Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW

2019 April Month’s Rasi Palan for Kanni

March 6, 2019 | Total Views : 3,458
Zoom In Zoom Out Print

கன்னி ராசிபொதுப்பலன்கள்

கன்னி ராசி அன்பர்கள் இந்த மாதம் தங்கள் அக வாழ்வில் பல முன்னேற்றங்களை கண்டு மகிழ்ச்சி அடையும் காலம் ஆகும். நீங்கள் கடினமான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இருந்த போதிலும் நீங்கள் சிரித்தமுகத்துடன் எல்லாப்  பணிகளையும் மேற்கொள்வீர்கள். வளர்ச்சியை நோக்கி நீங்கள் பணியில் கவனம் செலுத்துவீர்கள். புன்னகையால் உங்கள் லட்சியங்களை வெல்வீர்கள். உங்கள் அனைத்துக் குறிக்கோள்களும் நிறைவேறக் காண்பீர்கள். நன்மை தீமைகளை ஆராயாமல் நீங்கள் எந்த காரியத்திலும் ஈடுபடாதீர்கள். உங்கள் சிறந்த நடத்தை மற்றும் தாராள மனப்பான்மை எல்லோராலும் போற்றப்படும். இந்த மாதம் உங்கள் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் இருக்கும் என்பதால் உங்கள் உடல் நிலை சுமாராக காணப்படும். 

கன்னி ராசி - காதல் / திருமணம்

உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பழகும் போது நீங்கள் உங்கள் உணர்ச்சிகளை அதிகம் வெளிக்காட்டாமல் இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அவர்களின் உணர்வுகளை எல்லாக் கோணங்களில் இருந்தும்  புரிந்து கொண்டு நடந்து கொள்ள முயலுங்கள். உங்கள் வாழ்க்கைத் துணை மற்றும் குடும்பத்தின் பிற உறுப்பினர்களிடம் நல்லுறவு பராமரியுங்கள். நீங்கள் அன்பு செலுத்தும் போது அவர்கள் சார்பில் அவர்களும் தானாகவே உங்கள் மீது அன்பு செலுத்தத் தொடங்குவார்கள். 

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: சனி பூஜை 

கன்னி ராசி - நிதி

இந்த மாதம் கன்னி ராசி அன்பர்களுக்கு பண விஷயங்களில் ஆதாயம் சாதரணமாகவே காணப்படும். இந்த உலக வாழ்வில் எந்த விஷயமும் அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை. போராடினால் தான் வெற்றி கிட்டும். குடும்பத்தில் இருக்கும் வயதானவர்களுக்காக நீங்கள் மருத்துவ செலவு செய்ய வேண்டியிருக்கும். நீங்கள் தொலை தூர இடங்களுக்கு பயணம் செல்லத் தயாராக இருங்கள்.

நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்:சூரியன்  பூஜை

கன்னி ராசி - வேலை

பணியிடத்தில் உங்கள் வெற்றி மற்றும் அமைதியை தக்க வைத்துக் கொள்வது உங்கள் கையில் தான் உள்ளது. எனவே உங்கள் மேலதிகாரிகளிடம் நீங்கள் நல்லுறவு பராமரிக்க வேண்டும். பணியில் நற்பெயரும் மதிப்பு மரியாதையும் பெற நீங்கள் புதுமையாக சிந்தித்து செயல்பட வேண்டும். உங்கள் பணியில் நீங்கள் வெற்றி காண உங்களுக்கு அளிக்கப்பட்ட பணிகளை குறித்த நேரத்திற்கு முன்பே முடித்து விட வேண்டும்.

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்:புதன்  பூஜை

கன்னி ராசி - தொழில்

ஓடி ஆடி உழைத்தால் தான் தொழிலில் முன்னேற முடியும். நீங்கள் பல இடங்களுக்கும் பயணங்களை மேற்கொண்டு கடின முயற்சி மூலம் வெற்றிகளைக் காண்பீர்கள். வாக்கு சாதுரியம் தொழிலில் மிகவும் அவசியமான திறன் ஆகும். எனவே உங்கள் உரையாடலை நீங்கள் கவனமாக மேற்கொள்ள வேண்டும். முடிக்காமல் பாக்கி வைத்திருக்கும் பணிகள், வர வேண்டிய பாக்கி தொகையை வசூல் செய்தல் போன்றவற்றை நீங்கள் இந்த மாதம் செய்வது சாலச் சிறந்தது. 

கன்னி ராசி - தொழில் வல்லுநர்

முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதை நன்கு அறிந்து நீங்கள்  விடாமுயற்சியுடன் செயல்படுவீர்கள். உங்கள் திறமைகள் பளிச்சிடும். என்றாலும் உங்கள் முயற்சிக்கான பலன் சிறிது தாமதமாக நிச்சயமாக கிடைக்கும். எனவே நீங்கள் படிப்படியாக புகழ் ஏணியின் உச்சிக்கு செல்வீர்கள். மற்றவர்களுடன் பழகும் போது சிறிது இடைவெளி விட்டு முடிந்த அளவில் குறைவாகப் பழகுங்கள். மற்றவர்களுடன் சண்டை சச்சரவுகளைத் தவிருங்கள். 

கன்னி ராசி - ஆரோக்கியம்

உங்கள் உடல் நலனில் நீங்கள் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். மன நலம், உடல் நலம் இரண்டும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டது என்பதால் நீங்கள் அமைதியான மனநிலையை மேற்கொள்ள வேண்டும். இதனால் குடும்பத்தில் ஏற்படும் சண்டை சச்சரவுகளை  தவிர்க்கலாம். உடல் நலத்தையும் காத்துக் கொள்ளலாம். அதிக பயணங்களை தவிர்த்து விடுங்கள். அதனால் உடல் வலி போன்ற உபாதைகளை தவிர்க்கலாம். 

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை

கன்னி ராசி - மாணவர்கள்

கன்னி ராசி மாணவர்களுக்கு இந்த மாதம் அபாரமான கற்றல் திறன் காணப்படும். வாக் தேவி உங்கள் வாக்கில் வந்து அருள் புரியும் தருணம் இது. இதனால் உங்கள் பேச்சு பிறரின் கவனத்தை கவர்ந்து இழுக்கும். உங்கள் தன்னம்பிக்கை குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சிறந்த கல்வி நிறுவனத்தில் உயர்படிபிற்கான சேர்க்கை கிடைக்கப் பெறுவீர்கள். 

கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்

சுப தினங்கள்:    1,2,3,10,11,12,15,16,17,19,21,22,24,25,26,29,30.
அசுப தினங்கள்: 4,5,6,7,8,9,13,14,18,20,23,27,28.

banner

Leave a Reply

Submit Comment