AstroVed Menu
AstroVed
search
search
x

துலாம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022 (Thulam Rasi Guru Peyarchi Palangal Tamil 2021 to 2022)

dateSeptember 28, 2021

துலாம் ராசி குரு பெயர்ச்சி 2021 பொதுப்பலன்கள்:

வருட கிரகம் என்று கூறப்படும் கிரகங்களில் குரு தனிச்சிறப்பு வாய்ந்த கிரகம் ஆகும். ஒவ்வொரு கோளுக்கும் ஒரு சிறப்பு இருக்கும். அந்த வகையில் குரு கிரகம் பூரண சுப கிரகம் என்றும் சாத்வீக கிரகம் என்றும் கூறப்படும். குரு பகவான் நவம்பர் 21, 2021, ஞாயிற்றுக் கிழமை அன்று மதியம் 02:06 இந்திய நேரப்படி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். கும்ப ராசியானது துலாம் ராசிக்குப் பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீடாக அமைவதால் காதலில் வெற்றியைக் கொடுக்கும் விதமாகவும். திருமண முயற்சிகளில் வெற்றியைக் கொடுப்பதாகவும் இந்த குரு பெயர்ச்சி 2021 அமையப்போகிறது. கோள்சார குருவானவர் ஐந்தாம் பாவத்தில் நின்று ஐந்தாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தையும் ஏழாம் பார்வையாக லாபஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக ராசியையும் பார்வையிடப்போகிறார். இந்த குருப்பெயர்ச்சியானது துலாம் ராசியைச் சார்ந்தவர்களுக்கு நல்ல தொழில் மாற்றத்தையும், ஊக வணிகமான பங்கு மற்றும் பொருள் வர்த்தகத்தில் லாபத்தையும், சகல சௌபாக்கியங்களையும் ஏற்படுத்தி கொடுக்கும் விதமாக அமையப்போகிறது.  

துலாம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022 (Thulam Rasi Guru Peyarchi Palangal Tamil 2021 to 2022)

குரு பகவானின் ஆசிகளை பெறுவதற்கு இப்போது முன்பதிவு செய்து கொள்ளுங்கள்

குடும்பம்: 

குடும்பத்தில் குதூகலம் நிறைந்து இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்து காணப்படும். மூத்த சகோதர சகோதரிகளிடம் நல்லுறவு காணப்படும். அவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குழந்தைகளுடனான நல்லுறவு நீடிக்கும். உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் நல்ல சுமுகமான உறவு நிலை காணப்படும். இது தங்களின் மன மகிழ்ச்சியைக் கூட்டும்.

குடும்ப உறுப்பினர்களிடம் நல்லுறவு நீடிக்க பால திரிபுர சுந்தரி பூஜை

ஆரோக்கியம்:

ஆரோக்கியமான மனம் ஆரோக்கியமான உடல் நிலைக்கு வழி வகுக்கும். இந்த பெயர்ச்சிக் காலக் கட்டங்களில் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடற்பயிற்சி மற்றும் தியானம் மேற்கொள்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் சிறந்த முறையில் தக்க வைத்துக் கொள்ள இயலும். முறையற்ற உணவு காரணமாக அஜீரணக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்பதால் உங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும். 

நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்பட செவ்வாய் பூஜை

காதல் / திருமணம்:

துலாம் ராசி காதலர்கள் தங்கள் காதலில் வெற்றி காண்பார்கள். திருமணத்திற்காகக் காத்திருந்தவர்களுக்கு தடைகள் யாவும் நீங்கப் பெற்று திருமண முயற்சிகள் கைகூடும். திருமணமான தம்பதிகள் இடையே நல்லுறவு காணப்படும். தாம்பத்திய வாழ்வு சிறக்கும். தங்கள் துணையுடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். இது மனதிற்கு  அமைதியையும் மகிழ்ச்சியையும்  கொடுக்கும். 

திருமணமான தம்பதிகளுகிடையே வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்பட சுக்கிரன் பூஜை

நிதி நிலை:

உங்கள் வருமானம் அதிகரிக்க நீங்கள் கடின முயற்சிகளை எடுப்பீர்கள் உங்கள் முயற்சிகள் யாவும் வெற்றிக்கு வழி வகுக்கும். பங்கு வர்த்தக முதலீடு உங்களுக்கு லாபம் பெற்றுத் தரும்.. 

நிதி நிலையில் ஏற்றம் உண்டாக கோ பூஜை

வேலை / தொழில்:

நீங்கள் புதிய வேலை கிடைக்கப் பெறுவீர்கள். அது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். உங்களுக்கு பொறுப்புகள் கூடும். நீங்கள் சிறப்பாகச் செயலாற்றி பணியிடத்தில் பாராட்டைப் பெறுவீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள் அதிக அளவில் வாடிக்கையாளர்கள் கிடைக்கப் பெறுவார்கள். கூட்டுத் தொழில் மூலமும் நீங்கள் சிறந்த லாபம் பெறுவீர்கள். 

உத்தியோகம் மற்றும் தொழிலில் ஏற்றம் கிடைக்க குரு பூஜை

கல்வி:

மாணவ மாணவியர்கள் சிறப்பாகப் படித்து கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். பெற்றோர் மற்றும் ஆசிரியரின் ஆதரவைப் பெறுவார்கள். அவர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவதன் மூலம் வெற்றி அடைந்து அவர்களுக்கு பெருமை சேர்ப்பார்கள். ஆராய்ச்சித் துறை மாணவர்கள் சிறப்பாகச் செயலாற்றி வெற்றி காண்பார்கள். 

கல்வியில் வெற்றி கிடைக்க புதன் பூஜை

வீட்டில் செய்யக்கூடிய பரிகாரங்கள்:

  • கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்குப் புத்தகம் வாங்கி கொடுக்கலாம். 
  • வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடை அணிவது சிறப்பு. 
  • பிரதோஷ வழிபாடு மிகுந்த நன்மைகளை கொடுக்கும்
Tags Tags:

    Leave a Reply