Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
AstroVed Menu
AstroVed
search
search

விருச்சிகம் ஏப்ரல் மாத ராசி பலன் 2020 | April Month Rasi Palan 2020 Viruchigam

March 11, 2020 | Total Views : 1,235
Zoom In Zoom Out Print

விருச்சிக ராசி பொதுப்பலன்கள் :

இந்த மாதம் பலன்கள் உங்களுக்கு அனுகூலமாக அமைய ஒவ்வொரு சூழ்நிலையிலும் நீங்கள் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். உங்கள் தனிப்பட்ட வாழ்விலும் தொழிலிலும் சவால்கள் நிறைந்து காணப்படும். வேலையில் உங்கள் கவனக்குறைவு காரணமாக நீங்கள் சில வாய்ப்புகளை இழக்க நேரிடலாம். எல்லா விஷயங்களிலும் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். பிறருடன் பேசும் போது அமைதியான முறையில் நடந்துகொள்ள வேண்டும். சமூக வாழ்வில் ஏற்படும் மகிழ்ச்சியான தருணங்கள் உங்கள் பலத்தை அதிகரிக்கும். உங்கள் சக ஊழியர்கள் உங்கள் நம்பகத்தன்மையை சந்தேகிக்கலாம். உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் முறையான கவனம் செலுத்த வேண்டும். சில நேரங்களில் அது உங்களுக்கு பதட்டத்தை ஏற்படுத்தலாம்.

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

விருச்சிக ராசி காதல் மற்றும் திருமணவாழ்க்கை :

இந்த மாதம் காதல் வாழ்க்கை சமபலன் உள்ளதாக இருக்கும். திருமண உறவுகள் சிறப்பாக இருக்கும். துணைவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். கவனம் தேவை. விட்டு கொடுக்கும் மனப்பான்மை இருந்தால் இந்த மாதம் மிக சந்தோஷம் நிறைந்த மாதமாக இருக்கும்.மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
 

விருச்சிக ராசி நிதி :

இந்தக் காலகட்டம், பணவரவு சுமாரானதாக இருக்கும். தனிப்பட்ட தேவைகளுக்காக நீங்கள் அதிக செலவு செய்ய நேரிடலாம். பொழுதுபோக்கு மற்றும் ஆடம்பரச் செலவுகள் மிக அதிகமாகக் காணப்படுகிறது நிதி விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்கள். மற்றவர்களுக்கு வாக்குறுதி அளிக்காதீர்கள்.

விருச்சிக ராசி வேலை :

இந்த மாதம் வேலையில் பல முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். திருப்திகரமான காலமாக இருக்கும். கூடுதல் பொறுப்புகள் மேலும் அதிகரிக்கலாம். கொடுக்கப்பட்ட கடமைகளை சரியாக நிறைவேற்ற வேண்டும். சவாலான பணிகளில் நீங்கள் சுதந்திரமாக வேலை செய்யப் பழகுவது நல்லது.

விருச்சிக ராசி தொழில் :

உங்கள் நேர்மறை எண்ணங்களும், உடனடியாகச் செயலில் இறங்கும் ஆற்றலும், உங்களுக்கு பெரும் நன்மையைச் செய்யும். தொழில் வளர்ச்சியில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்துவீர்கள். புதிய ஒப்பந்தங்களைச் செய்து கொள்ளத் தகுந்த காலம் இது. அது உங்கள் வியாபாரத்தை மேம்படுத்தும்.

விருச்சிக ராசி தொழில் வல்லுநர் :

தொழில்துறையில், உணர்ச்சி வசத்தில் திடீரென்று மேற்கொள்ளும் நடவடிக்கைகள் காரணமாக பணியில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். ஆகவே இந்த மாதம் கவனமாக இருக்க வேண்டிய காலமாகும். உங்கள் உற்பத்தித் திறன் மேம்பட்டு இருக்க வேண்டும்.

விருச்சிக ராசி ஆரோக்கியம் :

உங்கள் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். நீர் சம்பந்தமான வியாதிகளினால் பாதிக்கபடுவீர்கள். எனினும், நீங்கள் சத்தான உணவை உட்கொள்ள வேண்டும். மருத்துவரின் அறிவுரைகளையும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் நீங்கள் நல்ல ஆரோக்கியம் பெறலாம்.

விருச்சிக ராசி மாணவர்கள் :

மாணவர்களுக்கு இது ஒரு சாதாரண காலமாகும். கலாச்சார விழாக்களில் பங்கு பெறுவதன் மூலம் உங்கள் அறிவை மேம்படுத்திக் கொள்வீர்கள். உங்கள் செயல்களால் பெற்றோர்கள் பெருமிதம் அடைவார்கள். ஆனால், உங்கள் படிப்பில் நீங்கள் வெற்றி பெற கடினமாக முயற்சி செய்ய வேண்டும்.

உங்களின் ஜோதிடம், புரோகிதம், எண்கணிதம், ராசிரத்தினம் தேடலுக்கு எங்களை அணுகவும்.

சுப நாட்கள் : 3,4,7,8,21,22,30

அசுப நாட்கள் : 1,2,9,10,23,24,25,28,29

banner

Leave a Reply

Submit Comment