AstroVed Menu
AstroVed
search
search

கடகம் ஏப்ரல் மாத ராசி பலன் 2020 | April Month Rasi Palan 2020 Kadagam

dateMarch 10, 2020

கடக ராசி பொதுப்பலன்கள் :

இந்த மாதம் பல்வேறு பணிகள் ஒரே நேரத்தில் செய்ய வேண்டிய சூழ்நிலையில் கவனமாக நடந்து கொள்ளவும். நீங்கள் மேற்கொள்ளும் எல்லா செயல்களிலும் சாதாரண பலன்களே கிட்டும். உங்கள் தொழில் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பொருளாதாரம் சம்பந்தமான விஷயங்களில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். ஆனாலும் உங்களால் அவற்றைச் சிறந்த முறையில் கையாள முடியும். தேவையான நேரங்களில் உங்களுடைய கூர்மையான அறிவாற்றல் உங்களுக்கு கை கொடுக்கும். குடும்ப வாழ்வில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், உங்கள் அணுகுமுறையால் சுமுகமாக்கிவிடுவீர்கள். கடுமையான வேலைப்பளுவால் உங்கள் தனிப்பட்ட தேவைகளுக்கு நேரம் ஒதுக்க முடியாமல் இருக்கலாம்.

இந்தியாவின் சிறந்த ஜோதிடர்களை தொடர்பு கொள்ள இங்கே கிளிக் செய்க!

கடக ராசி காதல் மற்றும் திருமண வாழ்க்கை :

காதலர்களுக்கு இந்த மாதம் திருமணத்தில் முடியும் காலமாகும். இந்த மாதத்தில் உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை அனுபவிப்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உறவு நன்றாக இருக்கும். உங்கள் எல்லாச் செயல்களுக்கும் சரியான பலன்கள் கிடைக்கும்.மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

கடக ராசி நிதி :

நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் சுமாராக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் வீண் விரையங்கள் அதிகமாக காணப்படும். தாய் வழியில் லாபங்கள் வந்தடையும். தொழில் மூலம் லாபம் வந்தடையும். கடன் வாங்கும் சூழ்நிலையை தவிர்க்கவும்.

கடக ராசி வேலை :

இந்த மாதத்தில், வேலையில் பனிச்சுமை அதிகரிக்கும். எதிலும் பொறுமை மற்றும் விழிப்புணர்வுடன் செயல்படுங்கள். கீழே பணிபுரிபவர்களிடம் நட்புடன் பழக வேண்டும். முடிந்தவரை உங்கள் அனைத்துப் பணிகளையும், நிலுவையில் வைக்காமல், விரைவாக முடிக்க வேண்டும்.

கடக ராசி தொழில் :

இந்த மாதம் தொழில் சார்ந்த விஷயங்களில் கவனமாக செயல் படுங்கள். தொழில் ரீதியான போட்டி காரணமாக நீங்கள் கஷ்டங்களையும் சந்திக்க நேரலாம். பூமி சம்பந்தப்பட்ட தொழில்களில் அதிகமான வருமானத்தை பெறலாம். தொழிலில் உங்கள் திறமையால் பிறர் உங்களது முக்கியத்துவத்தை உணர்வார்கள்.

கடக ராசி தொழில் வல்லுநர் :

இந்த மாதம் உங்களுக்கு சாதாரண மாதமாக இருக்கும். அவசர முடிவுகளை தவிர்த்து, நிதானமாக சூழ்நிலைகளை ஆராய்ந்து செயல்படவும். பதவி உயர்வு வாய்ப்புகள் அல்லது புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் தாமதமாகும்.

கடக ராசி ஆரோக்கியம் :

இந்த மாதம் உங்கள் உடல் நலத்தில் அலட்சியம் காட்டாதீர்கள். உங்கள் ஆரோக்கியம் சுமாராக இருக்கும். வாழ்க்கை, மன அழுத்தம் எதுவும் இன்றி அமைதியாகச் செல்லும். எனினும், நல்ல ஒய்வும் போதுமான தூக்கமும் உடலுக்கு நலம் விளைவிக்கும்.

கடக ராசி மாணவர்கள் :

இந்த மாதம் ஒரு சாதாரண காலமாகும். மாணவர்கள் சுறுசுறுப்பாக காணப்படுவார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற உங்கள் ஆசிரியர்களிடமிருந்து தன்னம்பிக்கையைக் கற்றுக்கொள்வது நல்லது. கலாச்சார விழாக்களில் பங்கு பெறுவதன் நல்ல பலனை தரும். உங்களின் ஜோதிடம், புரோகிதம், எண்கணிதம், ராசிரத்தினம் தேடலுக்கு எங்களை அணுகவும்.

சுப நாட்கள் :   11,12,21,22,26,27.

அசுப நாட்கள் : 1,2,13,14,15,18,19,20,28,29


banner

Leave a Reply