(பூரட்டாதி 4 ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
எளிதில் காதல் வயப்படும்
மீன ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் குருபகவான் 8 ல் இருப்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. வீண் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். யாருக்கும் ஜாமீன் போன்ற செயல்களில் இறங்க வேண்டாம். மனதை அமைதியாக வைத்து கொள்ளுங்கள். எந்த பிரச்சினையையும் நாசுக்காக கையாளுங்கள். இல்லையனில் விலகி சென்று விடுங்கள். உடல் நிலையில் கவனம் தேவை. நன்மை, தீமைகளை பகுத்தறிந்து விழிப்புணர்வுடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம்.
குருபகவான் 11/10/2018 வரை உங்கள் ராசிக்கு 8 ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பிரச்சினைகள் உருவாகும். இரவு நேர பயணம் மற்றும் நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. யாருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் ஜாமீன் நிற்க வேண்டாம். வீண் வம்பு, வழக்குகளை சந்திக்காமல் இருக்க பொறுமை அவசியம். 11/10/2018 க்கு பிறகு உங்கள் பிரச்சனைகள் தீர்ந்து எதிலும் சுமுகமான சூழல் உருவாகும். தெய்வ அனுகூலம் உண்டாகும். புகழ், செல்வாக்கு அதிகரிக்கும். கௌரவ பதவி கிடைக்கும்.
ராகு, கேது முறையே 6/3/2019 வரை உங்கள் ராசிக்கு 5,11 ல் இருப்பதால் குழந்தைகள் உடல் நலனில் கவனம் தேவை. குழந்தைகளை கண்காணிப்பில் வைத்து அன்புடன் அரவணைத்து செல்வது நல்லது. பூர்வீக சொத்து விஷயங்களில் கவனம் தேவை. யோகா, தியானம், இறைவழிபாடு இவற்றால் மன குழப்பத்தை தவிர்க்கலாம். குலதெய்வ வழிபாடு அவசியம். இருப்பினும் பல வகையில் ஆதாயம் உண்டாகும். நண்பர்கள் மற்றும் மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். முயற்சிகள் வெற்றி அடையும்.
6/3/2019 க்கு பிறகு ராகு, கேது முறையே உங்கள் ராசிக்கு 4,10 க்கு வருவதால் தாய்க்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படும். தாய் மற்றும் உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்படும் என்பதால் கவனம் தேவை. வீடு, வாகனம், நில ஆவணங்களை கவனமுடன் கையாள்வது நல்லது. உத்தியோகத்தில் உயரதிகாரிகள், சக ஊழியர்களால் பாதிப்பு ஏற்படும் என்பதால் கவனம் தேவை. உங்களை பற்றிய வீண் வதந்தி பரவ வாய்ப்பு உண்டாகும் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பொறுமையும், விழிப்புணர்வும் வெற்றிக்கு வழி.
சனிபகவான் இந்த வருடம் முழுவதும் உங்கள் ராசிக்கு 10 ல் சஞ்சரிப்பதால் தந்தையுடன் இருந்த கருத்து மோதல்கள் குறையும். பிதுர் வழி சொத்து பிரச்சினை தீரும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். உழைப்பின் பலனை அனுபவிக்க கூடிய காலமாகும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். புதிய தொழில் துவங்க உகந்த காலமாகும்.
வியாபாரிகளே:
11/10/2018 வரை வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். கூட்டாளிகள் மற்றும் பணியாளர்களை கண்காணிப்பில் வைத்து கொள்வது நல்லது. புதிய முதலீடுகளை தவிர்க்கவும். 11/10/2018 க்கு பிறகு வியாபாரத்தில் பல மடங்கு முன்னேற்றம் ஏற்படும். புதிய முதலீடுகளால் லாபம் அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்களே:
11/10/2018 வரை உத்தியோகத்தில் சிறு சிறு பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும் என்பதால் கவனம் தேவை. உயரதிகாரிகள், சக ஊழியர்களிடம் வெளிப்படையாக பேசுவதை தவிர்க்கவும். 11/10/2018 க்கு பிறகு உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும்.
மாணவ மாணவியர்களே:
11/10/2018 வரை படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. உடல் ஆரோக்கியம் படிப்பை பாதிக்காமல் கவனித்து கொள்ளுங்கள். ஆசிரியர் மற்றும் நண்பர்களிடம் நல்ல உறவை மேம்படுத்தி கொள்ளுங்கள். 11/10/2018 க்கு படிப்பில் அதிக மதிப்பெண் பெற்று அனைவரின் பாராட்டினை பெறுவீர்கள்.
அரசியல்வாதிகளே:
11/10/2018 வரை தலைமையிடம் அதிக உரிமை எடுத்து கொள்ள வேண்டாம். சகாக்களிடம் வெளிப்படையாக பேசுவதை தவிர்க்கவும். 11/10/2018 க்கு பிறகு தலைமை மற்றும் சகாக்கள் தங்களுக்கு அனுகூலமாக இருப்பார்கள். புகழ், பெருமை அதிகரிக்கும். தலைமை உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.
கலைத்துறையினரே:
11/10/2018 வரை தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள், புதிய வாய்ப்புகள் தாமதமாகும். யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம். 11/10/2018 க்கு பிறகு புதிய வாய்ப்புகள் தேடி வரும். புகழ், மரியாதை உயரும். பிரபலமாவீர்கள்.
பரிகாரம்:
படிக்கும் குழந்தை மற்றும் மாணவர்களுக்கு கல்விக்கு பண உதவி செய்தல்.
ஸ்ரீ குருபகவான், ராகு, கேது பகவானுக்கு ஹோமம் , பூஜை மற்றும் ஆலய வழிபாடு செய்தல்.
சிவபெருமானுக்கு பாலபிஷேகம், ஹோமம், பூஜை ஆலய வழிபாடு செய்தல்.