Navaratri 2023 - Invoke the Blessings of 28 Forms of Divine Feminine Energy to Destroy Negativity and Bestow Power, Prosperity and Progress in Life Join Now
India's No. 1
Online Astrology &
Remedy Solution

2019 April Month’s Rasi Palan for Rishabam

March 6, 2019 | Total Views : 2,252
Zoom In Zoom Out Print

ரிஷப ராசி - பொதுப்பலன்கள்

ரிஷப ராசி அன்பர்கள் இந்த மாதம் அமைதி காக்க வேண்டிய மாதம் ஆகும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதன் மூலம் நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் சரியான முறையில் பதட்டம் இல்லாமல் செயலாற்ற முடியும். பதறிய காரியம் சிதறிப் போகும் என்பதால் நீங்கள் மனப் பதட்டம் இல்லாமல் செயலாற்ற வேண்டியது அவசியம். எனவே நீங்கள் உணர்ச்சி வசப்படாமல் இருக்க வேண்டும். உணர்ச்சி வசப்படுவதன் மூலம் நீங்கள் ஏமாற்றத்தை அடைய நேரிடும். ஆகவே தியானம் மேற்கொண்டு மனதை ஒருநிலைப்படுத்தி கவனமாக பணியாற்றுங்கள். இந்த மாதம் நீங்கள் உங்கள் நெருங்கிய நண்பர்கள் மற்றும் சொந்த பந்தங்களுடன் சில பிரச்சினைகளை சந்திக்க நேரும். சமயோசித புத்தியுடன் நடந்து கொண்டால் நீங்கள் சூழ்நிலைகளை சமாளிக்கலாம். இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ரிஷப ராசி - காதல் /திருமணம்

இந்த மாதம் உங்கள் மனதில் காணப்படும் பதட்டம் மற்றும் நீங்கள் உணர்ச்சிப் பூர்வமாக செயல்பட நேரும் காரணத்தால் உறவுகளை பராமரிப்பதில் சில சிக்கல்கள் காணப்படும். அவர்களின் தேவைகள் அதிகரிக்கும். அதனை நிறைவேற்றும் பொறுப்பு உங்களுக்கு ஏற்படும். நீங்கள் பதட்டப்படாமல் செயல்பட வேண்டிய நேரம் இது.  அவர்களுடன் நல்லுறவு பராமரிக்க முயல வேண்டும். முக்கியமாக உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான உறவு பராமரிக்க வேண்டும். 

திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: செவ்வாய் பூஜை

ரிஷப ராசி - நிதி 

பிள்ளைகளின் மகிழ்ச்சி தானே பெற்றவர்களுக்கு இன்பம் அளிக்கும். அவர்களின் ஆசையை நிறைவேற்றத் தானே கஷ்டப்பட்டு பணம் சம்பாதிக்கிறோம். இந்த மாதம் நீங்கள் உங்கள் குழந்தைகளின் ஆடம்பர தேவைகளுக்காக பணம் செலவு செய்வீர்கள். பண விஷயத்தில் நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள். நிதி நிலைமையும் இந்த மாதம் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். 

நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்:புதன் பூஜை

ரிஷப ராசி - வேலை

இந்த மாதம் பணியிடத்தில் நீங்கள் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் பல சிக்கல்களைத்  தீர்க்கலாம். சக பணியாளர்களுடன் ஏற்படும் பிரச்சினைகள் சுமூகமாக தீர நீங்கள் அவர்களை புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும். மனதை  தளரவிடாமல் செயலாற்றுங்கள். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மேலதிகாரிகளுள் ஒரு சிலர் உங்களுக்கு ஆதரவாக இருக்கலாம். அவர்கள் மூலம் நீங்கள் பணியில் உயர் பதவி பெறலாம். 

வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சனி  பூஜை 

ரிஷப ராசி - தொழில்

இந்த மாதம் நீங்கள் புதிய ஒப்பந்தகளைப் பெற்று சந்தோசமும் திருப்தியும் அடைவீர்கள். உங்களின் உற்சாகமான மன நிலை தொழில் முன்னேற்றத்திற்கு உதவிகரமாக இருக்கும். நீங்கள் நேரடியாக எந்த ஒரு பணியிலும் ஈடுபட வேண்டும். உங்கள் கூட்டாளிகளிடம் பணிகளை ஒப்படைத்திருந்தாலும் நீங்களும் அப்பணிகளை கண்காணிக்க  வேண்டும். இதன் மூலம் அவரிகளின் பணி ஈடுபாட்டை நீங்கள் அதிகரிக்கலாம்.  

ரிஷப ராசி - தொழில்வல்லுநர்

ரிஷப ராசி தொழில் வல்லுனர்களே! நீங்கள்  இந்த மாதம் கடினமாக பணியாற்றி  சக பணியாளர்கள் மற்றும் மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பீர்கள். கடமை கண்ணியம் கட்டுப்பாடு என நீங்கள் நேர்மையுடன் பணியாற்ற வேண்டும். உங்களின் நேர்மை மற்றும் சிறந்த தகவல் தொடர்பு மூலம் நீங்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு போன்றவற்றைப் பெறலாம். பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யும் பன்முகத் திறமை உங்களிடம் காணப்படும். 

ரிஷப ராசி - ஆரோக்கியம்

மனம் ஆரோக்கியமாக இருக்கும் போது உடல் நிலையும் ஆரோக்கியமாக இருக்கும். மனச் சோர்வு உங்களை ஆட்கொள்ளாமல் காத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு அஜீரணம் மற்றும் வயிற்றுக் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ள காரணத்தால் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் நன்கு பராமரிக்க வேண்டும். உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்திலும் சற்று கவனமாக இருங்கள். 

ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : சூரியன் பூஜை

ரிஷப ராசி - மாணவர்கள்

இந்த மாதம் ரிஷப ராசி மாணவர்கள் படிப்பில் மிகச் சிறப்பாக செயல்படுவார்கள். சிரத்தையுடன் செயல்பட்டு வெற்றியும் காண்பார்கள். மாணவர்களின் தன்னம்பிக்கை மிகுந்து காணப்படும். அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சாகும். எனவே தன்னம்பிக்கையை அளவு மீறாமல் காத்துக் கொள்ள வேண்டும். நண்பர்களுடன் வெளியிடங்களுக்கு சென்று திருப்தியும் மன ஆறுதலும் அடைவீர்கள்.
 
கல்வியில் சிறந்து விளங்கப் பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்

சுப தினங்கள்:    1,2,3,8,10,11,12,15,16,17,19,21,22,29,30.
அசுப தினங்கள்: 4,5,6,9,13,14,18,20,23,24,25,26,27,28.

Leave a Reply

Submit Comment