x
x
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
sagittarius

தனுசு வருட ராசி பலன் 2019

இந்த 2019 ம் ஆண்டு உங்கள் வாழ்வில் நீங்கள் பல புதிய விஷயங்களை அனுபவிக்கக்கூடிய ஒரு வருடமாக இருக்கும். கசப்பான மற்றும் அழகான அனுபவங்கள் இரண்டுமே உங்களுக்காகக் காத்திருக்கிறது. அனைத்திலிருந்தும் மிகச் சிறந்ததை தேர்ந்தெடுப்பது உங்கள் கையில் தான் உள்ளது. உங்கள் பொறுமை சோதிக்கப்படும். புதிய நபர்களிடம் பேசும் போது எப்பொழுதுமே மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் எண்ணங்களை கட்டுப்படுத்துங்கள். நலமாக உணர நேர்மறையாகச் சிந்தித்து உங்களை அவ்வப்பொழுது ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களை நீங்களே ஊக்கப் படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் முப்பதாவது வயதின் இடைப்பகுதியில் உள்ளவர்கள் என்றால் உங்கள் வாழ்வினை சீரமைத்துக் கொள்ள வாழ்க்கை வசதிகளை அமைத்துக் கொள்ள இது உகந்த தருணம். நீங்கள் ஐம்பதுகளின் மத்தியில் இருப்பவராய் இருந்தால், உங்கள் குழந்தைகளின் வாழ்வை அமைத்துத் தர உகந்த தருணம். உங்கள் குழந்தைகள் தனுசு ராசியில் பிறந்தவர்களாய் இருந்தால், கல்வியில் அபாரமான பலன்களை அவர்களிடமிருந்து எதிர்பார்க்காதீர்கள். ஏனென்றால் அது அவர்களுக்கு கடினமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். உங்கள் உடன் பிறந்தவர்களுடன் குஸ்தி சண்டை போடாதீர்கள். உங்கள் தினசரி பணிகளையும் உங்கள் குடும்பத்தின் தேவைகளையும் மகிழ்ச்சியுடன் பூர்த்தி செய்யுங்கள்.

வருட ராசி பலன் 2019

தனுசு: குணாதிசயங்கள்

தனுசு ராசியில் பிறந்தவர்கள் தைரியம் மிக்கவர்கள். லட்சியம் கொண்டவர்கள். ஆர்வமூட்டும், தத்துவ, மத/ சம்பிரதாய மனப்பான்மை மற்றும் கடவுள் பயம் மிக்கவர்கள். அவர்கள் எந்த விஷயத்திலும் அதன் நன்மையைக் கருத்தில் கொண்டு நல்லது கெட்டது ஆராய்ந்து அதற்கேற்ப தனது இறுதி முடிவை எடுப்பவர்கள். இவர்கள். பொருளாதாரம், சட்டம், ஆன்மீக விஷயங்கள் போன்றவற்றில் ஆர்வம் மிக்கவர்கள்.இவர்கள் ஆசிரியர். விரிவுரையாளர், வங்கி அலுவலர், நிர்வாகம், ஆலோசகர் மற்றும் போதகராக ஆவார்கள்.

பரிகாரங்கள்:

உங்கள் அக்கம்பக்கத்தில் உள்ள குழந்தைகளுக்கு வீட்டில் செய்த இனிப்புகளை வழங்குங்கள்

உங்கள் வீட்டு / குடும்ப / அக்கம் பக்கத்துக்கு குழந்தைகளுடன் உங்கள் நேரத்தை செலவழியுங்கள்.

ஜெபிக்க வேண்டிய மந்திரம் “ஓம் பக்தவத்சலாய நமஹ” - தினமும் 108 முறை

பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்புகளை கிளிக் செய்யவும்

மஹா சுதர்சன ஹோமம்

சாதகமான மாதங்கள் : மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஆகஸ்ட்

சாதகமற்ற மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி, ஜூலை, டிசம்பர் (இந்த மாதங்களில் உங்களுக்கு பிடித்தமான கடவுளை வணங்கவும். பரிந்துரைக்கப்பட்ட பரிகாரங்களை செய்யவும்.)

வருட ராசி பலன் 2020

தனுசு: குணாதிசயங்கள்

தனுசு ராசியில் பிறந்தவர்கள் தைரியம் மிக்கவர்கள். லட்சியம் கொண்டவர்கள். ஆர்வமூட்டும், தத்துவ, மத/ சம்பிரதாய மனப்பான்மை மற்றும் கடவுள் பயம் மிக்கவர்கள். அவர்கள் எந்த விஷயத்திலும் அதன் நன்மையைக் கருத்தில் கொண்டு நல்லது கெட்டது ஆராய்ந்து அதற்கேற்ப தனது இறுதி முடிவை எடுப்பவர்கள். இவர்கள். பொருளாதாரம், சட்டம், ஆன்மீக விஷயங்கள் போன்றவற்றில் ஆர்வம் மிக்கவர்கள்.இவர்கள் ஆசிரியர். விரிவுரையாளர், வங்கி அலுவலர், நிர்வாகம், ஆலோசகர் மற்றும் போதகராக ஆவார்கள்.

ராசி பலன் - தனுசு

பொதுப்பலன்கள்: தனுசு ராசி அன்பர்களுக்கு, 2020 ஆம் ஆண்டின் மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டுகள் நன்மை பயப்பதாக அமையும். மூன்றாவது காலாண்டில் பொருளாதார நிலை நல்ல முன்னேற்றம் அடையும். வருமானம், சேமிப்பு, செல்வம் பெருகும். வசதிகள் மேம்படும்; மனதில் உள்ள ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். தாய் மற்றும் மூத்த சகோதர, சகோதரிகளுடன் சுமுகமான உறவு இருக்கும். இந்த நேரத்தில் உங்களுக்கு எதிர்பாராத ஆதாயங்களும் கிடைக்கலாம். பரம்பரை சொத்தும் வந்து சேரலாம். வேலை முன்னேற்றம் காணும் அதே நேரம், சொத்து வாங்கி, விற்கும் தொழிலும் வளர்ச்சி அடையும். உங்களில் சிலர் வீடு அல்லது வாகனம் வாங்குவார்கள். உங்கள் முன்னேற்றத்துக்குக் குறுக்கே வரும் தடைகள் அனைத்தும் விலகும். நீங்கள் நீதி, நியாயத்தை அனுசரித்தும் நடப்பீர்கள். இவை அனைத்தும், ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களைக் கொண்ட மூன்றாவது காலாண்டீல் நடைபெறும் வாய்ப்பு, பிரகாசமாக உள்ளது.
ஆண்டின் கடைசி காலாண்டிலும், வேலை, தொழில் சிறப்பாகவே நடக்கும். சேவைத் துறையில் உள்ளவர்களுக்கு, இது, மிகச் சிறந்த காலமாக அமையும். உங்கள் ஆரோக்கியமும் நன்றாகவே இருக்கும்.

வேலை: வருடத்தின் பிற்பகுதியில் உங்கள் பணி நிலவரம், முற்பகுதியை விட நன்றாக இருக்கும். குறிப்பாக, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில், இது மிகச் சிறப்பாக இருக்கவும் வாய்ப்புள்ளது. கடைசி 6 மாதங்களில், நீங்கள், உங்கள் முழுத் திறனுடன் பணியாற்றி, உற்பத்தியைப் பெருக்குவீர்கள். மேலே குறிப்பிட்டுள்ள 2 மாதங்களில், இன்னும் அதிக முயற்சி செய்து, மேலான திறனை வெளிப்படுத்தி, பலரிடமும் பாராட்டு பெறுவீர்கள். மூன்றாவது காலாண்டு வீடு, நிலம் வாங்கி விற்கும் தொழிலை ஊக்குவிக்கும்; அதே நேரம், நான்காவது காலாண்டில், சேவைத் தொழில், சொந்தத் தொழில் போன்றவற்றில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். உங்களுக்குச் சவாலாக அமையும் எந்த ஒரு விஷயத்திலும், நீங்கள் வெற்றி பெரும் வாய்ப்பு, இந்த ஆண்டின் கடைசிக் காலாண்டில் பிரகாசமாக உள்ளது.

வேலை, தொழில் மேம்பட கணபதி ஹோமம்

காதல் / திருமணம்: துணைகளுக்கிடையே நிலவும் உறவு, சுமாராகவே இருக்கும். எனவே, தங்களுக்கிடையே உள்ள கருத்து வேற்றுமைகளை மறந்து, ஒருவர் மீது ஒருவர், ஆழ்ந்த அன்பு செலுத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது. குறிப்பாக, வாழ்க்கைத் துணைவர்களான கணவனும், மனைவியும் பரிவையும், பாசத்தையும் தங்களுக்குள் பரிமாறிக் கொள்வதனால், மணவாழ்க்கையில் இன்பம் பெருகும். திருமணத்திற்குத் தகுந்த துணை தேடுவதற்குக் கடும் முயற்சிகள் செய்தால் மட்டுமே, இந்த நேரத்தில் வெற்றி கிடைக்கும்.

உறவுகள் சிறக்க உமா மகேஸ்வர ஹோமம்

நிதிநிலைமை: ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் என்ற 3 மாதங்களைத் தவிர, இந்த வருடத்தின் மற்ற நேரங்கள், உங்கள் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஏற்றவை அல்ல என்றே கூறலாம். மற்ற 9 மாதங்கள் எப்படி இருந்தாலும் சரி, இந்த 3 மாதங்கள், பணத்தைப் பொறுத்தவரை, மிக வெற்றிகரமாகவே அமையும். இந்நேரம், உங்கள் செல்வமும், சேமிப்பும் உயரும். ‘வருங்காலத்திற்குச் சேமிப்பது, தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது’ என்பதைத் தாரக மந்திரமாகவே கொண்டால், நிதிநிலையில் தன்நிறைவு பெறலாம்.

நிதிநிலை ஏற்றம் பெற தனாகர்ஷன யந்திரம்

மாணவர்கள்: ஆண்டின் துவக்கம், தனுசு ராசி மாணவர்களுக்கு பல பிரச்சினைகளைத் தரலாம். அப்பொழுது அவர்கள் படிப்பு சுமாராகவே இருக்கக் கூடும். ஆனால், மூன்றாவது காலாண்டில் அவர்கள் கல்வி மேம்படும்; இது பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் நல்ல நிவாரணமாக அமையும். ஆனால், அயல்நாட்டுக் கல்வி பெற விரும்புபவர்களுக்கு இந்த வருடம், சாதகமாக இல்லாமல் போகலாம். எனவே, அதற்காக அவர்கள், கடின முயற்சி செய்ய வேண்டியிருக்கும். இது போல கல்வி உதவித்தொகை போன்றவை கிடைப்பதிலும், சில தடைகள் நேரலாம்.

கல்வியில் வெற்றி பெற புதன் ஹோமம்

ஆரோக்கியம்: வருடத் தொடக்கத்தில் சுமாராகவே இருக்கும் உங்கள் உடல்நிலை, ஏப்ரல், மே, அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் நன்கு முன்னேறும் வாய்ப்புள்ளது. நோய்களால் துன்பப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் கூட, இந்த 5 மாதங்களில் குணமடைய வாய்ப்புள்ளது. ஆனால், முதல் காலாண்டில், சில கடுமையான உடற் கோளாறுகள் கூட உங்களைத் தாக்கக்கூடும்; ஆதலால், அந்த நேரத்தில், மிக ஜாக்கிரதையாக இருப்பதும், அதிக முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை அனுசரிப்பதும் அவசியம்.

நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க ஆரோக்கியம் மேம்படுத்தும் பேக்கேஜ்

பரிகாரங்கள்:

சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யவும்.
அன்னை பார்வதி மற்றும் முருகப்பெருமானை வணங்கி, உங்கள் ஆரோக்கியம் மேம்பட பிரார்த்தனை செய்யவும்.
ஆலயங்கள், அந்தணர்கள், ஆன்மீகப் பெரியோருக்கு தானம் செய்யவும்.
‘ஓம் சரவண பாவாய நமஹ’ என்ற மந்திரத்தை தினமும் 108 முறை ஓதவும்.
‘சர்வ மங்கள மாங்கல்யே, சிவே சர்வார்த்த சதிகே, ஷரண்யே த்ரயம்பகே கௌரி, நாராயணி நமோஸ்துதே’ என்ற மந்திரத்தை தினமும் 108 முறை ஓதவும்.

பரிகாரங்களைப் பற்றி விரிவாக அறியவும் அதில் பங்கு கொள்ளவும் பின்வரும் இணைப்புகளை கிளிக் செய்யவும்

நவக்ரஹ ஹோமம்

சாதகமான மாதங்கள் : ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர்

சாதகமற்ற மாதங்கள் : ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன் (சாதகமில்லாத இந்த மாதங்களில், உங்கள் இஷ்ட தெய்வத்தை வழிபட்டு, பரிந்துரைக்கப்பட்ட வழிபாடுகளை மேற்கொள்வது நன்மை தரும்)

எங்கள் செய்திமடலில் சேரவும்

இன்று இலவசமாக பதிவுசெய்து புதிய புதுப்பிப்புகளில் அறிவிப்பை பெறும் முதல் நபராக இருங்கள்

உங்கள் ராசி தெரியவில்லையா? அதனை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

LAC