AstroVed's End of Season Sale: Up to 50% OFF on our Packages, Fire Labs, Monthly Powertimes, Mantra Writing & Sacred Products Order Now

மீனம் ஏப்ரல் மாத ராசி பலன் 2020 | April Month Rasi Palan 2020 Meenam

March 11, 2020 | Total Views : 1,026
Zoom In Zoom Out Print

மீனம் ராசி பொதுப்பலன்கள் :

இந்த மாதம் உங்கள் உடல்நிலை சாதாரணமாக இருக்கும். உணவு கட்டுப்பாட்டிற்கு முக்கியத்துவம் அளியுங்கள். தைரியசாலிகளாக இருப்பீர்கள். தாயின் உடல் நிலையில் கவனமாக இருக்கவும். நீங்கள் மேற்கொள்ளும் எல்லா செயல்களிலும் சாதாரண பலன்களே கிட்டும். சமூக வட்டத்தில் புதிய தொடர்புகள் அதிகரிக்கும். தொழில் ரீதியாக உங்கள் மதிப்பை நிரூபிப்பதற்கு இது சரியான நேரம். ஊதிய உயர்வு உங்களுக்குத் திருப்தியை அளிக்கும். விருந்துகளில் பங்கேற்க ஆர்வம் காட்டுவீர்கள். இந்தக் காலகட்டத்தில் ஆன்மீக பயணங்களுக்கு நீங்கள் செலவு செய்யலாம். ஆன்மீக குருமார்களையும் சந்திக்கலாம் இதன் மூலம், அவர்கள், உங்கள் வாழ்க்கையைச் சிறந்த முறையில் நடத்துவதற்கான வழிகாட்டுதலை வழங்குவார்கள்.

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

மீனம் ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை :

இந்த மாதத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் குதூகலமாக மேற்கொள்ளும் பயணங்களால் நீங்கள் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவீர்கள். திருமணத்திற்கு ஏற்ற வரன்களைப் பெறுவீர்கள். ஆனால், வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பதில் நீங்கள் மிகவும் கவனமாக இருப்பீர்கள்.மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

மீனம் ராசி நிதி :

இந்த மாதம் நிதி நிலைமை சாதாரணமாக இருக்கும். பூமி சம்பந்தப்பட்ட சொத்துக்களினால் லாபம் அடைய வாய்ப்பு உண்டாகும். உங்களுடைய நிதி சம்பந்தமான விஷயங்களில் படிப்படியான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். பணத்தைச் சேமிப்பதற்கான உங்களுடைய ஒவ்வொரு முயற்சியும் சுலபமாக வெற்றி பெறும்.

மீனம் ராசி வேலை :

இந்த மாதத்தில், வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அது உங்கள் வியாபாரத்தை மேம்படுத்தும். உங்கள் நேர்மறை எண்ணங்களும், உடனடியாகச் செயலில் இறங்கும் ஆற்றலும், உங்களுக்கு பெரும் நன்மையைச் செய்யும். புதிய ஒப்பந்தங்களைச் செய்து கொள்ளத் தகுந்த காலம் இது.

மீனம் ராசி தொழில் :

இந்த மாதம் முன்னேற்றங்கள் மெதுவாகத்தான் வந்து சேரும். உங்கள் தைரியமான அணுகுமுறையும் சுதந்திரமான இயல்பும் உங்களுடைய தொழில் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். வியாபாரத்தில் நீங்கள் தொடர்ந்து மேற்கொள்ளும் முயற்சிகள், உங்களுக்கு நல்ல வாய்ப்புகளைப் பெற்றுத் தரும்.

மீனம் ராசி தொழில் வல்லுநர் :

இந்த மாதம் உங்கள் முயற்சிகளைத் தொடருங்கள். பணிகளில் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி சிறப்பாக செயலாற்றுங்கள். நேரத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப உங்கள் திட்டங்களை நீங்கள் திட்டமிட வேண்டும். நீங்கள் எதிர்பார்த்த பலன்களை பெறலாம்.

மீனம் ராசி ஆரோக்கியம் :

இந்த மாதம், மருத்துவரின் அறிவுரைகளையும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். அதிக வேலைகள் காரணமாக உங்கள் உடல்நலத்திற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க முடியாமல் போக நேரிடலாம். நீங்கள் சத்தான உணவை உட்கொள்ள வேண்டும்.

மீனம் ராசி மாணவர்கள் :

மாணவர்களுக்கு இந்த மாதம் சுமாராகதான் இருக்கும். சில நேரங்களில், உங்களது அதீதமான நம்பிக்கை, பாடங்களில் கேளிக்கையாக இருக்கத் தூண்டும். இதனால் படிப்பில் பிரச்னைகள் ஏற்படலாம். மனமுடைந்து போகாமல், தொடர்ந்து தீவிரமாகப் படித்தால், நல்ல பலன் கிடைக்கும்.

உங்களின் ஜோதிடம், புரோகிதம், எண்கணிதம், ராசிரத்தினம் தேடலுக்கு எங்களை அணுகவும்.

சுப தினங்கள்:    3,4,11,12,16,17,30

அசுப தினங்கள்:   5,6,9,10,18,19,20.

banner

Leave a Reply

Submit Comment