(மிருகசீரிடம் 3,4 ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ம் பாதம்)
எதிலும் சிந்தித்து சிறப்பாக செயல்படும் மிதுன ராசி அன்பர்களே, இந்த விளம்பி வருடப்பிறப்பு படி உங்கள் ராசி நாதன் புதன் தன, குடும்பாதிபதி சந்திரனுடன் பத்தில் இருப்பதால் உங்கள் அந்தஸ்து, செல்வாக்கு, புகழ் உயரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். பலவகையில் தனவரவு உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி, அசையும், அசையா சொத்து சேர்க்கை ஏற்படும். தாய் வழி ஆதரவு கிடைக்கும்.
குருபகவான் 11/10/2018 வரை உங்கள் ராசிக்கு 5 ல் இருப்பதால், குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டாகும். தெய்வ அனுகூலம் உண்டாகும். காதல் முயற்சிகள் வெற்றி பெறும். திருமண முயற்சிகள் கைகூடும். குழந்தை பாக்கியம் உண்டாகும். முத்தோர், பெரியோர் உதவி கிடைக்கும். புகழ், பெருமை அதிகரிக்கும். 11/10/2018 க்கு பிறகு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருளாதார பற்றாக்குறை காரணமாக கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். மற்றவரை பகைத்து கொள்ளும் சுழல் ஏற்படும் என்பதால் நிதானம், பொறுமை அவசியம்.
ராகு, கேது முறையே 6/3/2019 வரை 2,8 ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் குழப்பங்கள், பிரச்சினைகள் உருவாகும். பேச்சில் கவனம் தேவை. வீண் விவாதங்களில் ஈடுபட்டால் வம்பு வழக்குகள் உண்டாகும். இரவு நேர பயணங்களை, நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. பொருளாதார நெருக்கடி ஏற்படும். வீண்பழி, அவமானங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கை தேவை. பொறுமை மற்றும் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம்.
6/3/2019 க்கு பிறகு ராகு, கேது முறையே 1,7 க்கு வருவதால் வீண் மனக்கவலை, தீராத பிரச்சினைகள், மனக்குழப்பங்கள் உண்டாகும். உணவு விஷயங்களில் கவனம் தேவை. உடல் ஆரோக்கிய குறைவு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு வர வாய்ப்புள்ளதால், ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு விட்டு கொடுத்து சென்றால் இல்லறம் நல்லறமாக இனிக்கும். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளிடம் கவனமுடன் இருப்பது நல்லது.
சனி பகவான் வருடம் முழுவதும் 7 ல் கண்டகசனியாக சஞ்சரிப்பதால் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு வர வாய்ப்புள்ளதால், ஒருவரையொருவர் புரிந்து கொண்டு விட்டு கொடுத்து செல்வது நல்லது. நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளை முழுமையாக நம்பாமல் கவனமுடன் செயல்படுங்கள். கழுத்து, முதுகு தண்டு, நரம்பு மற்றும் காம உறுப்புகளில் பிரச்சினைகள் ஏற்படின் உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நலம். வீண் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். பொறுமை மிக அவசியமான காலம்.
வியாபாரிகளே:
11/10/2018 வரை வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வெற்றி பெறுவீர்கள். புதிய முதலீடுகளால் லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகள் மற்றும் பணியாளர்களால் ஆதாயம் உண்டு. 11/10/2018 க்கு பிறகு புதிய முதலீடுகளை தவிர்க்கவும். வாடிக்கையாளர்களை பொறுமையாகவும், இனிமையாகவும் கையாள்வது நல்லது.
உத்தியோகஸ்தர்களே:
11/10/2018 உத்தியோகத்தில் மதிப்பு மரியாதை உயரும். உயரதிகாரிகளிடம் பாராட்டினை பெறுவீர்கள். பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். உங்கள் உயரதிகாரி உங்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். 11/10/2018 உயரதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களால் பிரச்சினை உருவாக வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. சக ஊழியர்களிடம் வெளிப்படையாக பேசுவதை தவிர்க்கவும்.
மாணவ மாணவியர்களே:
11/10/2018 வரை படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைப்பீர்கள். நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பார்கள். 11/10/2018 க்கு பிறகு உடல் நலத்தில் கவனம் தேவை. நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களை அனுசரித்து செல்லுங்கள். பகைமை பாராட்ட வேண்டாம்.
அரசியல்வாதிகளே:
11/10/2018 தலைமையிடம் நெருக்கம் அதிகரிக்கும். தலைமை உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சகாக்கள் உறுதுணையாக இருப்பார்கள். மக்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும். 11/10/2018 சகாக்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள். தலைமையிடம் மனகசப்புகள் உருவாக வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.
கலைத்துறையினரே:
11/10/2018 தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். புகழ், பெருமை அதிகரித்து பிரபலமாவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். 11/10/2018 க்கு பிறகு யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம். புதிய வாய்ப்புகள் தாமதமாகும். பொறுமை அவசியம்.
பரிகாரம்:

Leave a Reply