AstroVed Menu
AstroVed
search
search

கன்னி ராசி குரு பெயர்ச்சி பலன்கள் 2021-2022 (Kanni Rasi Guru Peyarchi Palangal Tamil 2021 to 2022)

dateSeptember 28, 2021

கன்னி ராசி குரு பெயர்ச்சி 2021 பொதுப்பலன்கள்:

வருட கிரகம் என்று கூறப்படும் கிரகங்களில் குரு தனிச்சிறப்பு வாய்ந்த கிரகம் ஆகும். ஒவ்வொரு கோளுக்கும் ஒரு சிறப்பு இருக்கும். அந்த வகையில் குரு கிரகம் பூரண சுப கிரகம் என்றும் சாத்வீக கிரகம் என்றும் கூறப்படும்.   குரு கிரகம் நவக்கிரக அந்தஸ்து பெற்று குரு பகவான் என்று அழைக்கபடும் பெருமை பெற்றது.  குரு பகவான் நவம்பர் 21, 2021, ஞாயிற்றுக் கிழமை அன்று மதியம் 02:06 இந்திய நேரப்படி மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். கும்ப ராசியானது கன்னி ராசிக்கு உத்தியோக ஸ்தானமான ஆறாம் வீடாக அமைவதால் உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றத்தையும், பதவி உயர்வையும், தன நிலையில் ஏற்றத்தையும் ஏற்படுத்தக்கூடியதாக இந்த குரு பெயர்ச்சி 2021 அமையப்போகிறது. ஆறாம் பாவத்தில் நின்று ஐந்தாம் பார்வையாக ஜீவனஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக  விரைய ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக தனஸ்தானத்தையும் பார்வையிடப் போகிறார். இந்த குருப்பெயர்ச்சியானது கன்னி ராசியைச் சார்ந்தவர்களுக்கு உத்தியோகத்தில் முன்னேற்றத்தையும், தன நிலையில் உயர்வையும் ஏற்படுத்திக் கொடுக்கப்போகிறது.   

குரு பகவானின் ஆசிகளை பெறுவதற்கு இப்போது முன்பதிவு செய்து கொள்ளுங்கள்

குடும்பம்: 

குடும்ப உறவுகள் சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் உங்கள் பொறுப்பு அதிகரிக்கும். நீங்கள் உங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் போது வீட்டில் உள்ள பெரியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குழந்தைகளுடனான உறவு வலுப்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். 

குடும்ப உறவு நிலை மேம்பட செவ்வாய் பூஜை

ஆரோக்கியம்:

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். உங்கள் சிறப்பான செயல்பாட்டிற்கு சிறந்த ஆரோக்கியம் முக்கியம். பணிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதே சமயத்தில் அதிக பணிகள் உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்காமலும் நீங்கள் காத்துக் கொள்ள வேண்டும். கழுத்து வலி மற்றும் முதுகு வலி போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடற்பயிற்சி தியானம், முறையான ஒய்வு, சரியான உணவு மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் மேம்படுத்திக் கொள்ள இயலும். 

மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் பெற சந்திரன் பூஜை

காதல் / திருமணம்:

காதல் என்றால் எந்த வகையிலாவது எதிர்ப்புகள் இருக்கத் தான் செய்யும். இந்தக் காலக் கட்டத்தில் காதலர்கள் சில போராட்டங்களை சந்திப்பார்கள். காதல் கை கூடுவதில் சில சிரமங்களை சந்திக்க நேரும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை குறையும் வாய்ப்பு உள்ளது. புரிந்துணர்வில் குறைபாடு இருப்பதன் காரணமாக கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது உணர்ச்சி வசப்படாமல் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். வாய்ச் சண்டை மற்றும் வாக்குவாதத்தை தவிர்த்து விட்டுக் கொடுத்தும்  அனுசரித்தும் நடந்து கொள்வதன் மூலம் நல்லுறவைப் பராமரிக்க இயலும். 

காதல் மற்றும் திருமண உறவுகள் மேம்பட குரு பூஜை

நிதி நிலை:

பண விஷயங்கள் திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும். பண வரவு அதிகரிக்கும். வருமானம் கணிசமாக உயரும். பொருளாதார ஏற்றம் சிறப்பாக இருக்கும். வெளிநாட்டு முதலீடுகள் லாபங்களை பெற்றுத் தரும். வீடு பராமரித்தல், பயணங்கள் செல்லுதல் என தரமான விஷயங்களுக்கு நீங்கள் பணத்தை செலவு செய்ய நேரும். 

நிதி நிலையில் ஏற்றம் காண சனி பூஜை

வேலை / தொழில்:

அலுவலகப் பணியாளர்கள் கவனமுடன் பொறுமையாகச் செயல்படுவதன் மூலம் வளர்ச்சி காண இயலும். பொறுப்புகள் கூடும் என்பதால் பணியிடத்தில் பதட்டமான மன நிலை இருக்கும்.நீங்கள் கடினமாகவும் சிறப்பாகவும் பணியாற்றுவதன் மூலம் பணியிடத்தில் பெயரும் புகழும் பெறுவீர்கள். புதிய தொழில் ஆரம்பிக்க இது ஏதுவான காலம். வேலை நிமித்தமான பயணங்கள் மூலம் ஆதாயம் காண்பீர்கள். 

உத்தியோகம் மற்றும் தொழில் மேன்மைக்கு துர்கா பூஜை

கல்வி:

மாணவ மாணவியர்களுக்கு இது ஒரு வசந்த காலம். படிப்பில் வெற்றியும் முன்னேற்றமும் கிடைக்கும். விடா முயற்சி மூலம் உயர் நிலை மாணவர்கள் சிறந்த நிலையை எட்டுவார்கள். ஆசிரியர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் உங்களை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும்.

மாணவர்கள் படிப்பில் வெற்றி பெற சரஸ்வதி பூஜை

வீட்டில் செய்யக்கூடிய பரிகாரங்கள்:

  • முதியோர்களுக்கு வஸ்திர தானம் செய்வது வாழ்வில் ஏற்றத்தைக் கொடுக்கும். 
  • வியாழக்கிழமைகளில் பசுவிற்கு உணவு அளிக்கலாம். 
  • ஏழைக் குழந்தைகளுக்கு வஸ்திர தானம் செய்யலாம். 

banner

Leave a Reply