Chitra Purnima: Invoke Chitragupta’s Birthday Blessings On Full Moon Day to Erase Karmic Records JOIN NOW

March Month Rasi Palan 2019 in Tamil

February 14, 2019 | Total Views : 12,369
Zoom In Zoom Out Print

கன்னி மார்ச் மாத ராசி பலன் 2019 - March Matha Kanni Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

நீங்கள் அதிக கவனத்துடன் மெதுவாகச் செயலாற்ற வேண்டும். உங்கள் உரையாடல் பிறரால் தவறாக எடுத்துக் கொள்ளப்படும். தொழிலில் நீங்கள் எதிர் கொள்ளும் சிக்கல்களை தீர்க்க நீங்கள் யோசித்து செயல்பட வேண்டும். தெரியாத விஷயங்களில் நீங்கள் ஈடுபடுதல் கூடாது. குடும்ப வாழ்க்கை சாதாரணமாக செல்லும். திடீர் பயணங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். முக்கியமான விஷயங்களில் நீங்கள் சரியான முறையில் முடிவுகளை எடுத்தாலும் தேவையற்ற குழப்பங்கள் இருக்கும். பணிகளில் நீங்கள் தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும். அன்றாட தேவைகளோ அல்லது தனிப்பட்ட தேவைகளுக்கோ உங்கள் நண்பர்களிடமிருந்து ஆதரவு கிடைக்கும். சமூக வாழ்க்கையில் நீங்கள் காட்டும் சுறுசுறுப்பு உங்களை மகிழ்ச்சியோடு வைத்திருக்கும். கூடுதல் நேரம் செலவழித்து சமூக தொண்டில் ஈடுபடுவீர்கள். உங்கள் உடல் நிலை சாதாரணமாக காணப்படும். உடலில் கொழுப்பின் அளவு சிறிது அதிகமாக இருக்கும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

உங்களது ஜாதக பிரத்யேக பலன்களை தெரிந்து கொள்ள ஜோதிட வல்லுனரை அணுகவும்

 

ரிஷபம் மார்ச் மாத ராசி பலன் 2019 - March Matha Rishabam Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இது சிறப்பான நற்பலன்களை அளிக்கக்கூடிய நல்ல மாதம் ஆகும். சமூக வாழ்வில் உங்களுடைய இனிமையான இயல்பு காரணமாக குறிப்பிடத்தக்க நபர்களுடனான தொடர்புகள் மேம்படும். உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் பணியாற்ற உங்கள் உற்சாகம் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நீங்கள் நன்கு உறவாட வேண்டும். உங்கள் நடத்தையில் வஞ்சகமான எண்ணங்களைத் தவிர்க்கவும். உங்கள் சமூக சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். உயர் கல்விக்கு நீங்கள் முன்னுரிமை அளிப்பீர்கள். அது உங்கள் தொழிலுக்கு மேலும் வலு சேர்க்கும். நீங்கள் விஷயங்களை நடைமுறைக்கேற்றவாறு அணுகுவதற்கு முயற்சி செய்யுங்கள். உங்கள் ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும். அதுவே உங்களுக்கு பெரிய ஆறுதலாக இருக்கும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

உங்களது ஜாதக பிரத்யேக பலன்களை தெரிந்து கொள்ள ஜோதிட வல்லுனரை அணுகவும்

விருச்சிகம் மார்ச் மாத ராசி பலன் 2019 - March Matha Viruchigam Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இந்த மாதம் நீங்கள் விரும்பிய பலன்களை பெறக்கூடிய நல்ல மாதமாக இருக்கும். நீங்கள் முனைப்புடன் வேலை செய்து அனைத்துக் கடமைகளையும் நிறைவேற்றுவீர்கள். உங்கள் நோக்கங்கள் மிக எளிதாக நிறைவேறி விடும். சமூக மற்றும் தொழில் வாழ்க்கையில் வழக்கமான தொடர்பாடலில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் விருப்பப்படி நீங்கள் ஒரு அசையா சொத்தை வாங்குவதற்கு வாய்ப்பு அமையலாம். நிலுவையிலுள்ள பணிகளை முடிக்கும் வகையில் அவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். குடும்பத்துடன் ஒரு மகிழ்ச்சியான பயணத்திற்கு திட்டமிடுவீர்கள். அது எல்லோரையும் உற்சாகமாக வைத்திருக்கும். உங்கள் எதிர்கால திட்டங்கள் மெதுவாக செயல்படத் தொடங்கும். குடும்பத்தில் உள்ள பொறுப்புகளை நிறைவு செய்யும் வகையில் உங்களுக்கு ஒரு வாய்ப்பு வரலாம். உங்கள் ஆரோக்கியம் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். பணியில் காணப்படும் சவாலான விஷயங்களைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

உங்களது ஜாதக பிரத்யேக பலன்களை தெரிந்து கொள்ள ஜோதிட வல்லுனரை அணுகவும்

தனுசு மார்ச் மாத ராசி பலன் 2019 - March Matha Dhanu Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இது நடவடிக்கைகள் பற்றிய பொதுவான கண்ணோட்டத்துடன் நடைமுறைக்கேற்ப செயல்படும் மாதமாக இருக்கும். இந்த காலப்பகுதியில் உங்கள் குறிக்கோள்களுக்காக திட்டமிட வேண்டும். அதன் மூலம் முறையான திட்டம் மற்றும் செயலாற்றுவதற்கான ஒரு வழி கிடைக்கலாம். பணிகளை முடிப்பதில் அவசரம் காட்டாதீர்கள். நீங்கள் முக்கியமான வேலைகளை முறையாக ஆற்ற வேண்டும். நீங்கள் தொழிலில் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். அதன் மூலம் பணிகளை முடிக்க இயலும். உங்களின் சமூக வாழ்வும் தனிப்பட்ட வாழ்வும் சாதரணமாக காணப்படும். உங்கள் கடின உழைப்பிற்கான பலன்களைப் பெறுவீர்கள். நிதியில் ஸ்திரத்தன்மை உங்களுக்கு நிஜமான திருப்தியை வழங்கும். உங்கள் நெருங்கிய உறவினர்களின் சுப நிகழ்சிகளில் நீங்கள் கலந்து கொள்வீர்கள். பொது மக்களிடம் தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். நீங்கள் முறையான உணவு முறையை பின்பற்றுவதன் மூலம் ஆரோக்கியத்தைப் பேண முடியும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

உங்களது ஜாதக பிரத்யேக பலன்களை தெரிந்து கொள்ள ஜோதிட வல்லுனரை அணுகவும்

மீனம் மார்ச் மாத ராசி பலன் 2019 - March Matha Meenam Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இந்தக் காலகட்டத்தில் கையிலுள்ள வேலைகளை முடிப்பது சிறப்பு. பணிகளில் உணர்ச்சி வசப்படுதலைத் தவிர்ப்பதோடு அமைதியுடன் செயலாற்ற வேண்டும். தொழிலில் உங்கள் முயற்சிகளுக்கான அங்கீகாரம் பெறுவீர்கள். பணியில் உங்களுடைய அர்ப்பணிப்பு காரணமாக பதவி உயர்வு பெறுவீர்கள். இந்தக் காலகட்டத்தில் பணம் சேமிப்பதில் கவனம் அதிகரிக்கும். சொந்த விஷயங்களில் நீங்கள் குறிப்பாக இருப்பதன் மூலம் அவற்றை சிறப்பாக முடிக்கலாம். குடும்ப உறுப்பினர்களுடன் ஒரு ஆன்மீக பயணத்திற்கு செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. உங்களுடைய கோப இயல்பு சில வழக்கமான விவகாரங்களில் உங்கள் குடும்ப உறுப்பினர்களைக் காயப்படுத்தலாம். புதிய வேலைகளை எடுத்துச் செய்வதற்கு பதிலாக ஏற்கனவே இருக்கும் வேலைகளை முடிக்க வேண்டும். உங்கள் ஆரோக்கியம் சாதாரணமாக காணப்படும். பரிந்துரைக்கப்பட்ட படி உங்கள் உணவில் கட்டுப்பாட்டை நீங்கள் பின்பற்ற வேண்டும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

உங்களது ஜாதக பிரத்யேக பலன்களை தெரிந்து கொள்ள ஜோதிட வல்லுனரை அணுகவும்

துலாம் மார்ச் மாத ராசி பலன் 2019 - March Matha Thulam Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இந்த மாதம் முழுவதும் பேச்சு வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்கள் யாவும் நடைபெறும். உங்கள் செயல்களை நீங்கள் மேற்கொள்ளும் போது சில பதட்டங்கள் காணப்பட்டாலும் அவற்றில் வளர்ச்சியைக் கண்டு மகிழ்வீர்கள். நீங்கள் அனைத்துப் பணிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அவற்றின் மூலம் குறிப்பிடத்தக்க நல்ல பலன்கள் கிட்டும். உங்கள் திறமையை மேம்படுத்திக் கொள்ள புதிய விஷயங்களைப் புரிந்து கொள்ளவும், கடினமாக உழைக்கவும் தயாராக இருப்பீர்கள். நீங்கள் எதையும் விரைவாக கற்றுக் கொள்வீர்கள். எதையும் உடனே கிரகித்துக் கொள்ளும் உங்களுடைய திறன்கள் உங்கள் மன வலிமையை ஆதரிக்கும். தொடர்ந்து தியானம் செய்வதன் மூலம் உங்கள் நேர்மறை ஆற்றலை மேம்படுத்த முடியும். எல்லோருடைய தனிப்பட்ட பிரச்சினையையும் தீர்ப்பதில் நீங்கள் ஒரு நல்ல ஆலோசகராகிவிடுவீர்கள். இது உங்கள் வட்டத்தில் அன்பான உறவை உருவாக்கும். நிதி வளர்ச்சி உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும். உங்கள் உடல்நலம் சுமாராக இருக்கும். உணவு முறைக்கு முன்னுரிமை அளியுங்கள். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

சிம்மம் மார்ச் மாத ராசி பலன் 2019 - March Matha Simha Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

உங்கள் பணிகளை வெற்றிகரமாக முடித்த திருப்தி உங்களுக்குக் கிடைக்கும். ஒவ்வொரு முயற்சிக்கும் நற்பலன் பெற்று அதனால் அக மகிழ்ச்சியோடு இருப்பீர்கள். உங்கள் உரையாடல் திறன் மூலம் அதிக நன்மை பெறுவீர்கள். உங்களுடைய உண்மையான சேவையால் உங்கள் வேலையில் முன்னேற்றம் காண்பீர்கள். நீங்கள் சரியான முறையில் செயல்பட முயற்சிக்க வேண்டும். ஒவ்வொரு செயலுக்கும் ஒரு எதிர்வினை உண்டு. இது விஷயங்களைச் சரியாக புரிந்து கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சமூக வட்டத்தில் ஓரளவு புகழ் அதிகரிக்கும். உங்கள் நேர்மையான இயல்பு காரணமாக குடும்பத்தில் திருப்தி நிலவும். நீண்ட காலமாக நிலுவையிலிருக்கும் ஆசைகள் நிறைவேறும். இந்த நேரத்தில் நீங்கள் மிகவும் பயன்மிக்க ஆன்மீக பயணங்களுக்கு செல்லலாம். நீங்கள் முழு ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள். எல்லாச் செயல்களையும் நீங்கள் சுறுசுறுப்பாக மேற்கொள்வீர்கள். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

மிதுனம் மார்ச் மாத ராசி பலன் 2019 - March Matha Mithunam Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இது உங்களுக்கு ஆக்கப்பூர்வமான மாதமாகும். நீங்கள் வேலைகளை நிலுவையில் வைத்திருப்பதற்குப் பதிலாக அவற்றிற்கு முன்னுரிமை அளித்து முடிக்க வேண்டும். பெரும்பாலான பணிகள் மெதுவாக நடக்கும்; நீங்கள் பணிகளை மேற்கொள்ளும் போது எரிச்சல் அடைவதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் சமூக தொடர்பாடலில் சுறுசுறுப்பை மேற்கொள்ள வேண்டும். வேலையில் கிடைக்கும் எந்த வாய்ப்பையும் நீங்கள் தவற விடக் கூடாது. நீங்கள் செய்யும் தொழிலின் மூலம் நிதி ஆதாயம் பெருகும். கடினமாக உழைக்க வேண்டிய நேரம் இது. சில நேரங்களில், உங்கள் அலட்சியம் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகளைத் தராமல் போகலாம். சூழ்நிலைகளின் தன்மைக்கு ஏற்ப முடிவுகளை எடுப்பதை நீங்கள் வழக்கமாக்கிக் கொள்வீர்கள். இந்தக் காலகட்டத்தில் உங்கள் உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகளை நீங்கள் கட்டுப்படுத்தா விட்டால் உங்கள் மனநிலை கெட்டுப்போகும், உங்களால் எதையும் சாதிக்க இயலாது. பணிகளை கையாளக்கூடிய வகையில் உடல்நலம் நன்றாக இருக்கும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

மகரம் மார்ச் மாத ராசி பலன் 2019 - March Matha Makara Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இந்த மாதம் உங்களுக்கு ஆக்கப்பூர்வமான பலன்கள் கிட்டும். பிறவியிலேயே காணப்படும் உங்கள் திறமை மூலம் நீங்கள் பிரச்சினைகளுக்கு எளிதாக தீர்வு காண்பீர்கள். உங்களின் சாதாரண தகவல் தொடர்புகள் மூலம் உங்கள் முயற்சிகளில் முழுமையான பலன்கள் கிட்டும். நீங்கள் பிறருக்கு உதவி புரிவீர்கள். மற்றவர்கள் உங்களை மரியாதையுடன் நடத்துவார்கள். கடைசி நேரத்தில் எழும் பிரச்சினைகளை தீர்க்க உங்கள் அறிவுத் திறன் உதவிகரமாக இருக்கும். நவீன தகவல்கள் பெறும் விஷயத்தில் நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். உங்கள் வருமானம் அதிகரிக்கும். உங்கள் தரம் உயரும். உங்கள் வார்த்தைகள் மூலம் பிறரை ஈர்ப்பீர்கள். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்கள் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

கடகம் மார்ச் மாத ராசி பலன் 2019 - March Matha Kadagam Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

உங்கள் இலக்குகளை அடைவதற்கு இந்த மாதம் ஒரு சாதாரண காலமாக இருக்கும். தேவைப்பட்டால், தொழில் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். நீங்கள் சமூக தொடர்புகளை அதிகரித்துக் கொள்ள வேண்டும். குடும்ப விஷயங்களில் நீங்கள் நேர்மையானவராக இருக்க வேண்டும். சூழ்நிலைகள் உங்களைப் புத்திசாலித்தனமான நபராக நடைமுறை கண்ணோட்டத்தை கொண்டவராகவும் உருவாக்கும். நீங்கள் மற்றவர்களிடமிருந்து உதவி பெறுவதை தவிர்க்க வேண்டும், ஆனால் எப்போது வேண்டுமானாலும் மற்றவர்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்க வேண்டும். நஷ்டங்களைத் தவிர்ப்பதற்கான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் நீங்கள் பின்பற்ற வேண்டும். நீங்கள் விரும்பும் வகையில் சொத்தை வாங்கலாம். ஆவணங்கள் விஷயத்தில் தெளிவாக இருக்க வேண்டும். உங்கள் ஆரோக்கியத்தைக் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும், ஏனெனில் நேரம் தவறி எடுத்துக்கொள்ளும் உணவால் பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

மேஷம் மார்ச் மாத ராசி பலன் 2019 - March Matha Mesham Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

இது உங்கள் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டிய மாதம் ஆகும். பணியின் போது உங்கள் எளிய தவறு அல்லது சோம்பலான போக்கு காரணமாக தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் பணியின் போது அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். பணிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து முழு ஆதரவு கிடைக்கும். நீங்கள் சுற்றுலா சென்று மகிழ்வீர்கள். சமூக சேவை குறித்த உங்கள் ஆர்வம் பாராட்டத்தக்கது. சமூக உறவுகளைப் பராமரிப்பதில் உங்கள் உறுதிப்பாடு உங்களுக்கு நிஜமான திருப்தியை அளிக்கும். குடும்பத்தில் கொண்டாட்டங்கள் இருக்கும். உங்கள் பிள்ளைகள் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் வகையில் முன்னேற்றம் அடைவார்கள். இந்த நேரத்தில் உங்கள் உடல்நலம் சாதாரணமாக இருக்கும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

கும்பம் மார்ச் மாத ராசி பலன் 2019 - March Matha Kumbam Rasi Palan in Tamil 2019

பொதுப்பலன்கள்

சிறந்த முன்னேற்றம் ஏற்படுவதற்கான ஒரு சிறப்பான நேரம் இது. இதற்கு முன் நீங்கள் எடுத்த விடா முயற்சிகள் யாவும் இப்பொழுது நேர்மறையான பலன்களை அளிக்கும். உங்கள் தொழிலில் சிறப்பு நிலை காண்பீர்கள். நிதி நிலைமையில் மேம்பாடு இருக்கும். உங்களுடைய அதிர்ஷ்டத்தினால் நீண்டகாலமாக நிலுவையிலுள்ள வேலைகள் நிறைவேறும். உங்கள் தொழிலில் முன்னேற்றம் காண கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்துவதற்கான சரியான நேரம். உங்களுடைய பெரும்பாலான சுமைகள் சிறிது சிறிதாக குறைவதற்கு வாய்ப்புள்ளதால் இந்த மாதம் உங்களுக்கு நிஜமான திருப்தி கிடைக்கும். நீங்கள் ஒரு முக்கியமான வேலையை முடிப்பதற்கு வான் வழிப் பயணம் செய்யும் ஒரு வாய்ப்பு கிடைக்கும். இந்த மாதம் உங்கள் உடல் நலம் சாதாரணமாக இருக்கும். மேலும் பலன்களை அறிய இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

banner

Leave a Reply

Submit Comment