AstroVed Menu
AstroVed
search
search

தனுசு ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018 – 2019 ( Tamil Puthandu Rasi Palangal Dhanusu 2018 – 2019 )

dateSeptember 19, 2018
(மூலம், பூராடம், உத்திராடம் 1 ம் பாதம்) எதிலும் குறிக்கோள் வைத்து நினைத்த இலக்கை அடையும் தனுசு ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் குருபகவான் உங்கள் ராசிக்கு 11 ல் இருப்பதால் உங்கள் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். புகழ், பெருமை அதிகரிக்கும். அந்தஸ்து உயரும். உடல் ஆரோக்கியம் பெறும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். நண்பர்கள், உறவினர்களால் நன்மை உண்டாகும். குருபகவான் 11/10/2018 வரை உங்கள் ராசிக்கு 11 ல் இருப்பதால் திருமணத்திற்கு முயற்சிப்பவர்களுக்கு திருமணம் கைகூடும். புதிய தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கைகூடும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். தாய், மற்றும் உறவினர்களால் நன்மை உண்டாகும். புகழ், பெருமை, அந்தஸ்து அதிகரிக்கும். எதிலும் வெற்றி வாகை சூடுவீர்கள். 11/10/2018 க்கு பிறகு வீண் விரயங்களை தவிர்க்க சிக்கனமுடன் இருப்பது நல்லது. மறைமுக எதிரிகளால் பிரச்சினை உருவாகும் என்பதால் கவனம் தேவை. விழிப்புணர்வுடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம். ராகு, கேது முறையே 6/3/2019 வரை 8,2 ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பிரச்சினைகள், வழக்குகள் உண்டாகும். வாகன பயணங்களில் கவனம் தேவை. இரவு நேர பயணங்கள் மற்றும் நீண்டதூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுக்கு ஜாமீன் போன்ற விஷயங்களுக்கு முன் நிற்க வேண்டாம். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து அனுசரித்து செல்வது நல்லது. பொருளாதார நிலை பாதிக்குமென்பதால் கவனம் தேவை. 6/3/2019 க்கு பிறகு ராகு, கேது முறையே 7,1 க்கு வருவதால் தேவையற்ற மனகுழப்பம், கவலை வர வாய்ப்புள்ளதால் மன கட்டுப்பாடுடன் இருப்பதும், தியானம், இறைவழிபாடு செய்வதும் நல்லது. எந்த முடிவை எடுத்து செயல் படுத்தும் போதும் நன்கு சிந்தித்து விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு வர வாய்ப்புள்ளதால் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வது நல்லது. கூட்டாளிகள் மற்றும் நண்பர்களால் பிரச்சினை வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. tamil-puthandu-rasi-palangal-dhanusu-2018-2019 சனிபகவான் வருடம் முழுவதும் உங்கள் ஜென்ம ராசியிலேயே ஏழரை சனியாக சஞ்சரிப்பதால் சிந்தனையில், செயலில் மந்த நிலை ஏற்படுமென்பதால் எப்போதும், எதிலும் விழிப்புணர்வுடனும், பொறுமையுடன் சிந்தித்து செயல்படுங்கள். தன் எதிர்கால வாழ்விற்கு பயனற்ற விஷயங்களில் தலையிட்டு நேரத்தை விரையம் செய்ய வேண்டாம். வீண் பிடிவாதத்தை தவிருங்கள். எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து, நேர்மறையாக சிந்தித்து செயல்பட்டால் எதிலும் வெற்றி. தவிர்க்க முடியாத பிரச்சினைகளை பிரித்து வெற்றி கொள்ளுங்கள். யாருக்கும் ஜாமீன் போன்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். வியாபாரிகளே: 11/10/2018 வரை நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறுவீர்கள். புதிய முதலீடுகளால் லாபம் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் பணியாளர்களால் ஆதாயம் உண்டாகும். 11/10/2018 க்கு பிறகு வீண் விரையங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகள் மற்றும் பணியாளர்களை கண்காணிப்பில் வைத்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களே: 11/10/2018 உயரதிகாரிகள் தங்களுக்கு சதகமாவர்கள். சக ஊழியர்களால் ஆதாயம் உண்டு. பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். 11/10/2018 உயரதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களிடம் அதிக உரிமை எடுத்து கொள்ள வேண்டாம். மற்றவர்களிடம் வெளிப்படையாக பேசுவதை தவிர்க்கவும். மாணவ மாணவியர்களே: 11/10/2018 வரை படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைப்பீர்கள். பெருமை, புகழ் அதிகரிக்கும். ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களால் ஆதாயம் உண்டு. 11/10/2018 க்கு பிறகு காதல் போன்ற விஷயங்களில் நேரத்தை வீணாக்க வேண்டாம். பாடங்களை தள்ளிபோடாமல் அன்றே படிப்பதும், விடா முயற்சியாலும் வெற்றி பெறலாம். அரசியல்வாதிகளே: 11/10/2018 வரை தலைமையிடம் நெருக்கம் அதிகரிக்கும். சகாக்களால் ஆதாயம் உண்டு. மக்களிடையே செல்வாக்கு அதிகரிக்கும். 11/10/2018 க்கு பிறகு தலைமையிடம் கவனம் தேவை. வெளிப்படையாக பேசுவதை தவிர்க்கவும். மறைமுக எதிரிகளால் பிரச்சினை வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. கலைத்துறையினரே: 11/10/2018 வரை உங்கள் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெறுவீர்கள். ஆணவத்தை தவிர்க்கவும். புகழ், பெருமை அதிகரிக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். 11/10/2018 க்கு பிறகு தற்போதுள்ள வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். புதிய வாய்ப்பு தாமதமாகும். வீண் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். பரிகாரம்:
  • ஏழை, எளிவர்கள் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு பண உதவி, மருத்துவ உதவி செய்தல்.
  • பறவைகளுக்கு உணவு கொடுத்தல் ஆலயங்களில் அன்னதானம் செய்தல்.
  • ஸ்ரீ சனிபகவான், குருபகவான், ராகு, கேது பகவானுக்கு ஹோமம், பூஜை மற்றும் ஆலயங்களில் வழிபாடு செய்தல்.
  • ஸ்ரீ சுதர்சன ஹோமம் செய்தல்.

  • banner

    Leave a Reply