AstroVed Menu
AstroVed
search
search

ரிஷபம் ஏப்ரல் மாத ராசி பலன் 2020 | April Month Rasi Palan 2020 Rishabam

dateMarch 11, 2020

ரிஷபம் ராசி பொதுப்பலன்கள் :

இந்த மாதம் நீங்கள் எதிலும் நிதானமுடன் செயல்படுவது நல்லது. மற்றவர்கள் உங்கள் செயல்களினால், உங்களுக்கு எதிரிகளாவர்கள். தன வரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் மனநிம்மதி இன்மை ஏற்படும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஆன்மீக சுற்றுபயணம் செல்ல நேரிடும். குழந்தைகள் நன்றாக படிப்பதால், அதனால் ஆனந்தம் அடைவீர்கள். உங்கள் குழந்தைகளின் செயல்கள் பலரால் பாராட்டப்படும். தாய் வழியில் உங்களுக்கு ஆதாயம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் செலவு அதிகமாக செய்வீர்கள்.

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

ரிஷபம் ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை :

காதல் வாழ்க்கையில் இந்த மாதம் தற்காலிக பிரிவினைகள் ஏற்படலாம். வாழ்க்கைத் துணையுடன் உறவு சாதாரணமாக இருக்கும். குடும்பப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் நீங்கள் பொறுமையைக் கடைபிடித்தால் உங்கள் துணையுடன் அன்பான உறவு, நல்ல முறையில் தொடரும்.மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

ரிஷபம் ராசி நிதி :

பொருளாதார ரீதியாக இந்த மாதம் உங்கள் நிதி நிலைமை மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கும். உங்களுக்கு சுமாரான மாதமாக இருக்கும். உங்களுடைய வருமானம் உங்கள் அனைத்து பொறுப்புகளையும் நிறைவேற்றுவதற்கு போதுமானதாக இருக்கும். உங்களிடம் பண உதவி கேட்டு வருவார்கள்.

ரிஷபம் ராசி வேலை :

இந்த மாதம் பணிகளில் நீங்கள் காட்டும் அர்ப்பணிப்பு உங்களுடைய வேலையில் நீங்கள் அங்கீகாரம் பெறுவதற்கு உதவியாக இருக்கும். உங்கள் பணிகள் உங்களுக்கு அங்கீகாரம் அளிப்பதோடு மட்டுமல்லாமல் உங்களுடைய கடின உழைப்பிற்கான திருப்தியான மனநிலையையும் பெற்றுத் தரும்.

ரிஷபம் ராசி தொழில் :

இந்த மாதம் வியாபாரத்தைப் பொறுத்தவரையில் உங்களுக்கு வலுவான காலமாக இருக்காது எனலாம். குறைந்த பட்ச முயற்சிகளை செய்துவிட்டு, அதிக பலன்களை எதிர்பார்க்காதீர்கள். புதிய நடவடிக்கைகளின் போது நம்பிக்கை இழக்காதீர்கள். இந்த ஆண்டு முழுவதுமே வியாபார ரீதியாக எந்தவொரு அவசர முடிவும் எடுக்காதீர்கள்.

ரிஷபம் ராசி தொழில் வல்லுனர்கள் :

இந்த மாதம் உங்கள் செயலகளில் தாமதங்கள் காணப்படும். அவற்றைக் கண்டு நீங்கள் நம்பிக்கை இழந்து விடாதீர்கள். உங்கள் முயற்சிகளைத் தொடருங்கள். நீங்கள் எதிர்பார்த்த பலன்களை அதன் மூலம் நீங்கள் பெறலாம். நேரத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப உங்கள் திட்டங்களை நீங்கள் திட்டமிட வேண்டும்.

ரிஷபம் ராசி ஆரோக்கியம் :

இந்த மாதம், உங்கள் உடல்நலத்திற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். செரிமான பிரச்சினைகள் ஏற்ட வாய்ப்புகள் இருக்கும். இது நீங்கள் நேரம் தவறி உணவு எடுத்துக்கொள்வதன் காரணமாக இருக்கலாம். உங்களை ஆரோக்கியமாக வைத்து கொள்வதற்குக் தியானம் செய்வது உதவிகரமாக இருக்கும்.

ரிஷபம் ராசி மாணவர்கள் :

இந்த மாதம் கல்வியைப் பொறுத்தவரை சாதாரண மாதமாக இருக்கும். நீங்கள் புத்திசாலி தனமாக செயல்படுவீர்கள். படிப்பில் உங்கள் கடின முயற்சி காரணமாக நல்ல நிலை அடைவீர்கள். ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் உங்கள் செயல்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

உங்களின் ஜோதிடம், புரோகிதம், எண்கணிதம், ராசிரத்தினம் தேடலுக்கு எங்களை அணுகவும்.

சுப தினங்கள் : 7,8,16,17,21,22

அசுப தினங்கள் : 9,10,13,14,15,23,24,25


banner

Leave a Reply