துலாம் ராசி பொதுப்பலன்கள் :
இந்த மாதம் மிதமான பலன்களை தரும். தன வரவு நன்றாக இருக்கும். தொழில் துறையில் அதிகமான உழைப்பும், கடுமையான முயற்சியுடனும் லாபங்களை பெறுவீர்கள். இருந்தாலும் சிறுது மந்தமாகவும் காணப்படும். இளைய சகோதரனால் நன்மைகள் ஏற்படும். தாய் வழியில் சொத்துக்கள் வந்தடையும். காதல் விவகாரங்களில் இந்த மாதம் கவனமாக இருக்கவேண்டும். வேலை செய்யும் இடத்தில் உயர்பதவிகள் வர வாய்ப்பு அதிகம். கணவன், மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். தகப்பனாரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். தொழில் துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பல வகையில் லாபம் உண்டாகும்.
இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!
துலாம் ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை :
இந்த மாதத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உறவு வலுவாக இருக்கும். மகிழ்ச்சியான நேரத்தை அனுபவிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் நல்லுறவு காணப்படும். ஆனால், தவறான அணுகுமுறை காரணமாக திருமணத்துக்கான நல்ல வரன்களை நீங்கள் இழக்க நேரிடலாம்.மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
துலாம் ராசி நிதி :
இந்தமாதம் நிதி நிலைமை சிறப்பானதாக இருக்கும். உங்கள் செலவினங்களை கவனமாகத் திட்டமிடுங்கள். பிற செலவினங்களைக் குறைப்பதன் மூலம், உங்கள் கடன்களைத் தீர்க்க முடியும். மொத்தத்தில், இந்த மாத செலவுகள் சாதாரணமாகவே இருக்கும்.
துலாம் ராசிவேலை :
வேலையில் இருப்பவர்களுக்கு சிறந்த முன்னேற்றமான காலமாகும். எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப உங்கள் பணி அமையும். உங்கள் நேர்மையும், அர்ப்பணிப்பும் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். பணியிடத்தில் உங்கள் மதிப்பை நிரூபிக்க ஒரு நல்ல வாய்ப்பு உங்களைத் தேடி வரும்.
துலாம் ராசி தொழில் :
இந்த மாதம் உங்கள் தொழில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். நீங்கள் எந்த வகையான வேலையை எடுத்துச் செய்தாலும் அதில் சிறப்பாக செயல்படுவீர்கள். சிறந்த வகையில் உங்கள் திட்டங்கள் செயல்படுத்தப்பட பிற வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடுவது நல்லது. மேலும் தொடர்ந்து அவர்களோடு நல்லுறவை தொடருங்கள்.
துலாம் ராசி தொழில் வல்லுநர் :
இந்த மாதம் சிறப்பான பலன்களை அடைய பணிகளில் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி சிறப்பாக செயலாற்றுங்கள். நீங்கள் எதிர்பார்த்த பலன்களை அதன் மூலம் நீங்கள் பெறலாம். நேரத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப உங்கள் திட்டங்களை நீங்கள் திட்டமிட வேண்டும்.
துலாம் ராசி ஆரோக்கியம்
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நீங்கள் ஒரு கண்டிப்பான உணவு கட்டுப்பாட்டை பராமரிக்க வேண்டும். தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். அது உங்கள் உடலைச் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.
துலாம் ராசிமாணவர்கள் :
இம் மாதம் கல்வி முன்னேற்றம் சாதாரணமாகவே இருக்கும். கடும் முயற்சிக்குப் பின்னரே பலன் கிடைக்கும். நீங்கள் நடைமுறையில் பாடங்களை நன்கு தெரிந்து கொள்வீர்கள், ஆயினும் அவற்றைப் பற்றிய ஆழ்ந்த அறிவு உங்களிடம் இருக்கும்.உங்களின் ஜோதிடம், புரோகிதம், எண்கணிதம், ராசிரத்தினம் தேடலுக்கு எங்களை அணுகவும்.
சுப நாட்கள் : 1,2,5,6,18,19,20,28,29
அசுப நாட்கள் : 7,8,21,22,26,27

Leave a Reply