மிதுனம் ராசி பொதுப்பலன்கள் :
இந்த மாதம் உங்கள் உடல் நிலையிலும், மன நிலையிலும் அக்கறை தேவை. பலவிதமான குழப்பங்கள் ஏற்ப்படும். எந்த ஒரு தொழிலிலும், செயலிலும் தெளிவு இல்லாமல் காணப்படுவீர்கள். பணம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் மற்றவர்களிடம் மனகசப்பு ஏற்ப்படலாம். இருந்தாலும் இதை எல்லாம் சமாளிப்பீர்கள். குழந்தைகளினால் செலவுகள் அதிகரிக்கும். உடல் நலனில் சிறப்பு கவனம் தேவை. எதிரிகளால் தொல்லை ஏற்படும். நீங்கள் பலவீனத்தால் பாதிக்கப்படலாம். தற்போது செலவுகள் அதிகரிக்கக்கூடும், எனவே கட்டுப்பாடு அவசியம். உங்களுக்குக் கீழே பணிபுரிபவர்களின் தவறான அபிப்ராயங்கள், உங்கள் முயற்சியால் விலகும். ஆரோக்கியம் படிப்படியாக சீரடையும். தொழில் ரீதியாக, நன்மை பயக்கக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். வெளியூர் பயணங்கள் போக வாய்ப்பு ஏற்படும்.
இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!
மிதுனம் ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை :
காதல் வாழ்க்கை இந்த மாதம் சுமாரான மாதமாகும். குடும்ப வாழ்க்கையில் உங்கள் வாழ்க்கைத் துணையோடு உங்கள் உறவுகளில் பாதிப்பு இருக்கும். உங்கள் சமூகத் தொடர்புகள் சிறப்பாக இருக்கும். பொறுமை மற்றும் விழ்ப்புணர்வுடன் செயல்பட்டால் இல்லற வாழ்வு இனிக்கும்.மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
மிதுனம் ராசி நிதி :
இந்த மாதம் பொருளாதார சூழ்நிலை ஏற்றதாழ்வாக இருக்கும். எந்த விஷயத்தைச் செய்வதற்கு முன்பாக இரண்டு முறை யோசியுங்கள். அன்றாட தேவைகளால் வீண் செலவு ஏற்படலாம். கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம். சிக்கனம் தேவை.
மிதுனம் ராசி வேலை :
இது உங்களுக்கு ஒரு சாதாரண காலமாக இருக்கும். நீங்கள் கடின முயற்சிகள் செய்து உங்கள் எல்லா எதிர்பார்ப்புகளையும் அடைவீர்கள். புதிய தொழில் நுட்பங்களால் நல்ல அனுபவத்தைப் பெறுவீர்கள். உடன் பணியாற்றும் ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள்.
மிதுனம் ராசி தொழில்
இந்த மாதம் சில நடவடிக்கைகளை நீங்கள் தள்ளிப்போட வேண்டியிருக்கும். தொழிலில் ஒப்பந்தங்கள் மூலம் சிறந்த பலன் காண இயலாது. தற்போதுள்ள பணிகளில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். கூட்டாளிகள் பணிகளை நிலுவையில் வைத்திருப்பதற்கான சாத்தியம் உள்ளது.
மிதுனம் ராசி தொழில் வல்லுநர்
இந்த மாதம் உங்கள் நடவடிக்கைகள் சிறப்பாக இருக்கும். வேலையில் தாமதங்கள் காணப்படும். அவற்றைக் கண்டு நீங்கள் நம்பிக்கை இழந்து விடாதீர்கள். உங்கள் முயற்சிகளைத் தொடருங்கள். நீங்கள் எதிர்பார்த்த பலன்களை கிடைக்க தாமதம் ஏற்படும்.
மிதுனம் ராசி ஆரோக்கியம் :
இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். இருந்தாலும் உங்கள் உடல் நலனில் அக்கறை தேவை. வாதம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்படுவீர்கள். எனினும், உங்கள் உடல் நலத்தில் அலட்சியம் காட்டாதீர்கள். நல்ல ஒய்வும் போதுமான தூக்கமும் உடலுக்கு நலம் விளைவிக்கும்.
மிதுனம் ராசி மாணவர்கள் :
படிப்பதற்கும், சிறந்த கல்வி அனுபவத்தைப் பெறுவதற்கும் இது சரியான நேரம். உங்கள் பரந்த மனப்பான்மை உங்களுடைய தனிப்பட்ட திறமைகளையும், உங்கள் நற்பெயரையும் மேம்படுத்த உதவும். உங்கள் செயல் திறனால் பெற்றோர்கள் மன மகிழ்ச்சியடைவார்கள்.உங்களின் ஜோதிடம், புரோகிதம், எண்கணிதம், ராசிரத்தினம் தேடலுக்கு எங்களை அணுகவும்.
சுப தினங்கள் : 9,10,18,19,20,23,24,25
அசுப தினங்கள் : 10,11,16,17,26,27

Leave a Reply