Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
மேஷ ராசி பலன் 2024 | Aries Horoscope 2024 in Tamil | AstroVed Tamil
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x
aries

மேஷம் வருட ராசி பலன் 2024

இந்த வருடம் உங்கள் நிதி நிலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். தேவையில்லாத வீண் விரயங்களை சந்திக்கும் காலகட்டமாக இந்த வருடம் உள்ளது. வீண் விரயங்களை தவிர்க்க தங்கம் அல்லது தங்கத்தால் செய்யப்பட்ட ஆபரணங்களில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் வீண் விரயத்தை தவிர்க்கலாம். நீங்கள் செரிமானம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். செரிமானத்திற்கு தீங்கு விளைவிக்கும் உணவுகள் மற்றும் வெளியிடத்து உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை இரண்டு பிரிவாக பிரித்து சிறிய அளவிலான உணவை எடுத்துக்கொள்வதன் மூலம் உங்கள் செரிமானத்தை மேம்படுத்தலாம். குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமான உறவை பேணுவீர்கள். உங்கள் அன்புக்குரியவருடன் இணக்கமான உறவையும் நீங்கள் தொடர முடியும். உங்கள் நட்பு வட்டாரம் அதிகரிக்கும். நண்பர்களின் உதவியும் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். ஆன்மிக தலங்களுக்கு சென்று நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.

வருட ராசி பலன் 2024

மேஷம்: குணாதிசயங்கள்

மேஷ ராசியில் பிறந்தவர்கள் தலைவர்களாக இருப்பார்கள். ஒரு அணி அல்லது மக்கள் குழுவிற்கு தலைமை தாங்கி முன்னணியில் இருக்க விரும்புவார்கள். மேஷ ராசியினருக்கு பிறரின் கீழ் படிந்து நடத்தல் கடினமான காரியம். மேஷ ராசியில் பிறந்தவர்கள் இயல்பிலேயே தைரியமாகவும் உற்சாகமாகவும் காணப்படுவார்கள்.அவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம். விவிசாயம், மருத்துவம் மற்றும் தொழில் நுட்ப பாடங்கள் அவர்களுக்கு விருப்பமானவை. மேஷ ராசியில் பிறந்தவர்கள் பெரும்பாலும் விளையாட்டுவீரர், மருத்துவர், பொறியியலாளர் அல்லது பாதுகாப்புப் பணியாளராக ஆவார்கள். கடுமையான இயல்பும் செயல்களில் வேகமும் அவர்களின் பலவீனங்களாகும்.

பரிகாரங்கள்:

  • உத்தியோகத்தில் மேன்மை அடைய உங்கள் வீட்டு தலை வாசலில் உள்ள நிலையில் ஓடித்தேய்ந்த குதிரை லாடத்தை மாட்டி வைக்கவும்.
  • சிவன் ஆலையத்தில் சுத்தமான பசும்பாலை சிவலிங்க வழிபாட்டிற்காக திங்கள் கிழமை அன்று தானமாக வழங்கி வர தன நிலையில் ஏற்றம் உண்டாகும்.
  • தினமும் காலை உத்தியோகத்திற்கு செல்லும் முன்பு தாய் மற்றும் தந்தையின் கால்களை தொட்டு வணங்கி வர செய்யும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்புகளை கிளிக் செய்யவும்

 அனைத்து வளங்களையும் பெற அஷ்டலட்சுமி பூஜை

சாதகமான மாதங்கள் : ஜனவரி, ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், நவம்பர், டிசம்பர்.

சாதகமற்ற மாதங்கள் : பிப்ரவரி, மார்ச், செப்டம்பர், அக்டோபர்.

-->

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC