Dattatreya Jayanthi 2023: Power Day to Invoke Dattatreya to Remedy Problems in Life, Regain Prosperity & Attain Material Fulfillment Join Now
India's No. 1
Online Astrology &
Remedy Solution

கும்பம் ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019 – 2020 ( Tamil Puthandu Rasi Palangal Kumbam 2019 – 2020 )

February 15, 2019 | Total Views : 5,808
Zoom In Zoom Out Print

(அவிட்டம் 3,4 ம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3 ம் பாதம்)

அமைதியை விரும்பும் குணமும், எதிலும் முன்னிலை பெற முயற்சிக்கும் கும்ப ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் சனி பகவான் உங்கள் ராசிக்கு 11 இல் சஞ்சரிப்பது நல்ல பலம் பொருந்திய அமைப்பு ஆகும். உங்கள் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உங்கள் தனித்திறன் மேம்படும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். பல வகையில் தனம் சேரும். இந்தக் காலம் உங்களுக்கு பொற்காலமாக அமையும்.

குருபகவான் 5/11/2019 வரை 10 இல் சஞ்சரிப்பது சாதகமில்லை என்றாலும்,5/11/2019 க்கு பிறகு 11 இல் சஞ்சரிப்பது அனுகூலம் தரும். 24/1/2020 வரை 11 இல் சஞ்சரித்த சனிபகவான் 24/1/2020 க்கு பிறகு 12 இல் ஏழரை சனியாக சஞ்சரிப்பது சாதகமில்லை. ராகு, கேது 5,11 இல் சஞ்சரிப்பது நற்பலன்களை தரும். இந்த வருடம் நீங்கள் 75 சதவீத நற்பலன்களை பெறுவீர்கள்.

குருபகவான் 5/11/2019 வரை உங்கள் ராசிக்கு 10 இல் சஞ்சரிப்பதால், உங்கள் முன்னேற்றத்தில் சிறு, சிறு இடர்பாடுகளை சந்திப்பீர்கள். உங்கள் செயல்பாடுகள் திசை மாறாமல் தவிர்க்க கவனச்சிதறலை தவிர்ப்பது நல்லது. தொழில் மாற்றம் மற்றும், இட மாற்றம் ஏற்படும். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வதால் டென்ஷன் அதிகரிக்கும் என்பதால் வேலைகளுக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி பகிர்ந்து செய்யுங்கள். யோகா, தியானம் போன்ற ஆன்மீக பயிற்சியால் மன அமைதி பெற்று திறம் பட செயல்படலாம்.

குருபகவான் 5/11/2019 க்கு பிறகு உங்கள் ராசிக்கு 11 இல் சஞ்சரிப்பதால் தடைகள், பிரச்சினைகள் விலகும். உங்கள் விடாமுயற்சியால் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பலவகையில் பணம் வந்து சேரும். சமூகத்தில் முக்கிய நபர்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும். சமூகத்தில் உயர்ந்த நிலை அடைவீர்கள். மரியாதை, புகழ், கௌரவம் அதிகரிக்கும்.

ராகு, கேது முறையே வருடம் முழுவதும் உங்கள் ராசிக்கு 5,11 இல் இருப்பதால், பூர்வீக சொத்து பிரச்சினை உருவாகும். குழந்தைகள் உடல்நிலை பாதிப்பு உண்டாகும். குழந்தைகளால் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதால், அவர்களை கண்காணிப்பில் வைத்து அன்புடன் வழி நடத்தி செல்வது நல்லது. இதுவரை இருந்த தடைகள் நீங்கும். நீண்ட நாள் ஆசைகளும், எண்ணங்களும் நிறைவேறும். பலவகையில் பணபுழக்கம் அதிகரிக்கும். வாழ்வில் தொடர் முன்னேற்றம் ஏற்படும் காலம். உங்கள் தனித்திறன் மேம்படும். உங்கள் ஆளுமையால் அனைத்தையும் உங்களுக்கு சாதகமாக்கி கொள்வீர்கள். இருப்பினும், பொறுமையுடனும், கவனமுடனும் செயல்படுங்கள்.

சனிபகவான் 24/1/2020 வரை உங்கள் ராசிக்கு 11 இல் சஞ்சரிப்பதால் வாழ்வில் எதிலும் முன்னேற்றம் பெறும் காலமாகும். நீண்ட நாள் ஆசைகளும், எண்ணங்களும் நிறைவேறும் காலமாகும். உங்களின் கடந்த கால உழைப்பின் பலனை அனுபவிக்கும் காலம் ஆகும். வழக்குகள் சாதகமாகும். விடாமுயற்சியால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். நல்ல அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் தேடிவரும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும். பணபுழக்கமும், வசதி, வாய்ப்புக்களும் அதிகரிக்கும்.

சனிபகவான் 24/1/2020 பிறகு உங்கள் ராசிக்கு 12 இல் சஞ்சரிப்பதால் எதிலும்,பிரச்சினைகள், தடைகள் ஏற்படும். பொருளாதார நிலையில் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் வீண் செலவுகளை தவிர்த்து சிக்கனமுடன் செயல்படுங்கள். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. யாருக்கும் பணம்‌ சம்பந்தமாக ஜாமீன் போன்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். எதிலும் அவசரபட்டு முடிவெடுக்காமல் அதில் உள்ள சாதக, பாதகங்களை சிந்தித்து செயல்படுங்கள்.

வியாபாரிகளே:

5/11/2019 வரை வியாபாரத்தில் சிறு, சிறு பிரச்சினைகளையும் சந்திப்பீர்கள்.வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். புதிய முதலீடுகளை தவிர்க்கவும். உங்கள் நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்களிடையே அதிருப்தி ஏற்படும். கூட்டாளிகள் மற்றும் பணியாட்களால் பிரச்சினை வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. 5/11/2019 க்கு பிறகு வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்களே:

5/11/2019 வரை உத்தியோகத்தில் சில பிரச்சினைகளை சந்திப்பீர்கள். உயரதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களிடையே சுமூகமற்ற நிலை உருவாகும். மற்றவர்களிடம் வெளிப்படையாக பேசுவதை தவிர்க்கவும். தேவையற்ற விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். 5/11/2019 க்கு பிறகு உத்தியோகத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

மாணவ மாணவியர்களே:

5/11/2019 வரை படிப்பில் கவனச்சிதறல் ஏற்பட வாய்ப்புள்ளதால், தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.ஆசிரியர்கள் கூறும் அறிவுரையை ஏற்று கொண்டு அதன் படி நடந்து கொள்ளுங்கள். திட்டமிட்டு படிக்க பழகுங்கள். 5/11/2019 க்கு பிறகு படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

அரசியல்வாதிகளே:

5/11/2019 வரை தலைமையிடம் அதிக கவனம் தேவை. சகாக்கள் உங்களை பற்றி தவறான வதந்திகளை பரப்ப வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. உங்கள் பழைய தவறுகளுக்காக நீங்கள் தண்டிக்க படலாம். மக்களிடம் உங்கள் நற்பெயரை காத்து கொள்ளுங்கள். 5/11/2019 க்கு பிறகு நேர்மறையான மாற்றங்கள் உண்டு.

கலைத்துறையினரே:

5/11/2019 வரை புதிய வாய்ப்புக்கள் தட்டி போகும். பழைய வாய்ப்புக்களில் உங்கள் தனித்திறனை வெளிப்படுத்த இயலாது. முக்கிய நபர்களிடம் பிரச்சினைகளும், மனஸ்தாபங்களும் வரலாம். அதனால் உங்கள் தொழில் பாதிக்கப்படும் நிலை உருவாகலாம். 5/11/2019 க்கு பிறகு புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

பரிகாரம்:

  • ஸ்ரீ விநாயகப்பெருமான் பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுவதும் நன்மை தரும்.
  • ஸ்ரீ குருபகவான்சனி பகவான்ராகுகேது பகவானுக்கு ஹோமம், பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
  • தனது குருவை வழிபடுதல், மாணவர்களுக்கு கல்வி உதவி செய்தல், எதிலும் நேர்மையுடன் செயல் படுதல். தனது தவறுகளை கண்டு திருத்தி கொள்ளுதல்.
     

Leave a Reply

Submit Comment