(மகம், பூரம், உத்திரம் 1 ம் பாதம்)
ஆளுமை திறனும், அதிகார குணமும் மிக்க சிம்ம ராசி அன்பர்களே, இந்த விளம்பி வருடப்பிறப்பு படி உங்கள் ராசி நாதன் சூரியன் 9 ல் தைரிய, வீர்ய, கர்மாதிபதியுடன் இணைந்து இருப்பதால் செயலில் வேகம் அதிகரிக்கும். மனதில் தைரியம், உற்சாகம் அதிகரிக்கும். கர்மமே கண்ணாக செயல்பட்டு எதிலும் வெற்றி பெறுவீர்கள். புகழ் அந்தஸ்து மரியாதை உயரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அதீத நம்பிக்கையை தவிர்க்கவும்.
குருபகவான் 11/10/2018 வரை உங்கள் ராசிக்கு 3 ல் சஞ்சரிப்பதால் காரிய தடை, எதிர்காலம் பற்றிய கவலை, பயம் அதிகரிக்கும். விடா முயற்சி மற்றும் தன்னம்பிக்கையால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்பதை உணரும் காலம் ஆகும். 11/10/2018 க்கு பிறகு தடைகளும், பிரச்சினைகளும் காணப்பட்டாலும் விடா முயற்சியால் முன்னேற்றம் பெறுவீர்கள். வீண் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பதும், பொறுமையுடன் செயல்படுவதும் நல்லது. இரவு நேர பயணங்கள் மற்றும் நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது.
ராகு,கேது முறையே 6/3/2019 வரை 12,6 ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற வீண் செலவுகள் அதிகரிக்கும். உட்கார கூட நேரமில்லாமல் ஓட வேண்டியிருக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு பயணங்களால் நன்மை ஏற்படும். வெளிநாட்டில் வேலைவாய்ப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியம் ஏற்படும். எதிரிகள் விலகி செல்வார்கள். உழைப்பால் உயர்வு பெறும் காலம்.
6/3/2019 க்கு பிறகு ராகு, கேது முறையே 5,11 ல் வருவதால் பல வகையில் ஆதாயம் உண்டாகும். தன வரவு உண்டாகும். நீண்டகால முயற்சிகள் வெற்றி பெறும். பணம், பதவி, புகழ், செல்வாக்கு அதிகரிக்கும். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். குழந்தைகள் உடல் நலனில் கவனம் தேவை. குழந்தைகளை கண்காணிப்பில் வைத்து அன்புடன் அரவணைத்து செல்வது நல்லது. பூர்வீக சொத்து விஷயங்களில் தலையிட வேண்டாம்.
சனிபகவான் வருடம் முழுவதும் 5 ல் சஞ்சரிப்பதால் மன குழப்பம், மன கவலை அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை எடுக்க தடுமாற்றம் இருப்பதால் மனதை ஒருநிலை படுத்தி நன்கு சிந்தித்து செயல்படுவது நல்லது. குழந்தைகளை கண்காணிப்பில் வைத்து அன்புடன் அரவணைத்து செல்வது நல்லது. பூர்வீக சொத்து விஷயங்களில் தலையிட வேண்டாம். குல தெய்வ வழிபாடு மற்றும் மூதாதையர் செய்வது நல்லது.
வியாபாரிகளே:
வியாபாரத்தில் எதிலும் கவனம் தேவை. புதிய முதலீடுகளை தவிர்க்கவும். வாடிக்கையளர்களிடம் நாசுக்காக பழகுவது நல்லது. கூட்டாளிகளையும், பணியாளர்களையும் கண்காணிப்பில் வைத்து கொள்வதால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
உத்தியோகஸ்தர்களே:
உத்தியோகத்தில் உயரதிகாரிகள், சக ஊழியர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். அலுவலக ஆவணங்களை கையாள்வதில் கவனம் தேவை. விழிப்புணர்வுடனும், பொறுமையுடனும் செயல் பட்டால் எதிலும் வெற்றி பெறலாம்.
மாணவமாணவியர்களே:
படிப்பில் கவனம் தேவை, தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. அன்றைய பாடங்களை அன்றே படிப்பது நல்லது. ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களிடம் நல்ல உறவை மேம்படுத்தி கொள்வதால் நன்மை பெறலாம்.
அரசியல்வாதிகளே:
தலைமையிடம் கவனம் தேவை. தலைமை மற்றும் சகாக்களை முழுமையாக நம்பாதீர்கள். மக்களிடம் அனுசரனையாக நடந்து கொள்ளுங்கள். எதிரிகள் உங்கள் மீதான வீண் வதந்திகளை கிளப்பி விடுவார்கள். உங்கள் கடமையை சரியாகவும், கவனமாகவும் செய்தால் வெற்றி பெறலாம்.
கலைத்துறையினரே:
தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். புதிய வாய்ப்புகள் தாமதமாகும். பிரபலங்கள், சக கலைஞர்களிடம் அதிக உரிமை எடுத்து கொள்ள வேண்டாம். பொறுமையும், விழிப்புணர்வும் வெற்றி பெற மிக அவசியம்.
பரிகாரம்:
பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்கள், கல்விக்கு பண உதவி செய்வது நல்லது.
Tags: Puthandu Rasi Palan 2018 Puthandu Rasi Palan simma 2018 simma rasi Tamil Puthandu palangal 2018 simma rasi tamil Varusha Pirappu palangal 2018 Tamil New Year Rasi Palan 2018 simma Tamil Puthandu Palan simma 2018 to 2019 Tamil puthandu palangal 2018 to 2019 Tamil Varusha Pirappu 2018 Tamil Puthandu Palan Simha 2018 to 2019 Puthandu Rasi Palan Simha 2018 Tamil New Year Rasi Palan 2018 Simha Puthandu Rasi Palan 2018 Simha rasi tamil Varusha Pirappu palangal 2018 Tamil puthandu palangal 2018 to 2019 Simha rasi Tamil Puthandu palangal 2018 Tamil Varusha Pirappu 2018
Leave a Reply