Navaratri - Experience 333 sacred Navaratri ceremonies invoking Goddess power for success & protection Join Now
AstroVed Menu
AstroVed
search
search

கடகம் ராசி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018 - 2019 ( Tamil Puthandu Rasi Palangal Kadagam 2018 - 2019 )

March 28, 2018 | Total Views : 4,318
Zoom In Zoom Out Print

(புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்) அரசியல் அறிவும், ஆளுமையும் மிக்க கடக ராசி அன்பர்களே, இந்த விளம்பி வருடப்பிறப்பு படி உங்கள் ராசிநாதன் சந்திரன், முயற்சி மற்றும் விரையாதிபதி புதனுடன் பாக்கியஸ்தானத்தில் இருப்பதால், எந்த செயலிலும் விடாமுயற்சியோடு செயல்படுவீர்கள். மனதில் தைரியம், உற்சாகம் அதிகரிக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு பயணங்களால் நன்மை ஏற்படும். இருப்பினும் வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் சிக்கனம் தேவை. குருபகவான் 11/10/2018 வரை உங்கள் ராசிக்கு 4 ல் சஞ்சரிப்பதால் தாய் மற்றும் உறவினர்களுடன் கருத்து வேறுபாடு உருவாகும். தாய் உடல்நிலை பாதிப்பு ஏற்படும். வீடு, நிலம், வாகனம் தொடர்பான ஆவணங்களை சரியாக வைத்து கொள்ளுங்கள். இரவு நேர பயணங்கள் மற்றும் நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. 11/10/2018 க்கு பிறகு குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். உடல் நலம் சீராகும். விலகி சென்ற உறவுகள் தேடி வருவார்கள். திருமண முயற்சிகள் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் வெற்றி பெறும். தெய்வ அனுகூலம் உண்டு. ராகு, கேது முறையே 6/3/2019 வரை 1,7 ல் சஞ்சரிப்பதால் மன குழப்பம்,கவலை, தீராத பிரச்சினைகளால் மனம் சோர்வடையும். எதிர்காலம் பற்றிய கவலை, எதிர்மறை எண்ணங்கள் வந்து வாட்டும் என்பதால் நேர்மறை எண்ணங்களால் மனதை நிரப்புங்கள். உணவு விஷயங்களில் கவனம் தேவை. உடல் ஆரோக்ய குறைபாடு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு வர வாய்ப்புள்ளதால், ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு விட்டு கொடுத்து சென்றால் இல்லறம் நல்லறமாக இனிக்கும். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளிடம் கவனமுடன் இருப்பது நல்லது. tamil-puthandu-rasi-palangal-kadagam-2018-2019 6/3/2019 க்கு பிறகு ராகு, கேது முறையே 12,6 ல் வருவதால் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி ஏற்படும். எதிரிகள் விலகி செல்வார்கள். தன வரவு அதிகரிக்கும். புகழ், அந்தஸ்து மதிப்பு மரியாதை உயரும். தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படும். வெளியூர், வெளிநாடு பயணங்களால் ஆதாயம் உண்டாகும். உழைப்பே உயர்வு என்பதை உணரும் காலம். சனிபகவான் வருடம் முழுவதும் 6 ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் பெறும். நீண்ட நாள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். எதிரிகள் விலகி செல்வார்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். உழைப்பின் பலனை அனுபவிக்கும் காலம். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வசதி, வாய்ப்புகள் பெருகும். இந்த வருடம் உங்கள் வாழ்வின் பொற்காலம். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். வியாபாரிகளே: 11/10/2018 வரை வியாபாரத்தில் சிறிது தடைகள் இருந்தாலும் படிப்படியான முன்னேற்றங்கள் காணப்படும். புதிய முயற்சிகள் கை கூடும். புதிய முதலீடுகளால் வியாபாரம் பெருகும். 11/10/2018 க்கு பிறகு வியாபாரம் பல மடங்கு பெருகும். பணியாளர்களால் நன்மை உண்டாகும். உங்கள் நிறுவனம் பிரபலமாகும். புதிய வாடிகையளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகஸ்தர்களே: 11/10/2018 இதுவரை இருந்த பிரச்சினைகள் அனைத்தும் குறையும். உங்களுக்கு பிரச்சினையாக இருந்த உயரதிகாரிகள் மாற்றம் அடைவார்கள். ரகசிய எதிரிகள் விலகி செல்வார்கள். 11/10/2018 க்கு பிறகு உத்தியோகத்தில் புகழ், பெருமை அதிகரிக்கும். உயரதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் சாதகமாவர்கள். பதவி உயர்வு, ஊதிய உயர்வு உண்டாகும். மாணவ மாணவியர்களே: 11/10/2018 இதுவரை இருந்த மனகுழப்பங்கள், தடைகள் நீங்கி மனம் தெளிவு பெறும். உடல் ஆரோக்கியம் பெறும். படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். நல்ல நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களால் ஆதாயம் உண்டாகும். 11/10/2018 க்கு பிறகு கல்வியில் பல சாதனைகள் படைப்பீர்கள். நல்ல மதிப்பெண் எடுப்பீர்கள். புகழ், பெருமை அதிகரிக்கும். அரசியல்வாதிகளே: 11/10/2018 வரை இதுவரை இருந்த பிரச்சினைகள் மற்றும் குழப்பங்கள் அனைத்தும் முடிவுக்கு வரும். தலைமையின் கடைக்கண் பார்வை உங்களுக்கு கிடைக்கும். மறைமுக எதிரிகளை கண்டுகொள்வீர்கள். 11/10/2018 க்கு பிறகு தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தலைமை உங்களிடம் சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். கலைத்துறையினரே: 11/10/2018 வரை கடந்த கால முயற்சிகளின் பலனை பெற முதல் அடி எடுத்து வைப்பீர்கள். நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள். புதிய வாய்ப்புகள் தேடிவரும். 11/10/2018 க்கு பிறகு உங்களின் முழு திறமையை வெளிப்படுத்தி சாதனை படைப்பீர்கள். புகழ், மரியாதை அதிகரிக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். பரிகாரம்:

  • ஏழை, எளியோர்க்கும், ஆலயங்களிலும் அன்னதானம் செய்தல்,
  • ஸ்ரீ துர்க்கை மற்றும் ராகு, கேது பகவானுக்கு ஹோமம், பூஜை மற்றும் ஆலயம் சென்று வழிபடுதல்.
  • ஸ்ரீ குருபகவானுக்கு ஹோமம், பூஜை செய்து வழிபடுதல்.
  • banner

    Leave a Reply

    Submit Comment
    • M. Hemalatha
      I want government job ninaithavarudan vaalkai
      January 16, 2019
      • Vinothkumar

        Namaste,

        Greetings from AstroVed.

        Please write to [email protected] so that we can check with our astrologer and provide you the required information.

        Thanks,
        Team AstroVed

        February 22, 2019