Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
Search

மீனம் ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019 – 2020 ( Tamil Puthandu Rasi Palangal Meenam 2019 – 2020 )

February 15, 2019 | Total Views : 5,729
Zoom In Zoom Out Print

(பூரட்டாதி 4 ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

எப்போதும் தனித்தன்மையுடனும், சுதந்திர உணர்வுடனும் செயல்படும் மீன ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் குருபகவான் உங்கள் ராசிக்கு 9 இல் இருந்து உங்கள் ராசியை பார்ப்பதால், வாழ்வில் எதிலும் தெளிவான நிலை ஏற்படும். உங்கள் செயல் பாடுகளில் முன்னேற்றம் ஏற்படும். மற்றவர்களால் பாராட்டும் நிலை உண்டாகும். வெளியூர், வெளிநாடு செல்லும் முயற்சிகள் கைகூடும்.

குருபகவான் 5/11/2019 வரை 9 இல் சஞ்சரிப்பது நன்மை என்றாலும், 5/11/2019 க்கு பிறகு 10 இல் சஞ்சரிப்பது சாதகமில்லை. சனிபகவான் 24/1/2020 வரை 10 இல் சஞ்சரிப்பது நன்மை என்றாலும், 24/1/2020 க்கு பிறகு 11 இல் சஞ்சரிப்பது யோகமான அமைப்பு ஆகும். ராகு, கேது முறையே 4,10 இல் சஞ்சரிப்பது மிதமான பலன்களை தரும். இந்த வருடம் நீங்கள் 75 சதவீத நற்பலன்களை பெறுவீர்கள்.

குருபகவான் 5/11/2019 வரை உங்கள் ராசிக்கு 9 இல் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த பிரச்சினைகள், தடைகள் நீங்கும் தந்தையால் அனுகூலம் உண்டாகும். தந்தை வழி சொத்து கிடைக்கும் வெளியூர், வெளிநாடு பயணங்கள் செல்ல நேரிடும். நல்ல வழிகாட்டிகள் கிடைப்பார்கள். உற்றார், உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் உடல் ஆரோக்கியம் பெறும். முகத்தில் தேஜஸ் அதிகரிக்கும். ஆன்மீக பயணங்கள் செல்ல நேரிடும். திருமண முயற்சிகள் கைகூடும். 

குருபகவான் 5/11/2019 க்கு பிறகு உங்கள் ராசிக்கு 10 இல் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்பாடுகளில் கவனச்சிதறல் ஏற்பட்டு தடை ஏற்படும். உங்கள் தகுதிக்கு குறைவான செயல்களை செய்ய வேண்டியிருக்கும். உங்கள் திறமை மற்றவர்களால் கட்டுப்படுத்தப்படும். ஒரே நேரத்தில் பல வேலைகளை பார்ப்பதை தவிருங்கள். இடமாற்றம் மற்றும் பதவி மாற்றம் ஏற்படும். சூழ்நிலைகளால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மையை விட்டு தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

ராகு,கேது முறையே வருடம் முழுவதும் உங்கள் ராசிக்கு 4,10 இல் இருப்பதால்,தாய் உடல் நிலை பாதிப்பு, தாயுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் உருவாகும். நிலம், வீடு, வாகனங்கள் வாங்கும் போது ஆவணங்களை சரிபார்த்து வாங்குவது நல்லது. இரவு நேர பயணம் மற்றும் நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழிலில் பல தடைகள் உருவாகும். கவனச்சிதறலால் உங்கள் செயல்பாடுகள் திசைமாற்றப்படும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் மாற்றம், இடமாற்றம்,ஏற்பட வாய்ப்பு உண்டு.

சனிபகவான் 24/1/2020 வரை உங்கள் ராசிக்கு 10 இல் சஞ்சரிப்பதால் தந்தை உடல் நிலை சீரடையும். பிதுர் வழி சொத்து பிரச்சினை முடிவுக்கு வரும்.தடைபட்ட முயற்சிகள் இனிதே நிறைவேறும். வேலைப்பளு அதிகரிக்கும். உங்கள் தனித்திறன் வெளிப்படும். உங்களை சமூகத்தில் நிலை நிறுத்தி கொள்ள அதிக முயற்சி எடுத்து வெற்றி கொள்வீர்கள். நிதான முன்னேற்றம், நிரந்தரமான வெற்றி தரும் என்பதை உணரும் காலமாகும். எதிலும் போராடி வெற்றி பெறுவீர்கள். உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள நல்ல சந்த்ர்ப்பங்கள் உருவாகும்.

சனிபகவான்  24/1/2020 க்கு பிறகு உங்கள் ராசிக்கு 11 இல் சஞ்சரிப்பதால் மனதில் உற்சாகம், தைரியம் அதிகரிக்கும். தன்னம்பிக்கையால் வாழ்வில் முன்னேறி செல்வீர்கள். கடந்த கால உழைப்பின் பலனை அனுபவிக்கும் காலம். பல வகையில் பணம் வந்து சேரும். அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பிரிந்திருத்த உற்றார், உறவினர் தேடி வருவார்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். வழக்குகள் சாதகமாகும். எதிரிகள் விலகி செல்வார்கள்.

வியாபாரிகளே:

5/11/2019 வரை உங்கள் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய முதலீடுகளால் லாபம் அதிகரிக்கும். உங்கள் போட்டி நிறுவனத்திற்கு சவாலாக இருப்பீர்கள். கூட்டாளிகள் மற்றும் பணியாளர்களால் ஆதாயம் உண்டு. புதிய வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். 5/11/2019 க்கு பிறகு எதிலும் கவனம் தேவை.

உத்தியோகஸ்தர்களே:

5/11/2019 வரை உத்தியோகத்தில் நல்ல உயர்வு ஏற்படும். சக ஊழியர்கள் மற்றும் உயரதிகாரிகள் சாதகமாக இருப்பார்கள். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு தேடி வரும். உங்கள் திறமை உயரதிகாரிகளால் பாராட்டபடும். பெயர், புகழ் பெறுவீர்கள். 5/11/2019 க்கு பிறகு பிரச்சினை வர வாய்ப்புள்ளதால் விழிப்புடன் செயல்படுங்கள்.

மாணவ மாணவியர்களே:

5/11/2019 வரை படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைப்பீர்கள். ஆசிரியர்களின் நல்ல வழிகாட்டுதல் கிடைக்கும். ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு அதிகரிக்கும். விளையாட்டிலும் உங்கள் திறமையை வெளிப்படுத்துவீர்கள். 5/11/2019 க்கு பிறகு எதிலும் நிதானமுடன் செயல்படுங்கள்.

அரசியல்வாதிகளே:

5/11/2019 வரை உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களால் பாராட்டப்படும். மக்களிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். தலைமை உங்களுக்கு சாதகமாவர்கள். சகாக்கள் ஆதரவு கிடைக்கும். முக்கிய பதவிக்கு தலைமையால் பரிந்துரைக்க படுவீர்கள். 5/11/2019 க்கு பிறகு பொறுமை அவசியம்.

கலைத்துறையினரே:

5/11/2019 வரை ஏற்கனவே உள்ள வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். உங்கள் திறமையால் புதிய வாய்ப்புக்கள் தேடி வரும். பிரபலங்களின் நட்பும், அறிமுகமும் கிடைக்கும். உங்கள் முன்னேற்றத்திற்கு அவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். 5/11/2019 க்கு பிறகு எதிலும் கவனம் தேவை.

பரிகாரம்:

  • ஸ்ரீ முருகப்பெருமான், குருபகவான், சித்தர்களை பூஜை செய்தல் மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
  • ஸ்ரீ குருபகவான், சனி பகவான், ராகு, கேது பகவானுக்கு ஹோமம், பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
  • இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு உதவுதல். ஏழை, எளியோர்க்கு அன்னதானம் செய்தல். மீனுக்கு உணவு அளித்தல்.
banner

Leave a Reply

Submit Comment