2018 April Month’s Rasi Palan for Viruchigam

விருச்சிகம் ராசி -பொதுப்பலன்கள்
இந்த மாதம் உங்கள் செயல்கள் உங்கள் பொறுமையை சோதிக்கும். நீங்கள் விவேகத்துடன் முடிவுகள் எடுக்க வேண்டும். சூழ்நிலைகளை பொறுமையாகக் கையாள வேண்டும். உங்கள் பணத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் உங்கள் வருமானம் காணப்படாது. முடிந்தவரை இந்த மாதம் கடன் வாங்காதீர்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளில் கவனம் செலுத்துங்கள். குடும்பத்தில் சில சிக்கல்கள் காணப்படும். உங்கள் குழந்தைகள் மற்றும் துணையின் தேவைகளை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும். பணியில் கவனம் மேம்பட தியானம் மேற்கொள்ளவும். இந்த மாதம் உங்கள் ஆரோக்கியம் மிதமாக காணப்படும்.
விருச்சிகம் ராசி - காதல் / திருமணம்
இந்த மாதம் நீங்கள் காதல் விவகாரங்களில் கவனமாக இருக்க வேண்டும். யதார்த்தமாக யோசிக்காமல் உங்கள் துணையார் கூறுபவைகளை கேட்டு சமாதானம் கொள்ளாதீர்கள். உங்கள் தேவைகளையும் கருத்துக்களையும் புரிந்து கொள்ள உங்கள் துணைக்கும் அவகாசம் அளியுங்கள். சிறந்த துணை கிடைக்கும் வரை காதலில் பொறுமையாய் இருங்கள். எந்த முடிவையும் விரைந்து எடுக்காதீர்கள்.
திருமண வாழ்வில் நல்லிணக்கம் மேம்பட பரிகாரம் : குரு பூஜை
விருச்சிகம் ராசி - நிதிநிலைமை
இந்த மாதம் நீங்கள் எதிர்பார்க்கும் நிலுவைத் தொகை வசூலில் தாமதம் காணப்படலாம். எனவே பொறுமையுடன் இருக்க வேண்டும். நிதி சம்பந்தபட்ட எந்த வாக்குறுதியும் அளிக்காதீர்கள். அது உங்களுக்கு சாதகமாக காணப்படாது. உங்கள் வருமானம் ஓரளவு உயரும். இந்த மாத இறுதியில் உங்கள் வருமானம் ஓரளவு அதிகரிக்கும். உங்கள் செலவுகளை எச்சரிக்கையுடன் நிர்வகிக்க வேண்டும்.
நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : புதன் பூஜை
விருச்சிகம் ராசி - வேலை
இந்த மாதம் கூடுதல் பணிகளை எதிர்கொள்ளத் தயாராய் இருங்கள். பணிகள் அதிகமாகவும் சிக்கல்களுடனும் காணப்படும். உங்கள் சக்திக்கு மீறிய பணிகளுக்கு வாக்குறுதி அளிக்காதீர்கள். உங்கள் பணிகளில் போதிய கவனம் செலுத்துங்கள். உங்கள் செயல்களிலும் தகவல் தொடர்பிலும் வெளிப்படைத்தன்மை பின்பற்றினால் நிவாரணம் பெறலாம்.
விருச்சிகம் ராசி - தொழில்
உங்கள் எண்ணங்களில் காணப்படும் மாறுபாடு காரணமாக நீங்கள் புதிய தொழில் வாய்ப்புகளை இழப்பீர்கள். நடைமுறைக்கேற்ப உங்கள் தொழில் சம்பந்தமான முடிவுகளை எடுங்கள். வாடிக்கையாளர்கள் உங்களுக்கு சாதகமாக காணப்படுவார்கள். அது உங்களுக்கு உதவியாக இருக்கும். தொழிலில் ஏற்படும் சிக்கல்களுக்கு நம்பிக்கை மூலம் தீர்வு காண்பீர்கள்.
விருச்சிகம் ராசி - தொழில் வல்லுநர்கள்
இந்த மாதம் மேலதிகாரிகள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். பணிகள் அதிகமாக காணப்படும். உங்கள் நேர்மை மற்றும் சிரத்தை சந்தேகிக்கப்பட வாய்புள்ளது. என்றாலும் உங்கள் திறமை மூலம் உங்கள் அர்ப்பணிப்பு நிரூபிக்கப்படும். நீங்கள் குறித்தநேரத்தில் பணிகளை முடிப்பதை கடினமாகக் கருதுவீர்கள்.
வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி பெற பரிகாரம் : சூரிய பூஜை
விருச்சிகம் ராசி - ஆரோக்கியம்
உங்கள் ஆரோக்கியத்தில் நீங்கள் முறையான கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்கு வாய்வு மற்றும் அஜீரணக் கோளாறு ஏற்படலாம். முறையான உணவு மற்றும் ஒய்வு உங்கள் ஆரோக்கியத்தை காத்துக்கொள்ள உதவும். நடைப்பயிற்சியும் சிறிய உடற்பயிற்சியும் மேற்கொள்வது சிறந்தது.
ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : ஸ்ரீ வைத்தியநாத பூஜை
விருச்சிகம் ராசி - மாணவர்கள்
சிறிய தவறுகள் கூட உங்கள் மதிப்பெண்கள் குறைய காரணமாக இருக்கலாம். எனவே உறுதியுடன் பயில வேண்டும். நீங்கள் உணர்ச்சிவசப்படுவதனால் சில பிரச்சினைகள் ஏற்படும். பாடங்களை நன்கு புரிந்து கொள்ள ஆசிரியரிடம் சந்தேகங்களை கேட்டு தெளிந்து கொள்ளுங்கள். உங்களிடம் சோம்பல்தன்மை காணப்படும். அது படிப்பில் உங்கள் செயல்திறனை பாதிக்கும்.
கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம்
சுப தினங்கள்: 4, 5, 10, 17, 18, 19, 24, 25 and 28
அசுப தினங்கள்: 3, 7, 11, 22, 26 and 30


Leave a Reply
KATHIRAVANA
Thanks Sir, your information good thanks. But this rasipalan more than problem and slient your asked, soluation which temple in the parikham and which temple go. Please details soluation and which temple going.
April 11, 2018