, 21, 24, 28, 30, 31

அசுப நாட்கள்:

11, 12, 22, 23, 26, 27


banner

Leave a Reply