கன்னி ராசி - பொதுப்பலன்கள்
இந்த மாதம் உங்கள் இலக்குகளை முடிக்க சாதகமான மாதம். உங்கள் பணியை நேர்மையுடனும் கடினமாகவும் ஆற்றுவீர்கள். உங்கள் சமூக அந்தஸ்தை பராமாரிக்க நீங்கள் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் உங்கள் சமூக அந்தஸ்து உயரும். நீங்கள் புதிய உறவுகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். அது உங்கள் எதிர் காலத்திற்கு உதவும். சூழ்நிலை உங்களை யதார்த்தவாதியாகவும் புத்திசாலியாகவும் ஆக்கும். உங்கள் வருமானம் கணிசமாக உயரும். உங்கள் படிப்பிற்காக நீங்கள் வெளிநாடு செல்ல வாய்ப்புள்ளது. ஆரோக்கியப் பிரச்சினைகளை தவிர்க்க தக்க நேரத்தில் உணவு உட்கொள்ளவும்.
கன்னி ராசி - காதல் / திருமணம்
இந்த மாதம் நீங்கள் காதல் வாழ்வை அனுபவிக்கும் அதிர்ஷ்டம் உள்ளது. உங்கள் துணையிடம் உங்கள் காதலை வெளிப்படுத்த இது சிறந்த நேரம்.இந்த மாதம் நீங்கள் காதல் துணையுடன் உல்லாசமாக வெளியிடங்களுக்கு சென்று மகிழ வாய்ப்புள்ளது. உங்களுக்கு பொருத்தமான வரன் அமையும். என்றாலும் உங்கள் முடிவில் தெளிவாக இருங்கள்.உங்கள் திருமணம் குறித்து பிறரின் ஆலோசனையை நம்பாதீர்கள்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம் : சனி பூஜைகன்னி ராசி - நிதிநிலைமை
நிதிநிலைமை இந்த மாதம் மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். நீங்கள் முதலீடு செய்ய திட்டமிடலாம். ஆடம்பர பொருட்களுக்கான செலவிற்கு வாய்ப்பு அதிகம் காணப்படுகின்றது. கௌரவப் பிரச்சினை காரணமாக நீங்கள் செலவு செய்ய நேரலாம். எனவே செலவுகளை கண்காணியுங்கள். இல்லையெனில் உங்கள் மாத பட்ஜெட்டை மீறி செலவுகள் ஏற்படும்.
நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : சூரிய பூஜைகன்னி ராசி - வேலை
பணியில் உங்கள் லட்சியங்களை உணர்வதற்கான வாய்ப்பு இந்த மாதம் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் பணியில் நன்மரியாதை பெறுவீர்கள். சக பணியாளர்கள் ஆதரவு அளிப்பார்கள். என்றாலும் உங்கள் அதீத நம்பிக்கை காரணமாக ஒரு கட்டத்தில் நீங்கள் அதிருப்தி அடைவீர்கள். எல்லா விஷயங்களையும் நேர்மறையாக எடுத்துக் கொள்ளுங்கள். பணியில் காலந்தவறாதீர்கள்.
கன்னி ராசி - தொழில்
இந்த மாதம் நீங்கள் தொழிலில் தீவிரமாக இறங்குவீர்கள். உங்கள் இலக்குகளை அடைய கடினமாக பணியாற்றுவீர்கள். சில தடைகளை சந்திப்பீர்கள். பணிகள் ஆற்றுவதை கடினமாக உணர்வீர்கள். வாடிக்கையாளர்கள் மூலம் வரும் சில பிரச்சினைகளுக்கு நீங்கள் விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும். நீங்கள் நீண்ட பயணம் மேற்கொள்வீர்கள். அது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
கன்னி ராசி - தொழில் வல்லுநர்கள்
இந்த மாதம் சில சங்கடமான சூழ்நிலைகள் உங்களை பாதிக்கும். ஒவ்வொரு கட்டத்திலும் நீங்கள் புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டும். தேவையற்ற உரையாடல்களால் உங்கள் நன்மதிப்பு பாதிக்கப்படும். நீங்கள் நேர்மையாக நடந்து கொள்வதன் மூலம் உங்கள் பொறுப்புகளை பூர்த்தி செய்வீர்கள்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி பெற பரிகாரம் : புதன் பூஜைகன்னி ராசி - ஆரோக்கியம்
உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீங்கள் முறையான உணவை மேற்கொள்ள வேண்டும். இலை வகை காய்கறிகள் மற்றும் உலர் பழ வகைகளை உட்கொள்வதன் மூலம் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க இரும்பு சத்துள்ள உணவை உட்கொள்ளுங்கள். கவனம் மற்றும் மன அமைதி மேம்பட தியானம் மேற்கொள்ளுங்கள்.
ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : ஸ்ரீ வைத்தியநாத பூஜைகன்னி ராசி - மாணவர்கள்
இந்த மாதம் நீங்கள் படிப்பில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் அதீத நம்பிக்கை காரணமாக மதிப்பெண்கள் குறைய வாய்ப்புள்ளது. உங்கள் பாடங்களை முறையாக மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். உங்கள் ஆற்றல் அதிகரிக்க நீங்கள் நன்றாகத் தூங்க வேண்டும். ஏழை மாணவர்கள் தொண்டு நிறுவனங்கள் மூலம் பண உதவி பெறுவார்கள்.
கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்
சுப தினங்கள்: 4, 5, 11, 13, 14, 20, 21, 27 and 28
அசுப தினங்கள்: 2, 9, 17, 22, 24, 29 and 30
Tags: 2018 Kanni Rasi Palan April April Month Kanni Palan 2018 Matha Rasi Palan 2018 Kanni Rasi Palangal 2018 April Kanni கன்னி ராசி மாத ராசி பலன் March 2018 April Month Kanni Palan 2018 2018 Kanni Rasi Palan April Matha Rasi Palan 2018 Kanni Rasi Palangal 2018 April Kanni கன்னி ராசி மாத ராசி பலன் March 2018
Leave a Reply