AstroVed's End of Season Sale: Up to 50% OFF on our Packages, Fire Labs, Monthly Powertimes, Mantra Writing & Sacred Products Order Now

மகரம் ஏப்ரல் மாத ராசி பலன் 2020 | April Month Rasi Palan 2020 Magaram

March 10, 2020 | Total Views : 877
Zoom In Zoom Out Print

மகர ராசி பொதுப்பலன்கள் :

இந்த மாதம் சிலருக்கு தெய்வீக வெளியூர் பயணங்கள் ஏற்படலாம். இருந்தாலும் மனதில் ஏதோ ஒரு கவலை உங்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். அடிக்கடி தலைவலியும், மன குழப்பங்களும் ஏற்படலாம். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படலாம் கவனம் தேவை. உடல்நிலையில் சிறுபாதிப்புகள் உண்டாகும். இளையசகோதரர்களால் உங்களுக்கு நன்மை ஏற்படலாம். தாய் வழி பாசம் உண்டாகும். நிதிநிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இருப்பினும் செலவுகளை குறைத்து கொள்ளுங்கள். காதல் மலரும். குழந்தைகளும் நன்மை அடைவார்கள். தெய்வீகத்தில் நாட்டம் அதிகமாக இருக்கும். காதல் வாழ்க்கை இனிக்கும்.

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

மகர ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை :

காதல் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்கும். கணவன், மனைவி உறவில் நிலவும் இனிய சூழல், உங்களுக்கு மன நிறைவு தரும். ஆயினும், சில குடும்ப விஷயங்களில் நீங்கள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உங்கள் வரன் தேடும் முயற்சிகள் தொடரும், ஆனால் பொருத்தமான வரன் அமைவதற்குப் பொறுமை தேவைப்படலாம்.மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

மகர ராசி நிதி :

இந்த மாதம், உங்கள் நிதி நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். எனவே எந்த விஷயத்தைச் செய்வதற்கு முன்பாகவும் இரண்டு முறை யோசியுங்கள். அன்றாட தேவைகளால் வீண் செலவு ஏற்படலாம். உங்கள் சேமிப்பு நிதி உங்கள் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய உதவியாக இருக்கும். குடும்பத்தினரோடு நீங்கள் ஆன்மீகப் பயணம் செல்ல நேரிடலாம்.

மகர ராசி வேலை :

வேலையைப் பொறுத்த வரை இந்த மாதம் திருப்திகரமான காலமாக இருக்கும். கூடுதல் பொறுப்புகள் மேலும் அதிகரிக்கலாம். கொடுக்கப்பட்ட கடமைகளை சரியாக நிறைவேற்ற வேண்டும். இதனால் வரும் பாராட்டுகள் உங்களுக்கு மிகுந்த சந்தோஷத்தையும், திருப்தியையும் தரும்.

மகர ராசி தொழில் :

இந்த மாதம், உங்கள் தொழிலை மேம்படுத்தச் சமூக ரீதியாக நல்ல ஆதரவு கிடைக்கும். உங்கள் வியாபார நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். நீங்கள் தொலைதூர பயணம் மேற்கொள்வீர்கள். இது உங்களுக்குத் தொழில் ரீதியாக பணம் ஈட்ட உதவியாக இருக்கும்.

மகர ராசி தொழில் வல்லுநர் :

இந்த மாதம், நீங்கள் வேலையில் கவனமாக இருக்க வேண்டும். கோபத்தைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது வேலையில் ஏமாற்றத்தை அளிக்கலாம். உங்கள் தொழில் ரீதியான அனைத்துப் பணிகளையும் கவனமாகவும் முறையாகவும் முடியுங்கள். பனிச்சுமை அதிகரிக்கும்.

மகர ராசி ஆரோக்கியம் :

இந்த மாதம் உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும். அதிக வேலைகள் காரணமாக உங்கள் உடல்நலத்திற்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க முடியாமல் போக நேரிடலாம். நீங்கள் நேரம் தவறி உணவு எடுத்துக்கொள்வதன் காரணமாகவும் இருக்கலாம்.

மகர ராசி மாணவர்கள் :

படிப்பில் உங்கள் கடின முயற்சி காரணமாக நல்ல நிலை அடைவீர்கள். ஆனால், தேவையற்ற எண்ணங்கள் படிப்பின் போது தொந்தரவு கொடுக்கலாம். இதனால் உங்கள் கவனம் திசை திரும்ப வாய்ப்பு ஏற்படும். இது கல்வி முன்னேற்றத்தைக் குறைக்கும்.உங்களின் ஜோதிடம், புரோகிதம், எண்கணிதம், ராசிரத்தினம் தேடலுக்கு எங்களை அணுகவும்.

சுப தினங்கள் : 5,6,9,10,23,24

அசுப தினங்கள் : 1,2,7,8,11,12,25,26,27,30.

banner

Leave a Reply

Submit Comment