Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW

தனுசு ஏப்ரல் மாத ராசி பலன் 2020 | April Month Rasi Palan 2020 Dhanusu

March 11, 2020 | Total Views : 871
Zoom In Zoom Out Print

தனுசு ராசி பொதுப்பலன்கள் :

இந்த மாதம் சுமாரான மாதமாகும். உங்கள் விருப்பப்படி ஒரு சொத்தை வாங்குவீர்கள். அன்றாட நடவடிக்கைகளில் உங்களுடைய தீவிரமான ஈடுபாடு, எல்லோரையும் ஈர்த்து உங்களுடன் இணைந்து செயலாற்ற வைக்கும். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை மேம்படுத்திக்கொள்ள இது ஒரு மிகச் சரியான நேரம். இந்த மாதம் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் எல்லா நிகழ்வுகளிலும் உங்கள் கையே ஒங்கி இருக்கும். வேலையில் உங்கள் மதிப்பை நிரூபித்து நீங்கள் எதிர்பார்த்த சாதகமான முடிவுகளையும் பெறுவீர்கள். உங்களுடைய உற்பத்தித்திறன், நீங்கள் விரும்பிய உயர்ந்த நிலை அல்லது அந்தஸ்தை உங்களுக்கு பெற்றுத் தரும். சிலருக்கு வெளியூர் பயணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நாகரீகமான பொருட்களில் அதிக ஆர்வம் இருக்கும். ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும்.

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

தனுசு ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை :

இந்த மாதத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் நல்லுறவு காணப்படும். காதலர்களுக்கு திருமண முயற்சிகள் கை கூடும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உறவு நன்றாக இருக்கும். உங்கள் எல்லாச் செயல்களுக்கும் சரியான பலன்கள் கிடைக்கும். இல்லற வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

தனுசு ராசி நிதி :

இந்த மாதம், உங்கள் நிதி நிலை சுமாரானதாக இருக்கும். உங்கள் சேமிப்பு நிதி உங்கள் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய உதவியாக இருக்கும். அன்றாட தேவைகளால் வீண் செலவு ஏற்படலாம். குடும்பத்தினரோடு நீங்கள் ஆன்மீகப் பயணம் செல்ல நேரிடலாம். இதனால், செலவினங்கள் மேலும் அதிகரிக்கும்.

தனுசு ராசி வேலை :

இந்த மாதம் வேலையில் முன்னேற்றம் ஏற்படும் காலமாகும். சிறந்த முறையில் பணியாற்ற நீங்கள் பணியை ஒரு முறைக்கு இரு முறை ஆராய வேண்டும். சூழ்நிலைக் கேற்ப பணிகளை மேற்கொள்ள வேண்டும். நீங்கள் பிறருடன் சுமூகமாக நடந்து கொள்வது உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.

தனுசு ராசி தொழில் :

இந்த மாதம், புதிய தொழிலில் கூட்டு வர்த்தகத்தைத் தவிர்க்கவும். உங்களுக்கு தெரியாமல் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் பல சூழ்ச்சிகள் நடக்கும். பயணங்கள் வெற்றிகரமாகவும், நன்மை பயப்பதாகவும் அமையும். ​​வியாபாரத்தில் எவ்வித முடிவையும் எடுப்பதற்கு முன், ஒருமுறைக்கு இருமுறை நன்கு யோசித்தே செயலாற்ற வேண்டும்.

தனுசு ராசி தொழில் வல்லுனர்களுக்கு :

இந்த மாதம் பணிகளில் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி சிறப்பாக செயலாற்றுங்கள். உங்கள் முயற்சிகளைத் தொடருங்கள். நேரத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப உங்கள் திட்டங்களை நீங்கள் திட்டமிட வேண்டும். வேலையில் தாமதங்கள் காணப்படும். அவற்றைக் கண்டு நீங்கள் நம்பிக்கை இழந்து விடாதீர்கள்.

தனுசு ராசி ஆரோக்கியம் :

இந்த மாதத்தில், உங்கள் வெற்றி மற்றும் சந்தோஷம் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும். உங்கள் உடல்நிலை முன்னேற்றம் இருக்கும். நீங்கள் மன அழுத்தம் இல்லாத அமைதியான வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். இந்தக் காலகட்டத்தில் இயற்கை உணவுக்கு முக்கியத்துவம் அளியுங்கள்.

தனுசு ராசி மாணவர்கள் :

மாணவர்கள் வெளியே செல்வதில் நேரத்தைச் செலவிடுவதற்கு பதிலாகக் கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டு படிப்பது நல்லது. நன்றாகப் படிப்பதோடு படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். உங்கள் நட்பு வட்டாரம் புதிய நபர்களின் வருகையால் களை கட்டும்.

உங்களின் ஜோதிடம், புரோகிதம், எண்கணிதம், ராசிரத்தினம் தேடலுக்கு எங்களை அணுகவும்.
 

சுப நாட்கள் : 5,6,9,10,23,24,25

அசுப நாட்கள் : 3,4,11,12,26,27,30

banner

Leave a Reply

Submit Comment