Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
Search

விருச்சிகம் செப்டம்பர் மாத ராசி பலன் 2020 | September Matha Viruchigam Rasi Palan 2020

August 11, 2020 | Total Views : 577
Zoom In Zoom Out Print

விருச்சிகம் செப்டம்பர் மாத பொதுப்பலன்கள்:

விருச்சிக ராசி அன்பர்களே! இந்த மாதம், நல்லவை, அல்லாதவை என இரண்டும் கலந்த பலன்களை நீங்கள் எதிர்பார்க்கலாம். நீங்கள் மேற்கொள்ளும் செயல்கள் பலவற்றிலும், சிறு பிரச்சினைகளையும், தடங்கல்களையும் சந்திக்க நேரிடலாம். இருப்பினும் இறுதி வெற்றி உங்களுடையதாகவே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிறு உடல் நிலை பாதிப்பு எனினும், சுய மருத்துவம் பார்க்காமல், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. யாரிடமும், எந்தக் காரணம் கொண்டும் விரோதம் பாராட்ட வேண்டாம். உங்கள் பொருளாதார நிலை நிறைவு தரும். கணவன் மனைவிடையே ஏதேனும் மனக்கசப்பு தோன்றினாலும், பொதுவாக, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சகோதர சகோதரிகளிடம் முரண்பாடு ஏற்பட்டாலும், அவர்களால் ஆதாயம் உண்டு. சில நேரங்களில் உங்களுக்கு மனச் சோர்வு வந்து நீங்கக்கூடும். ஆனால், தன வரவு உண்டு. வேலை மற்றும் தொழிலில் உங்கள் தனித்திறன் வெளிப்படும். சிலர், பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றையும் எதிர்பார்க்கலாம். ஜோதிடம், ராசி பலன், நட்சத்திர பலன், இன்றைய பஞ்சாங்கம், வார ராசி பலன்கள், வருடாந்திர ராசி பலன்கள், பரிகாரங்கள் பற்றி மேலும் அறிய எங்கள் வலைத்தளம் வாருங்கள்.  

காதல் மற்றும் திருமண வாழ்க்கை:

காதல் விவகாரங்களில் கவனம் தேவை. புதிய காதல் முயற்சிகளைத் தவிர்ப்பதும் நல்லது. திருமண வாழ்க்கையில் சிறு கருத்து வேறுபாடுகள் எழுந்தாலும், பொருளாதார ரீதியில், குடும்பம், மேன்மையடையும். வாழ்க்கைத் துணை வழியில் தன வரவும் ஏற்படலாம். இந்த நேரத்தில், குடும்ப விவகாரங்களை நாசூக்காகக் கையாள்வது நல்லது.

நிதி:

உங்கள் பொருளாதார நிலையில், மாத முற்பகுதியில் தட்டுப்பாடு இருந்தாலும், பிற் பகுதியில் நல்ல முன்னேற்றம் ஏற்படக்கூடும். உங்கள் குடும்ப முன்னேற்றதிற்காகவும், பொருளாதார தன்னிறைவுக்காகவும், தேவையான முயற்சிகளை நீங்கள் மேற் கொள்வீர்கள். புதிய அணுகுமுறைகளையும் செயல் படுத்துவீர்கள். இதனால் நிதிநிலை மேம்படக்கூடும். சேமிப்பும் அதிகரிக்கலாம்.

வேலை:

இந்த மாதம் நீங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்துவீர்கள். உங்கள் தனித் திறமையை முழுமையாக பயன்படுத்திப் புகழ் பெறுவீர்கள். உயரதிகாரிகளும், சக ஊழியர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இருப்பினும் மறைமுக எதிர்ப்புகளால், நீங்கள் சில பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். 

தொழில்:

இந்த மாதம் தொழிலில் உங்கள் கை ஓங்கக்கூடும். உங்கள் செயல் திறனாலும், புதிய அணுகுமுறையாலும், செயற்கரிய செயல்களைச் செய்து, நீங்கள் சாதனையும் படைக்கக்கூடும். இதனால் உங்கள் புகழ், அந்தஸ்து, செல்வாக்கு போன்றவை உயரக்கூடும். உயரதிகாரிகளின் நம்பிக்கைக்கும் நீங்கள் பாத்திரமாவீர்கள். உங்களை நம்பி, அவர்கள், புதிய பொறுப்புக்களையும் ஒப்படைக்கலாம். 

தொழில் வல்லுநர்கள்:

விருச்சிக ராசி தொழில் வல்லுநர்களுக்கு, இது மிகவும் சாதகமான காலம் எனலாம். இப்பொழுது உங்கள் திறமையை முழுமையாகப் பயன்படுத்தி நீங்கள் நன்கு முன்னேறக்கூடும். உங்கள் பணியில் தனி முத்திரையும் பதிக்கலாம். மற்றவர்களால் ‘முடியாது’ என்று கைவிடபட்ட சில செயல்களையும், இந்த நேரத்தில் உங்களால் எளிதாகச் செய்ய இயலும் எனலாம். 

ஆரோக்கியம்:

இந்தக் காலகட்டத்தில் உங்களுக்கு அடிக்கடி ஆரோக்கிய குறைபாடு ஏற்படலாம். உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கக்கூடும். உங்களுக்கு எந்த வித உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டாலும், சுய மருத்துவம் பார்ப்பதைத் தவிர்த்து, உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. வீணான கோபத்தைத் தவிர்ப்பதால், அதனால் ஏற்படும் உடல் பாதிப்புக்களையும் நீங்கள் தவிர்த்து விடலாம். 

மாணவர்கள்:

மாணவர்களுக்குப் படிப்பில் கவனக்குறைவு ஏற்படலாம். பாடங்களைத் தள்ளிப் போடாமல், அவற்றை உடனடியாகப் படிப்பது நல்லது. உங்கள் உடல் ஆரோக்கியம் உங்கள் கல்வியைப் பாதிக்காமல் பார்த்து கொள்வதும் அவசியம். எனினும், இப்பொழுது உங்களுக்கு, ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஆதரவு உண்டு. மேலும் யோகா, தியானம் பயில்வது கல்வியில் சிறந்து விளங்க உறுதுணையாக இருக்கும்.

சுப தினங்கள் :  2,4,5,6,7,14,15,19,21,22,23,26,27,28,29
அசுப தினங்கள் : 3,6,10,11, 12, 13,16, 17, 18, 20, 24, 25,30    

பரிகாரம்:

  • ஸ்ரீ முருக பெருமான் மற்றும் ஸ்ரீ ஆதிசேஷன் வழிபாடு, பூஜை மற்றும் ஆலயங்கள் சென்று வழிபடுதல்.
  • செவ்வாய், சனி, குரு, ராகு, கேது கிரக மூர்த்திகளுக்குப் பூஜை மற்றும் ஹோமம் செய்து வழிபடுதல்.
  • முருகப் பெருமான் ஆலயத்தில் சர்க்கரை பொங்கல் தானம் செய்தல். பாம்புப் புற்றுக்குப் பால் வார்த்தல்.
banner

Leave a Reply

Submit Comment