Dattatreya Jayanthi 2023: Power Day to Invoke Dattatreya to Remedy Problems in Life, Regain Prosperity & Attain Material Fulfillment Join Now
India's No. 1
Online Astrology &
Remedy Solution

2018 April Month’s Rasi Palan for Rishabam

February 23, 2018 | Total Views : 1,793
Zoom In Zoom Out Print

ரிஷபம் ராசி - பொதுப்பலன்கள் இந்த மாதம் நீங்கள் உங்கள் மரியாதையை மீண்டும் பெற உகந்த நேரம். உங்களுக்கு பல வகைகளிலிருந்தும் நிதி உதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அதனை நீங்கள் முறையாகப் பயன்படுத்த வேண்டும். உங்கள் புதுமையான எண்ணங்கள் உங்கள் அன்றாட வாழ்வில் பல தாக்கங்களை ஏற்படுத்தும். உங்களின் விட்டுக்கொடுத்து செல்லும் போக்கின் காரணமாக பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.குடும்ப விஷயங்களில் யதார்த்தமாக யோசித்து செயல்படுங்கள். உங்கள் குடும்ப அங்கத்தினர்கள் உங்கள் முடிவின் மீது அதிக எதிர்பார்ப்பை கொண்டிருப்பார்கள். நீங்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் அகந்தைப் போக்கை தவிர்க்க வேண்டும். ஒழுங்குமுறையுடன் பணியாற்றுங்கள். குறுக்கு வழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்காதீர்கள். உங்கள் ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும். ரிஷபம் ராசி - காதல் / திருமணம் உங்கள் துணையிடம் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் குழப்பங்கள் காணப்படும். உங்களின் ஞாபக மறதி காரணமாக உங்கள் முடிவுகளில் தாமதங்கள் காணப்படும். தேவையற்ற எண்ணங்கள் மற்றும் உணர்சிவசப்படுதலை கட்டுப்படுத்த வேண்டும். தம்பதிகள் நல்லுறவுடன் உறவில் பெரிய அளவிலான பாதகங்கள் இல்லாமல் வாழ்வார்கள். வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் போது விவேகம் தேவை. திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம் :அங்காரக பூஜை 2018-april-months-rasi-palan-for-rishabam ரிஷபம் ராசி - நிதிநிலைமை இந்த மாதம் பணப்புழக்கம் திருப்திகரமாக காணப்படும். பங்கு வர்த்தகம் மூலம் எதிர்பார்த்த பண வரவு காணப்படும். உங்கள் வங்கியிருப்பு அதிகரிக்கும். ஆடம்பரப் பொருள் வாங்குவதற்கு செலவுகள் ஏற்படலாம். உங்கள் நண்பர்களிடமிருந்து வரவேண்டிய பணத்தை வசூல் செய்வீர்கள். நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : புதன் பூஜை ரிஷபம் ராசி - வேலை பணி வளர்ச்சி சாதரணமாக காணப்படும். கூடுதல் நேரம் தேவைப்படும் பணிகளை முடிப்பதில் சோம்பல் தன்மை காட்டாதீர்கள். சக பணியாளர்களுடன் நட்பான அணுகுமுறை கொண்டால் மகிழ்ச்சி கிடைக்கும். பணியிடத்தில் நீங்கள் சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கு கூடுதல் பணிகள் காணப்படுகின்றது. அது உங்கள் திறமைக்கு சவாலாக இருக்கும். வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி பெற பரிகாரம் : சனி பூஜை ரிஷபம் ராசி - தொழில் உங்கள் பணிக் குழு மற்றும் கூட்டாளிகளின் செயல்திறனையும் , நிலுவையில் உள்ள பணிகளை முடிக்கிறார்களா என்றும் மேற்பார்வையிட வேண்டிய நேரம். பணிகளை முடிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அதனை முடிப்பதற்கான நம்பிக்கையையும் அவர்களுக்கு ஊட்ட வேண்டும். உணர்ச்சிப்பூர்வமாக செயல்படாமல் அறிவுப்பூர்வமாக செயல்பட வேண்டும். அவர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் அவர்களை சில செயல்களில் ஈடுபடுத்துங்கள். ரிஷபம் ராசி - தொழில் வல்லுநர்கள் இந்த மாதம் பணிகள் மிக அதிகமாக காணப்படும். உங்கள் தன்னம்பிக்கை மூலம் அதனை நீங்கள் முடிப்பீர்கள். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். பணிகளை செயலாற்றுவதில் நீங்கள் பங்கு கொள்ளுங்கள். நீங்கள் எல்லாப் பணிகளையும் ஆக்கப்பூர்வமாக ஆற்றுவீர்கள். ரிஷபம் ராசி - ஆரோக்கியம் இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் படிப்படியாக உயரும். ஆரோக்கியம் குறித்த கவலை வேண்டாம். நீங்கள் முறையான உணவு உட்கொள்வதன் மூலம் ஆற்றலுடனும் சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். மன அமைதி மற்றும் பணியில் கவனம் அதிகரிக்க தியானம் மேற்கொள்ளுங்கள். ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : சூரிய பூஜை ரிஷபம் ராசி - மாணவர்கள் இந்த மாதம் நீங்கள் ஆசிரியரின் பாராட்டைப் பெறுவீர்கள். உங்கள் கற்பூர புத்தி மூலம் நீங்கள் அதிக அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். நண்பர்களுடன் வெளியிடம் செல்ல விரும்புவீர்கள். அதே சமயத்தில் உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள். உங்கள் செயல்திறன் கண்டு உங்கள் ஆசிரியர்கள் பெருமைப்படுவார்கள். கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்: 2, 3, 4, 5, 11, 13, 14, 18, 19 and 29 அசுப தினங்கள்: 7, 9, 12, 16, 20, 22, 24 and 27

Leave a Reply

Submit Comment