Purify Your Living Space: Invoke the Custodians of Land & Properties - Vastu Purusha & Ashta Dikpalaka Join Now
India's No. 1
Online Astrology &
Remedy Solution

கும்பம் ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018 – 2019 ( Tamil Puthandu Rasi Palangal Kumbam 2018 – 2019 )

March 30, 2018 | Total Views : 5,316
Zoom In Zoom Out Print

(அவிட்டம் 3,4 ம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3 ம் பாதம்) எதிலும் சிந்தித்து எச்சரிக்கை உணர்வுடன் செயல்படும் கும்ப ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் சனிபகவான் 11 ல் இருப்பதால் உங்கள் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். பண வரவு அதிகமாக இருக்கும். அசையும், அசையா சொத்து சேர்க்கை ஏற்படும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். குடும்பத்தில் சுப நிகழச்சிகள் நடக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு பயணங்களால் ஆதாயம் உண்டாகும். குருபகவான் 11/10/2018 வரை உங்கள் ராசிக்கு 9 ல் இருப்பதால் தெய்வ அனுகூலம் உண்டாகும். இது உங்களுக்கு அதிர்ஷ்டமான காலம். உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான முக்கிய ஆலோசனை கிடைக்கும். ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள். வெளியூர் மற்றும் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்கும். புகழ், பெருமை அதிகரிக்கும். கௌரவ பதவிகள் கிடைக்கும். 11/10/2018 க்கு பிறகு எதிலும் கவனமுடன் செயல்படுங்கள். உங்கள் செயல் பாடுகளில் மற்றவர்கள் எளிதில் குறை கண்டு பிடிப்பார்கள். எதிலும் முழு கவனத்துடன் இருப்பதும், செய்வன திருந்த செய்வதும் நல்லது. ராகு, கேது முறையே 6/3/2019 வரை உங்கள் ராசிக்கு 6,12 ல் சஞ்சரிப்பதால் காரிய சாதனை செய்வீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி ஏற்படும். நீண்டகால ஆசைகள் நிறைவேறும். வழக்குகள் சாதகமாகும். எதிரிகள் விலகி செல்வார்கள். வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நலம் பெறும். ஆன்மீக பயணங்கள் அதிகரிக்கும். இதுவரை இருந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் விடிவு காலம் பிறக்கும். 6/3/2019 க்கு பிறகு ராகு, கேது உங்கள் ராசிக்கு 5,11 ல் சஞ்சரிப்பதால் குழந்தைகள் உடல் நலனில் கவனம் தேவை. குழந்தைகளை கண்காணிப்பில் வைத்து அன்புடன் அரவணைத்து செல்வது நல்லது. பூர்வீக சொத்து விஷயங்களில் கவனம் தேவை. குலதெய்வ வழிபாடு அவசியம். இருப்பினும் பல வகையில் ஆதாயம் உண்டாகும். நண்பர்கள் மற்றும் மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். முயற்சிகள் வெற்றி அடையும். சனிபகவான் இந்த வருடம் முழுவதும் உங்கள் ராசிக்கு 11 ல் சஞ்சரிப்பதால் நீண்ட கால முயற்சிகள் வெற்றி பெறும். உங்கள் ஆசைகள் நிறைவேறும். பல வகையில் தன வரவு உண்டாகும். புதிய வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகள் கைகூடும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். உடல் ஆரோக்கியம் பெறும். புகழ், மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். மற்றவர்கள் பணிந்து செல்வார்கள். எதிலும் கட்டுப்பாடுடன் செயல்பட்டால் நிரந்தரமான, நிலையான வெற்றி பெறலாம். ஆணவத்தை தவிர்க்கவும். tamil-puthandu-rasi-palangal-kumbam-2018-2019 வியாபாரிகளே: வியாபாரத்தில் பல வகையில் முன்னேற்றம் உண்டாகும். புதிய முதலீடுகளால் லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகள் மற்றும் பணியாளர்களால் ஆதாயம் உண்டு. புதிய வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். உங்கள் நிறுவனம் பிரபலமாகும். உத்தியோகஸ்தர்களே: உத்தியோகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். உயரதிகாரிகள் உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். மாணவ மாணவியர்களே: படிப்பில் உங்கள் ஆர்வமும், நினைவாற்றலும் அதிகரிக்கும். ஆசிரியர்களின் சரியான வழிகாட்டுதலும், ஒத்துழைப்பும் கிடைக்கும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். படிப்பில் அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைப்பீர்கள். அனைவரின் பாராட்டினை பெறுவீர்கள். அரசியல்வாதிகளே: தலைமையிடம் நெருக்கம் அதிகரிக்கும். சகாக்கள் சாதகமாக செயல்படுவார்கள். மக்களிடையே உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பிரபலமாவீர்கள். புகழ், மதிப்பு உயரும். தலைமை உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். கலைத்துறையினரே: கலைத்துறையில் சாதனை படைக்கும் காலம். உங்கள் தனித்திறமையை வெளிபடுத்த கூடிய வாய்ப்புகள் அமையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். புகழ், பெருமை அதிகரிக்கும். சமூகத்தில் உங்கள் நிலை உயரும். பலரின் பாராட்டு கிடைக்கும். பரிகாரம்:
  • ஏழை, எளியவர் மற்றும் ஊனமுற்றோருக்கு பண உதவி, மருத்துவ உதவி செய்தல்.
  • ஆலயங்களில் அன்னதானம் செய்தல்.
  • ஸ்ரீ ராகு, கேது பகவான் மற்றும் குருபகவானுக்கு ஹோமம், பூஜை மற்றும் ஆலய வழிபாடு செய்தல்.
  • ஸ்ரீ லட்சுமிநாராயணனுக்கு ஹோமம், பூஜை மற்றும் ஆலய வழிபாடு செய்தல்.
  • Leave a Reply

    Submit Comment