(விசாகம் 4 ம் பாதம், அனுஷம், கேட்டை)
எதிலும் விடாப்பிடியாக செயல்படும் விருச்சிக ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் செவ்வாய், தைரியம் மற்றும் சுகஸ்தானாதிபதி சனியுடன் 2 ல் இருப்பதால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சினைகள் வந்து செல்லும். பொருளாதரத்தில் நிலையற்ற தன்மை இருக்கும். தேவையற்ற வீண் விவாதத்தை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிலும் பொறுமையுடனும், விழிப்புடனும் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
குருபகவான் 11/10/2018 வரை உங்கள் ராசிக்கு விரையஸ்தானமான 12 ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொருளாதார விஷயங்களில் கவனம் தேவை. வீண் மருத்துவ செலவுகள் ஏற்படும். மறைமுக எதிரிகளால் பிரச்சினை வர வாய்ப்புள்ளதால் கவனமுடன் செயல்படுங்கள். 11/10/2018 க்கு பிறகு கடந்த கால இழப்புகளையும், பிரச்சினைகளையும் நினைத்து கவலை படாமல், தற்போதைய விஷயங்களில் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். தனக்கு பயனில்லாத விஷயங்களில் கவனம் செலுத்துவதை கைவிடுங்கள். மனக்கவலை, தேவையற்ற குழப்பங்களை தவிர்க்க தியானமும், இறைவழிபாடும் நல்லது.
ராகு, கேது முறையே 6/3/2019 வரை 9,3 ல் சஞ்சரிப்பதால் தந்தை உடல் நலனில் கவனம் தேவை. தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பிதுர் வழி சொத்துப்பிரச்சினை உண்டாகும். வெளியூர், வெளிநாடு பயணங்கள், ஆன்மீக பயணங்கள் செல்ல நேரிடும். மனதில் தைரியம், உற்சாகம் அதிகரிக்கும். விடாமுயற்சியால் வெற்றி பெறுவீர்கள். மற்றவர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கும். புகழ், பெருமை அதிகரிக்கும்.
6/3/2019 க்கு பிறகு ராகு, கேது முறையே 8,2 க்கு வருவதால் எதிர்பாராத பிரச்சினைகள், வழக்குகள் உண்டாகும். வாகன பயணங்களில் கவனம் தேவை. இரவு நேர பயணங்கள் மற்றும் நீண்டதூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுக்கு ஜாமீன் போன்ற விஷயங்களுக்கு முன் நிற்க வேண்டாம். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து அனுசரித்து செல்வது நல்லது. பொருளாதார நிலை பாதிக்குமென்பதால் கவனம் தேவை.
சனிபகவான் வருடம் முழுவதும் 2 ல் சஞ்சரிப்பதால் வீண் விரயங்கள், தேவையற்ற செலவீனங்களை தவிர்க்க பொருளாதார நிலையில் கவனம் தேவை. வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது குடும்ப விஷயங்களில் அவசரபடாமல் பொறுமையுடன் செயல்பட்டால் அமைதியுடன் வாழலாம். மற்றவ்ர்களுக்கு ஜாமீன் போன்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். யாரையும் குறை சொல்வதை தவிர்க்கவும். சொத்து பிரச்சினைகளை சுமுகமாக கையாள்வது நல்லது.
வியாபாரிகளே:
வியாபாரத்தில் எதிலும் பொறுமையும், கவனமும் தேவை. புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகள் மற்றும் பணியாளர்களை கண்காணிப்பில் வைத்து கொள்வது நல்லது. வாடிக்கையாளர்களிடம் இன்முகத்துடன் நடந்து கொள்ளுங்கள். விழிப்புணர்வுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
உத்தியோகஸ்தர்களே:
உத்தியோகத்தில் உயரதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்து கொள்ள வேண்டாம். சக ஊழியர்களிடம் வெளிப்படையாக பேசுவதை தவிர்க்கவும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு தாமதமாகும். அலுவலக ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
மாணவ மாணவியர்களே:
படிப்பில் அதிக கவனம் தேவை. பாடங்கள் படிப்பதை தள்ளிப்போடாமல் அன்றைய பாடங்களை அன்றே படிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆசிரியர்களிடம் பணிவாகவும், நல்ல நண்பர்களுடன் இணக்கமாகவும் இருந்து கொண்டால் வெற்றி நிச்சயம்.
அரசியல்வாதிகளே:
தலைமையிடம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும். சகாக்களிடம் வெளிப்படையாக பேசுவதை தவிர்க்கவும். யாருக்கும் வீண் வாக்குறுதிகளை தர வேண்டாம். பொறுமையுடனும், விழிப்புணர்வுடனும் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
கலைத்துறையினரே:
தற்போதுள்ள வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தி கொள்ளுங்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம். பொறுமை, விழிப்புணர்வு, இன்முகத்துடன் பேசினால் எதிலும் வெற்றி நிச்சயம்.
பரிகாரம்:
ஏழை, எளியவர் மற்றும் ஊனமுற்றோர்களுக்கு பண உதவி, அன்னதானம் செய்யுங்கள்.
Tags: Puthandu Rasi Palan 2018 Puthandu Rasi Palan Vrishikam 2018 Tamil New Year Rasi Palan 2018 Vrishikam Tamil Puthandu Palan Vrishikam 2018 to 2019 Tamil puthandu palangal 2018 to 2019 Tamil Varusha Pirappu 2018 Vrishikam rasi Tamil Puthandu palangal 2018 Vrishikam rasi tamil Varusha Pirappu palangal 2018 Tamil Puthandu Palan Vrishikam 2018 to 2019 Puthandu Rasi Palan Vrishikam 2018 Tamil New Year Rasi Palan 2018 Vrishikam Puthandu Rasi Palan 2018 Vrishikam rasi tamil Varusha Pirappu palangal 2018 Tamil puthandu palangal 2018 to 2019 Vrishikam rasi Tamil Puthandu palangal 2018 Tamil Varusha Pirappu 2018
Eanaku thirumanam en istapadi nadakuma nadakkadha. Kadhalthirumanama.arnjudu meraja
December 11, 2018
Sales
Namaste Priya,
Thank you for your query.
Please find the link to talk to one of our senior Astrologer online for your current issues, they will analyze your birth chart and provide remedies as a solution to overcome from your problem.
Leave a Reply
Thank you for your query.
Please find the link to talk to one of our senior Astrologer online for your current issues, they will analyze your birth chart and provide remedies as a solution to overcome from your problem.
https://www.astroved.com/AstrologerScheduler.aspx?id=115&promo=avd0009
Thanks,
For your Health, Wealth, and Prosperity,
With Kind Regards.
Astroved Member Support.
http://www.Astroved.com.