(உத்திராடம் 2,3,4 ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 ம் பாதம்)
எதிலும் நிதானமும், பொறுமையும், காரிய சாதனையும் செய்யும் மகர ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் சனிபகவான் 12 ல் இருப்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுங்கள். வீண் விரயங்களை தவிர்க்க சிக்கனமுடன் இருப்பது நல்லது. யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். நன்மை, தீமைகளை பகுத்தறியும் திறனை வளர்த்து கொள்ளுங்கள். யாருக்கும் ஜாமீன் போன்ற விஷயங்களில தலையிட வேண்டாம். தன்னம்பிக்கை மற்றும் விழிப்புணர்வுடன் இருந்தால் வெற்றி நிச்சயம்.
குருபகவான் 11/10/2018 வரை உங்கள் ராசிக்கு 10 ல் இருப்பதால் சுயமரியாதைக் குறைவான நிகழ்வுகள், பணி செய்யும் இடத்தில சுய மரியாதை குறைவான நிகழ்வுகள், மறைமுக எதிரிகளால் பிரச்சினை, உயரதிகாரி மற்றும் சக ஊழியர்களால் பிரச்சினை, பதவி இழப்பு மற்றும் பதவி மாற்றம், தனது தகுதிக்கு குறைவான செயல்களை செய்ய நிர்பந்தித்தல், வீண் பழி உண்டாகுமென்பதால் கவனம் தேவை. 11/10/2018 க்கு பிறகு உங்கள் புகழ், கௌரவம், அந்தஸ்து, செல்வாக்கு அதிகரிக்கும். உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர் மற்றும் நண்பர்களால் ஆதாயம் அடைவீர்கள். பதவி உயர்வு, ஊதிய உயர்வு உண்டாகும்.
ராகு ,கேது முறையே 6/3/2019 வரை 7,1 ல் சஞ்சரிப்பதால் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்புள்ளதால் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வது நல்லது. குடும்ப விஷயங்களில் வெளி ஆட்களின் தலையீட்டை தவிர்க்கவும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் பிரச்சினை உருவாகுமென்பதால் கவனம் தேவை. எதிலும் விருப்பமற்று வெறுப்பு, விரக்தி ஏற்படும். எதிர்மறை சிந்தனைகளை தவிர்த்து, நேர்மறை சிந்தனைகளை வளர்த்து கொள்ளுங்கள். இறைவழிபாடு, தியானம் நன்மை தரும்.
6/3/2019 க்கு பிறகு ராகு, கேது முறையே 6,12 ஆக சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கி மனம் தெளிவாகும். வழக்குகள் சாதகமான நிலை உருவாகும். எதிரிகள் விலகி செல்வார்கள். உடல் நிலை ஆரோக்கியம் பெறும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். ஆன்மீக பயணங்கள் செல்ல நேரிடும். மனதில் ஞானத்தெளிவு பிறக்கும். சிறு சிறு மருத்துவ செலவுகள் உண்டாகும்.
சனிபகவான் இந்த வருடம் முழுவதும் உங்கள் ராசிக்கு 12 ல் ஏழரைச்சனியில் விரைய சனியாக சஞ்சரிப்பதால் மனதை அமைதியாக வைத்து கொள்ளுங்கள். பண விஷயங்களில் மிகவும் கவனம் தேவை. யாருக்கும் முன் ஜாமீன் போன்ற விஷயங்களில் ஈடுபட வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற பிரச்சினைகள், வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும். தியானமும், இறைவழிபாடும் நல்லது. தனது கடமையில் தவறாமல் கண்ணும் கருத்துமாக செய்தால் அனைத்திலும் வெற்றி உண்டாகும். கடன் கொடுப்பது, புதிய முதலீடுகளை தவிர்க்கவும்.
வியாபாரிகளே:
11/10/2018 வரை வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. புதிய முதலீடுகளை தவிர்க்கவும். கூட்டாளிகள் மற்றும் பணியாளர்களை கண்காணிப்பில் வைத்து கொள்வது நல்லது. 11/10/2018 க்கு பிறகு வியாபாரத்தில் நல்ல மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படும்.
உத்தியோகஸ்தர்களே:
11/10/2018 வரை உத்தியோகத்தில் உயரதிகாரிகளால் பல பிரச்சினைகள் உருவாகும். சக ஊழியர்களிடம் வெளிப்படையாக பேசுவதை தவிர்க்கவும். பொறுமை தேவை. 11/10/2018 க்கு பிறகு உத்தியோகத்தில் நிலைமை ஓரளவு சீரடையும். இருப்பினும் கவனமுடன் இருப்பது நல்லது.
மாணவ மாணவியர்களே:
11/10/2018 வரை படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். ஆசிரியர்களின் சொல் படி கேட்டு நடந்து கொள்ளுங்கள். 11/10/2018 க்கு பிறகு படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும். காதல் போன்ற விஷயங்களில் நேரத்தை வீணாக்க வேண்டாம்.
அரசியல்வாதிகளே:
11/10/2018 வரை தலைமையிடம் கவனமுடன் இருங்கள். உங்களை பற்றிய வீண் வதந்திகள் பரவ வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. சகாக்களிடம் எச்சரிக்கை தேவை. 11/10/2018 க்கு பிறகு தலைமையிடம் நெருக்கம் அதிகரிக்கும். தலைமை உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.
கலைத்துறையினரே:
11/10/2018 வரை தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். புதிய வாய்ப்புகள் தாமதமாகும். பொறுமை அவசியம். 11/10/2018 க்கு பிறகு புதிய வாய்ப்புகள் தேடி வரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உங்கள் திறமையால் புகழ் பெறுவீர்கள்.
பரிகாரம்:

Leave a Reply