AstroVed Menu
AstroVed
search
search
x
cart-added The item has been added to your cart.

துலாம் ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018 – 2019 ( Tamil Puthandu Rasi Palangal Thulam 2018 – 2019 )

dateSeptember 19, 2018
(சித்திரை 3,4 ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3 ம் பாதம்) எதிலும் கலையுணர்வும், கம்பீரமும் மிக்க துலா ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் சுக்கிரன் 7 ல் இருந்து ராசியைப் பார்ப்பதால், உங்கள் உடல் ஆரோக்கியம் பெறும். முகத்தில் தேஜஸ் அதிகரிக்கும். உங்கள் தனித்திறமை வெளிப்படும். புகழ், மரியாதை செல்வாக்கு அதிகரிக்கும். விடாமுயற்சியால் வெற்றி பெறுவீர்கள். இருப்பினும் அதீத நம்பிக்கை மற்றும் அதீத செயல்பாடுகளை தவிர்க்கவும். குருபகவான் 11/10/2018 வரை உங்கள் ராசியில் இருப்பதால் எதிர்காலம் பற்றிய கவலை, மன குழப்பம் உண்டாகும். எதிர்மறையான சூழ்நிலைகளால் சில சங்கடங்களை சந்திக்க நேரிடும் என்பதால் கவனம் தேவை. பழைய இழப்புகளையும், கஷ்டங்களையும் நினைத்து வருந்த வேண்டாம். 11/10/2018 க்கு பிறகு குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பல வகையில் பண வரவு உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சுற்றத்தாரின் ஆதரவு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். ராகு, கேது முறையே 6/3/2019 வரை 10,4 ல் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்பாடுகளில் தீவிரம் இருக்கும். செயற்கரிய காரியங்களையும் செய்து சாதனை படைப்பீர்கள். உங்கள் புகழ், செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் திறமை வெளிப்படும். தாய் உடல் நிலை பாதிப்படையும். தாய் மற்றும் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வீடு, நிலம், வாகனம் தொடர்பான ஆவணங்களை கவனமுடன் கையாள்வது நல்லது. tamil-puthandu-rasi-palangal-thulam-2018-2019 6/3/2019 க்கு பிறகு ராகு, கேது முறையே 9,3 க்கு வருவதால் தந்தை உடல் நிலை பதிப்பு உண்டாகும். தந்தை மற்றும் முத்தோர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பிதுர்வழி சொத்து பிரச்சினை வந்து நீங்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு பயணங்கள் செல்லும் வாய்ப்பு உண்டாகும். மனதில், தைரியம் உற்சாகம் அதிகரிக்கும். முயற்சிகள் அனைத்தும் கைகூடும். காரிய வெற்றி உண்டாகும். சகோதர சகோதரிகளால் ஆதாயம் உண்டாகும். சனிபகவான் வருடம் முழுவதும் 3 ல் சஞ்சரிப்பதால் மனதில் தைரியம், உற்சாகம் அதிகரிக்கும். உடல்நிலை ஆரோக்கியம் அதிகரிக்கும். உழைப்பின் பலனை அனுபவிக்கும் காலம். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். முயற்சிகள் அனைத்தும் நிறைவேறும். உறவினர் மற்றும் சகோதர சகோதரிகளால் ஆதாயம் உண்டாகும். புதிய சொத்துக்கள் சேரும். வழக்குகள் சாதகமாகும். எங்கும், எதிலும் வெற்றியாளராக வலம் வருவீர்கள். புகழ், செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரிகளே: 11/10/2018 வரை வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகள் மற்றும் பணியாளர்களை கண்காணிப்பில் வைத்து கொள்வது நல்லது. 11/10/2018 க்கு பிறகு வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய முதலீடுகளால் லாபம் அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள். உத்தியோகஸ்தர்களே: 11/10/2018 வரை உத்தியோகத்தில் கவனம் தேவை. உயரதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஊதிய உயர்வு, பதவி உயர்வு தாமதமாகும். 11/10/2018 க்கு பிறகு உத்தியோகத்தில் புகழ், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். மாணவ மாணவியர்களே: 11/10/2018 வரை படிப்பில் கவனம் தேவை. பாடங்கள் படிப்பதை தள்ளிப்போடாமல் அன்றைய பாடங்களை அன்றே படிப்பது நல்லது. வீண் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். 11/10/2018 க்கு பிறகு படிப்பில் ஆர்வம் அதிகரித்து அதிக மதிப்பெண் எடுத்து அனைவரின் பாராட்டினை பெறுவீர்கள். ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசியல்வாதிகளே: 11/10/2018 வரை தலைமையிடம் மன கசப்புகள் உருவாகும். சகாக்களிடையே வீண் பிரச்சினைகள் உருவாகும் என்பதால் கவனம் தேவை. 11/10/2018 க்கு பிறகு உங்கள் வார்த்தைக்கு மக்களிடையே மதிப்பு அதிகரிக்கும். தலைமைக்கு நெருக்கமாவிர்கள். தலைமை உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். கலைத்துறையினரே: 11/10/2018 வரை தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். 11/10/2018 க்கு பிறகு புதிய வாய்ப்புகள் தேடி வரும். புகழ், செல்வாக்கு அதிகரிக்கும். பிரபலமாவீர்கள். பரிகாரம்:
  • ஏழை, எளிய பள்ளி குழந்தைகளுக்கு கல்விக்கு உதவி செய்யுங்கள்.
  • ஸ்ரீ குருபகவான் மற்றும் ராகு, கேது பகவானுக்கு ஹோமம், பூஜை மற்றும் ஆலயம் சென்று வழிபடுதல்.
  • ஸ்ரீ சிவபெருமானுக்கு ருத்ர ஹோமம், பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.

  • banner

    Leave a Reply